இதுவரை சண்டையிட்டவைகளில் மிகப்பெரிய யுத்தம் Jeffersonville, Indiana, USA 62-03-11 1. நன்றி சகோ. ஆர்மன். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. காலை வணக்கம், நண்பர்களே. மீண்டும் இன்று காலை இங்குள்ளதற்கு மகிழ்ச்சியடைகிறேன். இது எனக்கே எதிர்பாராத ஒன்று என்று நினைக்கிறேன், சபையோருக்கும் அது அப்படித்தான் என்று நிச்சயம் அறிவேன். நான் படித்துக்கொண்டி ருந்தபோது (நன்றி, சகோதரி) சபைக்கு அளிப்பதற்கென கர்த்தர் சிறிய ஒன்றை என் இருதயத்தில்அருளினார். அதற்கான நேரம் வந்து விட்டது என்று எண்ணினேன். நான் இங்கு வந்து சேர்ந்த போது, இந்த ஞாயிறு இங்கிருப்பேன் என்று அறியாதவனாய், சபைக்கு அளிக்க ஒரு செய்தியை வைத்திருக்கிறேன் என்று அறிவித்தேன். கர்த்தருக்குச் சித்தமானால், அடுத்த ஞாயிறன்று அச்செய்தியை அளிக்க விரும்புகிறேன். அது அதிக நேரம்பிடிக்கும்; 12.30 அல்லது 1 மணிக்கு முன்பு முடியாது. என் இருதயத்தில் அநேக நாட்களாக ஒரு எண்ணம் குடி கொண்டுள்ளது. நான் ஏன் சுவிசேஷ ஊழியத்தில் தீவிரமாக இல்லை என்பதைக் குறித்து பொது ஜனங்களுக்கு பதிலளிக்க கடமைப்பட்டுள்ளேன். இதைக் குறித்த எல்லாவிடங்களிலும் பிரசங்கித்தி ருக்கிறேன். ஆனால் அது அளிக்கப்பட வேண்டிய இடத்தில் அளிக்கப்படவில்லை. எனவே, கர்த்தருக்குச் சித்தமானால், அடுத்த ஞாயிறன்று என் நேரத்தை எடுத்துக் கொண்டு, அதற்கான காரணத்தை எடுத்துக் காண்பித்து, என்ன நடந்து கொண்டிருக்கிற தென்று வேதப் பிரகாரமாக உங்களுக்கு அறிவிக்க விரும்புகிறேன். பாருங்கள்? அதெல்லாம் என்னவென்று. ஏனெனில் உடனடியாக நான் ஒருக்கால் வெளிநாடு களுக்கோ அல்லது வேறெங்காகிலும் செல்ல வேண்டியிருக்கும். அவர் என்னை எங்கு அனுப்புவாரென்று அறிய நான் காத்துக்கொண்டிருக்கிறேன். 2 2.மூன்று இரவுகளுக்கு அல்லது இரண்டு இரவுகளுக்கு முன்பு, நள்ளிரவில் எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது -அது ஆஸ்பத்திரியிலுள்ள ஒரு ஸ்திரீக்காக ஜெபம் செய்யவேண்டுமென்று. அவர்கள் என்னை தொலைபேசியில் அழைத்து ஜெபிக்கக் கூறினார்கள். அந்த ஸ்திரீயின் பெயரை மறந்துவிட்டேன். அவர்கள் நமது சபையிலுள்ள சகோதரி திருமதி ஜேம்ஸ் பெல் அவர்களுக்கு சிநேகிதி என்றனர். சகோதரி பெல் கறுப்பு சகோதரி, மிகவும் உத்தமமும் அருமையுமானவர்கள். அவர்கள் என்னிடம் கூறின பெயர் ஷெப்பர்ட் என்று நினைக்கிறேன். எனவே நான் படுக்கையை விட்டு எழுந்து முழங்கால் படியிட்டு, என் மனைவியிடம் (தொலைபேசி மணி அவளை உறக்கத்தி னின்று எழுப்பினது), 'நாம் திருமதி ஜேம்ஸ் பெல்லின் சிநேகிதி திருமதி ஷெப்பர்டுக்காக ஜெபம் செய்யவேண்டும்'' என்றேன். 3 எனவே நாங்கள் அவர்களுக்காக ஜெபம் செய்து படுக்கைக்கு சென்றோம். அடுத்த நாள் பத்து அல்லது பதினொன்று மணியளவில் எங்களுக்கு மறுபடியும் தொலைபேசி அழைப்பு வந்தது. அது பில்லி, அவன், அது திருமதி ஷெப்பர்ட் அல்லவென்றும், அது திருமதி பெல் அவர்களே என்றும் கூறினான் - திருமதி பெல்லின் சிநேகிதி அல்ல, திருமதி. பெல்லே மோசமான நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவித்தான். நாங்கள் ஆஸ்பத்திரிக்கு விரைந்தோம். ஆனால் அவர்கள் காலமாகிவிட்டார்கள். கர்த்தர் திருமதி.பெல்லை வீட்டுக்கு அழைத்துக் கொண்டார். 4 சகோதரி பெல் அநேக ஆண்டுகளாக எங்களுடன் சபையில் மிகவும் விசுவாசத்துடன் தானியத்தை சேர்ப்பவர்களாயிருந்தார்கள். அவர்களு டைய கணவர் ஜேம்ஸம் நானும் என் தந்தையுடன் அநேக ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாக பணிபுரிந்தோம். நாங்கள் பென்சில்வேனியாவிலிருந்து கோல் கேட்டுக்கு குச்சிகள் கொண்டு வருவது வழக்கம். அது முப்பது அல்லது அதற்கும் அதிகமான ஆண்டுகளுக்கு முன்பு என்று நினைக்கிறேன். நாங்கள் சகோதரி பெல்லை நேசிக்கிறோம். அவர்கள் மிகவும் நல்லவர்கள். 5 அவர்களுக்கு பித்தப்பை கோளாறு இருந்ததாம். அவர்களுடைய உடல் நிலையை நன்கு அறிந்திருந்த மருத்துவர் அந்நேரத்தில் அங்கு இல்லை. ஒரு புதிய மருத்துவர் அவர்களைப் பரிசோதித்து விட்டு, அவசர அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்று ஆலோசனை கூறினாராம். அவர்கள் அறுவை சிகிச்சையிலிருந்து மீளவில்லை. அவர்களை எப்பொழுதும் கவனிக்கும் மருத்துவர் இருந்திருந்தால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்று ஆலோசனை கூறியிருக்கமாட்டார். ஏனெனில் அவர்கள் பருமனான உடல் கொண்டவர்கள். அவர்களுடைய பித்தப்பை மிகவும் மோசமான நிலையிலிருந்தது. அதில் கற்கள் அல்லது வேறெதாகிலும் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன் கர்த்தர் இரக்கமாயிருந்தார். இதற்கு முன்பு அவர்களுக்கு அநேகமுறை பித் தப்பை தாக்குதல்கள் ஏற்பட்டுள்ளது. ஆனால் கர்த்தர் அவர்களைப் பாதுகாத்து வந்தார். ஆனால் இப்பொழுதோ...... எல்லாவற்றை யும் முழுவதுமாக அளந்து நோக்குவோமா னால், சகோதரி. பெல்லை கர்த்தர் அழைத்துக் கொண்டார். இந்த விதமாகத் தான் அவர்கள் போக வேண்டியிருந்தது என்று நாம் கூறலாம். பார்த்தீர்களா? 6 அது எப்படியோ தவறிப்போனது. அது எனக்கு அறிவிக்கப்பட்டபோது அது திருமதி - குமாரி ஷெப்பர்ட் என்று நினைத்தேன். எனக்கு குமாரி ஷெப்பர்ட்டை தெரியாது. ஒருக்கால் அவர்கள் இன்று காலை இங்கிருக்கலாம். அவர்களுடைய முகத்தைப் பார்த்தால், அவர்கள் யாரென்று எனக்குத் தெரியலாம். ஆனால் அது திருமதி ஷெப்பர்ட் என்று கூறப்பட்டது. அது திருமதி பெல் என்றும், அவர்கள் மோசமான நிலையில் இருக்கிறார்கள் என்றும் அறிந்திருந்தால், நான் உடனே அவர்களுக்காக மன்றாடியிருப்பேன். அதை நாம் செய்ய கர்த்தர் விரும்பவில்லை போலும். எனவே, தேவனிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்கு சகலமும்நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம். சகோதரி பெல் கர்த்தரை நேசித்தார்கள் என்று நான் உறுதியாக அறிவேன்; அவர்கள் நல்லவர்கள். 7 அவர்கள் நம்மில் ஒருவர். இங்கு நிற வேறுபாடு எதுவும் இல்லை. தேவனுடைய குடும்பத்தில் நிற அடிப்படையில் வேறுபாடு எதுவும் கிடையாது. நாம் சிகப்பு, பழுப்பு, கறுப்பு, மஞ்சள், வெள்ளை நிறத்தவர் எதுவாயிருப்பினும் பரவாயில்லை. நாம் அனைவருமே கிறிஸ்துவுக்குள் சகோதரரும் சகோதரிகளுமாயிருக்கிறோம். எனவே, சகோதரி பெல்லை நாம் நேசிக்கிறோம். இந்த கூடாரத்தில் இனி அவர்களைக் காண மாட்டோம். சகோதரி பெல் கரகரப்பான தொண்டையில் 'ஆமென்' என்று அந்த மூலையிலிருந்து கூறுவதை நான் இனி கேட்கமாட்டேன். அவர்கள் வீட்டிற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்கள். அங்கு கர்த்தராகிய இயேசுவைக் குறித்து பேசுவார்கள். நான் சரியாக புரிந்து கொண்டேன் என்றால் (சில நிமிடங்களுக்கு முன்பு வரை அதை நான் அறியவில்லை) அவர்களுடைய சவ அடக்கம் இந்த சபையில், வரும் செவ்வாய்க்கிழமையன்று 1 மணிக்கு நடை பெறும். நானும் நீங்களும் அடக்க ஆராத னையை நடத்த வேண்டுமென்று நினைக்கி றேன். (சகோ. பிரன்ஹாம் சகோ.நெவிலுடன் பேசுகிறார் - ஆசி). 8 நமது சபையின் எண்ணிக்கை, இன்று காலை நமது சகோதரி பெல்லின் காரணமாக ஒன்று குறைந்துவிட்டது. இப்பொழுது நாம் சற்று நேரம் நின்று தலை வணங்குவோம். ஜீவனுக்கெல்லாம் தேவனே, ஜீவனைக் கொடுப்பவரே, அதை எடுத்துக்கொள்பவரே, பழைய காலத்து யோபு கூறின் விதமாக, ''கர்த்தர் கொடுத்தார். கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம். சில ஆண்டுகளுக்கு முன்பு தேவனுடைய காணியாட்சியில் எங்களுடன் ஒரு குடிமகளாக இருக்க நீர் சகோதரி பெல்லை அனுப்பினீர். எங்கள் முன்னிலையில் அவர்கள் காண்பித்த ஒவ்வொரு ஊக்கத்திற் காகவும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகி றோம். அவர்கள் பாடுவதிலும், சாட்சி கொடுப்பதிலும் எவ்வளவாக ஊக்கம் கொண்டார்கள்! அவர்கள் ஆவியில் நிறைந்து ஆர்ப்பரிப்பார்கள். இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து அவர்கள் வெட்கப்படவேயில்லை. அது அவர்களுக்கு இரட்சிப்புக்கேற்ற தேவ பெலனாயிருந்தது. அவர்களுடைய ஆண்டுகள் கணக்கிடப்பட்டு முடிந்து விட்டது. நாங்களும் எங்கள் அழைப்புக்கு பதில் கூற வேண்டிய சமயம் வரும் என்று அறிந்திருக்கிறோம். அவர்களை எங்கள் மத்தியிலிருந்து உமது சமுகத்துக்கு எடுத்துக்கொண்டீர். நாங்கள் இவ்விடம் விட்டுச்செல்லும் போது, உண்மையாகவே தேவனுடைய சமுகத்தை அடைகிறோம். 9 ஓ, தேவனே, எல்லோருக்காகவும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். என் நண்பரும் அவர்களுடைய கணவருமாகிய ஜேம்ஸையும், அவர்களு டைய மகனையும், மகள்களையும், அவர்கள் உறவினரையும் ஆசீர்வதிக்குமாறு ஜெபிக்கிறோம். இராணுவத்திலுள்ள அவர்களுடைய மகன் ஜெர்மனியிலிருந்து விமானம் மூலம் இங்கு வந்து, பிரிந்து சென்ற அவனுடைய தாய்க்கு இறுதி மரியாதை செலுத்துவான் என்று நாங்கள் கேள்விப்படுகிறோம். அந்த வாலிபனுடைய இருதயம் இன்று காலை எவ்வளவாக துடித்துக்கொண்டிருக்கும்! ஆண்டவரே, அவனுக்காக ஜெபிக்கிறேன். தேவனே, அவனை ஆசீர்வதியும். ஜிம்மியை ஆசீர்வதியும். அவன் தன் குடும்பத்தின் ஜீவனத்துக்காக எவ்வளவு கடினமாக உழைப்பதை நாங்கள் கண்டிருக்கிறோம்! அந்த பெரிய குடும்பம் பிரிந்துவிடாமல், அந்தக் குடும்பச் சக்கரம் மறுபுறமும் உடை யாமல் அப்படியே இருக்க வேண்டுமென்று ஜெபிக்கிறேன். ஆண்டவரே, நாங்கள் எங்கள் கவசங்களையும் கச்சைகளையும் இறுகக் கட்டினவர்களாய், ஒரு வாரத்துக்கு முன்பிருந்த எங்கள் எண்ணிக்கையில் ஒன்று குறைந்தவர்களாய், நாங்கள் யுத்தத்திற்கு செல்ல அருள் புரியும். நாங்கள் முன் செல்லும்போது, எங்களை நீர் காப்பாற்றி, பெலப்படுத்தி, எங்களுக்கு உதவி செய்வீராக, இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 10 பிரிந்து சென்ற சகோதரியின் ஆத்துமா சமாதானத்துடன் இளைப்பாறுவதாக! அவர்களுடைய அடக்க செய்தி ஞாயிறன்று - இல்லை செவ்வாயன்று இங்கு பிரசங்கிக்கப்படும் என்று அறிவிக்க விரும்புகிறேன். வரக்கூடிய யாவரையும் அழைக்கிறோம். சகோ. நெவில் ஒழுங்குக ளின் பட்டியலை வைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன்....... உங்களிடம் இருக்கி றதா? (சகோ. பிரன்ஹாம் சகோ. நெவில்லுடன் பேசுகின்றார்- ஆசி). 11 இப்பொழுது, இன்று நான் ... அநேகர் இல்லை , சகோதரன், சகோதரி ஸ்லாட்டருக்கு இருக்கைகள் கொண்டு வந்து தரப்பட்டால்....... சகோதரி ஸ்லாட்டர், நீங்கள் தொலைபேசியின் மூலம் கொடுத்த செய்தி எனக்குக் கிடைத்தது. நான் மற்ற சகோதரி ஸ்லாட்டருக்காக - சகோதரி ஜீன் ஸ்லாட்டருக்காக ஜெபிக்க உடனே சென்றேன். அவர்களுக்குள்ள முயல்வியாதி டுலரீமியா (tularemia) மிகவும் மோசமானது. அவர்கள் சுகமாகிவிடுவார்கள் என்று நாம் தேவனை விசுவாசிக்கிறோம். 12 இப்பொழுது வேதவாக்கியங்களைப் படிக்க விரும்புகிறேன். இன்று காலை , என் நேரத்தை எடுத்துக்கொண்டு, உங்களுக்கு கற்பிக்க விரும்புகிறேன். நான் அரிசோனாவிலிருந்து வந்த முதற்கு என் தொண்டை புண்ணாயுள்ளது. அடுத்த ஞாயிறு மறக்க வேண்டாம். பில்லி விளம்பரங்களை ஏற்கனவே தபாலில் அனுப்பிவிட்டான் என்று நினைக்கிறேன். அது நீண்ட ஆராதனையாயிருக்கும். எனவே நேரத்தோடு வாருங்கள். நாங்கள் 9.30 மணிக்கு தொடங்க விரும்புகிறோம் - 10 மணியளவில். அது 1 மணிக்கு 12.30 அல்லது 1.00 மணிக்கு முடிவுபெறும். மூன்று அல்லது நான்கு மணி நேரம் அல்லது அதற்கும் அதிகமாக . நான் வேதவாக்கியங்களை எடுத்து உங்களுக்கு முன்பாக வைக்க விரும்புகிறேன் (பென்சிலையும் காகிதத்தா ளையும் கொண்டு வாருங்கள்). உங்களுக்கு கேள்விகள் இருக்குமானால், கேளுங்கள். நாங்கள் அதற்கு விளக்கம் கூறமுயல் வோம். உங்களுக்குதவி செய்ய நாங்கள் முனைவோம். 13 முதலாவதாக சில வேதவாக்கியங்களைப் படிப்போம். வேதாகமத்தில் மூன்று இடங்களிலிருந்து படிக்க விரும்புகிறேன். முதலில் (குறித்துக்கொள்ள விரும்பினால், பென்சில் இருந்தால் குறித்துக் கொள்ளவும்) - நான் அநேக பொருள்களை - இல்லை, அநேக வேதவாக்கியங்களை குறிப்பிட விரும்பு கிறேன். முதலாவதாக, 1பேதுரு 5:8-10, பிறகு எபேசியர் 6:10-17, தானியேல் 12:1-14. 14 நாம் நேரத்தை எடுத்துக்கொண்டு இவைகளைப் படிப்போம். (அதிகபட்சம் எல்லோருமே உட்கார்ந்து கொண்டிருக் கின்றனர் - ஒரு சிலர் மாத்திரமே பின்பக்கத்திலும் பக்கங்களிலும் நின்று கொண்டிருக்கின்றனர். நாங்கள் கூடுமானவரை துரிதமாக முடித்துவிட்டு, உங்களை அனுப்பிவிடுவோம். பிறகு நாங்கள் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கப் போகிறோம். மிகவும் வியாதிப்பட்டுள்ள ஒரு சிறு சீமாட்டி இங்கிருக்கிறாள். நேற்று அவள் மிகவும் வியாதிப்பட்டிருந்ததாக கேள்விப் பட்டேன். அவளுக்கு நான் ஜெபிப்பதற்கு முன்பாக, இன்று காலை அவள் செய்தியைக் கேட்க வேண்டுமென்று எண்ணினேன். அந்த சீமாட்டியின் நிலை எனக்குத் தெரியும். அவள் மிகவும் வியாதிப்பட்டிருக்கிறாள். ஆனால் வியாதி யின் மேல் வெற்றி சிறந்த மகத்தான பரலோகப் பிதா ஒருவர் நமக்குண்டு. 15 ஒரு சிறு கட்டுரை உள்ளது. அதை எல்லோரும் கேட்க திருமதி. உட் அதை படிப்பார்களா என்று கேட்டேன். அவர்கள் அப்படி செய்ய சிறிது மனமில்லாதவர்களா யிருக்கிறார்கள். அந்த கட்டுரையில், தெய்வீக சுகமளித்தலைக் கண்டனம் செய்த மருத்துவர் ஒருவர் - அதைக் குறித்து அவருடைய அலுவலகத்தில் யாரும் பேசுவதற்கு கூட அவர் அனுமதிக்க மாட்டார்; அவருடைய நர்ஸ் உட்பட. ஒருநாள் புற்றுநோய் கொண்ட ஒரு நோயாளி சிகிச்சைக்காக அவரிடம் வந்தாள். அவர் அதனுடன் எவ்வித தொடர்பும் கொள்ள விரும்பாமல், அவளை வேறொரு மருத்துவ சாலைக்கு அனுப்பினார். அவர்களும் எவ்வித தொடர்பும் கொள்ள விரும்பவில்லை. அவளை வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். 16 அது மார்பில் இருந்தது. அது மிகவும் மோசமான நிலையையடைந்தது. தோல் தின்னப்பட்டு, புற்றுநோய் மார்பை அடைந்து, எலும்புக்குள் சென்றிருந்தது. நான் என்ன கூறுகிறேன் என்று உங்களுக்குப் புரிகிறது என்று நம்புகிறேன். நார்வேயிலிருந்து வந்துள்ள நமது மருத்துவர் நண்பர் இன்று காலை நம்முடன் அமர்ந்திருக்கிறார். அவள் அறுவை சிகிச்சை யின் மூலம் தன் மார்பை எடுத்து விடும்படி கேட்டுக்கொண்டபடியால், மருத்துவர் அதற்கான ஆயுதங்கள் அனைத்தையும் தயார் செய்தார். அறுவை சிகிச்சையின் போது இரத்தம் அதிகமாக வெளிவரும். எனவே கட்டுபோடுவதற்கான எல்லாவற்றையுமே அவர் ஆயத்தம் செய்தார். நர்ஸும் அந்த ஸ்திரீயை ஆயத்தம் செய்து, அறுவை சிகிச்சை அறைக்கு கொண்டு வந்து விட்டு, மருத்துவரும் அவருடைய உதவியாளரும் உபயோகிக்க வேண்டிய ஆயுதங்களைக் கொண்டுவரச் சென்றனர். அங்கு துவாலைகளும் மற்றவைகளும் இருந்தன. அவர்கள் அறுவை சிகிச்சை தொடங்கப்போனார்கள். அவர் ஆரம்பிபோது.... 17 அவளுடைய கணவர், அந்த அறையின் மூலையில் உட்கார்ந்து ஜெபம் செய்ய அனுமதி கேட்டார். அவர் பரிசுத்தம் பிரசங்கியார்' (holiness Preacher). அவர் படுக்கையின் கால் பாகத்தில் உட்கார்ந்து கொண்டு ஜெபம் செய்யத் தொடங்கினார். அது மருத்துவருக்குப் பிடிக்கவில்லை. அவர் அவரைப் பார்க்காதவரையில், அது அவரைத் தொந்தரவு செய்யாது என்று எண்ணின்வராய், 'சரியென்று ஒப்புக்கொண்டார். அவர் மயக்க முற்றுவிழாமல் இருக்க வேண்டும். 18 அவர் அங்கு உட்கார்ந்து கொண்டு ஜெபம் செய்து கொண்டிருந்தபோது, அறையில் பரபரப்பு ஏற்பட்டது. மார்பை அறுத்து எடுப்பதற்காக மருத்துவர் ஆயுதங்களுடன் வந்தார். அவர் கட்டை ஒவ்வொன்றாக அவிழ்த்தபோது, மார்பில் ஒரு தழும்புகூட இல்லை - ஒரு தழும்புகூட இல்லை! அவர்,''அது மறைந்து விட்டதா?'' என்றார்....... நர்ஸ் அவளுடைய சாட்சியைக் கூறினாள். இருவரும் சென்று பெந்தெகொஸ்தேயின ராக மாறி, பரிசுத்த ஆவியினால் நிறைந்து, கர்த்தரை சேவித்து வருகின்றனர். 19 ஒரு தழும்புகூட இல்லை! டாக்டர் ஹால் ப்ரூக் என்பவரே இதைக் குறித்து சாட்சி கொடுத்தார். அவர், ''அதற்கு ஒரு நிமிடம் முன்புதான், அந்த ஸ்திரீ அங்கு படுத்துக் கொண்டிருந்தாள். நர்ஸ் அங்கிருந்தாள். அந்த பயங்கர புற்றுநோய் மார்பை பாதித்து வெளியே தள்ளி நின்றது. ஒரு நிமிடம் கழித்து கட்டை அவிழ்த்து பார்த்தபோது, ஒரு சிறு தழும்புகூட இல்லை'' என்றார். அவர் அமெரிக்காவில் மிகச் சிறந்த மருத்துவர்களில் ஒருவர். அப்பொழுதே அவருக்கு உறுதியான நம்பிக்கை பிறந்ததாக அவர் கூறினார். ஆயினும் அதற்கு முன்பு அவர் ஒரு சபையின் மூப்பராக இருந்தார். பாருங்கள்? நாம் நல்லவர்களாக இருக்கக் கற்றுக்கொள்ள சபைக்குச் செல்வதாக ஜனங்கள் கருதுகின்றனர். நண்பனே, அதுவல்ல. அவர் முன்பிருந்தது போலவே எப்பொழுதும் மகத்தானவராக இருக்கிறார், அவர் எக்காலத்தும் அப்படியே இருப்பார். அவர்.... அவரை நாம் நேசிக்கிறோம். 20 இப்பொழுது 1 பேதுரு 5ம் அதிகாரம், 8முதல் 10 வசனங்களைப் படிப்போம் : தெளிந்த புத்தியுள்ளவர்களா யிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம் போல் எவனை விழுங்கலாமோ என்று வகை தேடிச் சுற்றித் திரிகிறான். விசுவாசத்தில் உறுதியா யிருந்து, அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்; உலகத்திலுள்ள உங்கள் சகோதரரிடத்திலே அப்படிப்பட்ட பாடுகள் நிறைவேறி வருகிறதென்று அறிந்திருக்கி றீர்களே. கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராயிருக்கிற சகல கிருபையும் பொருந்திய தேவன் தாமே கொஞ்சக் காலம் பாடபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலை நிறுத்துவாராக. 21 தேவன் எவ்வளவாக ஸ்தோத்தரிக்கப் பட வேண்டியவர்! இப்பொழுது எபேசியர் நிருபம் ....... இப்பொழுது எபேசியர் நிருபம். 6ம் அதிகாரத்திற்கு திருப்பி, 10 முதல் 17 வசனங்களை வாசிக்க விரும்புகிறோம். இவைகளைக் குறித்து வைத்திருக்கிறேன். கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள். நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத் தையும் தரித்துக்கொள்ளுங்கள். ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வான மண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. ஆகையால், தீங்கு நாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்து முடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள். சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர் களாயும், நீதியென்னும் மார்க்கவசத்தைத் தரித்தவர்க ளாயும், சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்தவர்க ளாயும், பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக் கொண்டவர்களாயும் நில்லுங்கள். இரட்சணியமென்னும் தலைச் சீராவையும், தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள். 22 இப்பொழுது தானியேலின் புத்தகத் திற்கு செல்வோம். இன்னும் வாசிக்க விரும்புகிறேன். இப்பொழுது தானியேல் 12ம் அதிகாரம், முதலாம் வசனம் தொடங்கி நீண்ட பாகமாக பதினான்காம் வசனம் வரைக்கும் வாசிக்க விரும்புகிறேன். உன் ஜனத்தின் புத்திரருக்காக நிற்கிற பெரியஅதிபதியாகிய மிகாவேல் அக்காலத்திலே எழும்புவான்; யாதொரு ஜாதியாரும் தோன்றினது முதல் அக்காலமட்டும் உண்டாயிராத ஆபத்துக் காலம்வரும்; அக்காலத்திலே புஸ்தகத்தில் எழுதியிருக்கிறவர்களாகக் காணப்படுகிற உன் ஜனங்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள். பூமியின் தூளிலே நித்திரை பண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்திய ஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள். ஞானவான்கள் ஆகாய மண்டலத்தின் ஒளியைப் போலவும், அநேகரை நீதிக்கு ட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்க ளைப்போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள். தானியேலாகிய நீயோவென்றால், முடிவுகாலமட்டும் இந்த வார்த்தைகளைப்புதை பொருளாக வைத்து வைத்து, இந்தப் புஸ்தகத்தை முத்திரைபோடு; அப்பொழுது அநேகர் இங்கும் அங்கும் ஓடி ஆராய்வார்கள், அறிவும் பெருகிப்போம் என்றான். அப்பொழுது , தானியேலாகிய நான் ஆற்றுக்கு இக்கரையில் ஒருவனும் ஆற்றுக்கு அக்கரையில் ஒருவனுமாகிய வேறே இரண்டு பேர் நிற்கக்கண்டேன். சணல் வஸ்திரம் தரித்தவரும், ஆற்றின் தண்ணீர்களின் மேல் நிற்கிறவருமாகிய புருஷனை ஒருவன் நோக்கி: இந்த ஆச்சரியமானவைகளின் முடிவு வர எவ்வளவு காலம் செல்லும்என்று கேட்டான். அப்பொழுது சணல் வஸ்திரம் தரித்தவரும் ஆற்றின் தண்ணீர்களின் மேல் நிற்கிறவருமாகிய புருஷன் தம்முடைய வலது கரத்தையும் தம்முடைய இடது கரத்தையும் வானத்துக்கு நேராக ஏறெடுத்து, ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமும் செல்லும் என்றும்; பரிசுத்த ஜனங்களின் வல்லமையைச் சிதறடித்தல் முடிவு பெறும்போதே இவைகளெல் லாம் நிறைவேறித்தீருமென்றும் என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவர் பேரில் ஆணையிடக் கேட்டேன் இங்கு நிறுத்திக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன். 23 இதிலிருந்து, இதுவரை சண்டையிட் டவைகளில் மிகப்பெரிய யுத்தம்' என்னும் பொருளை (அதை பொருள் என்று அழைக்கக் கூடுமானால்) தெரிந்து கொள்ள விரும்புகிறேன். அதையே பொருளாக உபயோகிக்க எண்ணுகிறேன். 24 அதை இன்று காலைக்கான பொருளாக எப்படி தெரிந்துகொண்டேன் என்றால், நானும் சபையின் இரண்டு தர்மகர்த்தாக்க ளும் அரிசோனாவுக்கு சென்று இப்பொழுது தான் திரும்பி வந்தோம். உண்மையாக நாங்கள் பீனிக்ஸிலுள்ள சகோ. ஷரியட்டின் கூடாரத்தில் கூட்டங்கள் நடத்த சென்றிருந்தோம். ஆனால் ஏற்கனவே ஒரு சகோதரன் ஒரு கூடாரத்தில் அங்கு கூட்டம் நடத்திக் கொண்டிருப்பதைக் கண்டதும், எனக்கு கூட்டம் நடத்த மனதில்லை. அப்படியானால் ஞாயிறு பள்ளி வைக்கலாம், அது மற்ற சபை ஆராதனைகளை பாதிக்காது என்று நினைத்தேன். ஆனால் அந்த சகோதரன் ஞாயிறு பகல் ஆராதனை ஒன்றை ஏற்பாடு செய்திருந்ததாக அறிந்தோம். எனவே சகோதரர்களாகிய நாங்கள் அந்த நாளை அப்படி கழிப்பதற்கு பதிலாக (நாங்கள் வேட்டைக்கு வேறு சென்றிருந்தோம்), பட்டினத்துக்கு சென்று ஆயத்தமாகி , சகோ. ஆலனின் கூட்டத்திற்கு சென்றோம். (சகோ. ஏ . ஏ . ஆலன் கூட்டங்கள் நடத்திக்கொண்டிருந்தார். சகோ. ஆலன் மகத்தான பிரசங்கம் ஒன்றை நிகழ்த்தினார். அதை கேட்கும் நல்ல வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது - பாடகர் பாடின பாடல்களைக் கேட்கவும்; அவர்கள் உரக்க பாடினார்கள். அது நல்ல ஆராதனையா யிருந்தது. 25 அதன் பின்பு, வழிநெடுக் கர்த்தருடைய கரத்தைக் கண்டோம். நாங்கள் சென்ற விட மெல்லாம் கர்த்தராகிய இயேசு எங்களை சந்தித்தார். வனாந்தரத்தில் தனிமையில் இருப்பதில் ஒரு பிரத்தியோகம் உண்டு. அப்படி தனிமையில் நீங்கள் இருக்கும் போது, ஏதோ ஒன்று உங்களை இழுக்கிறது. அத்தகைய வனாந்தரமான இடங்களை நான் விரும்புவதற்கு அது ஒரு காரணம். அப்பொழுது சத்துருவின் வல்லமையி னின்று நீங்கள் வெளியேறுகின்றீர்கள். 26 இங்கு அநேக பிசாசுகள் இருந்தாலும், கிரியை செய்ய பிசாசுக்கு ஏதாவதொன்று இராமல்போனால், அவன் கெடுதி விளைவிக்க முடியாதவனாகிவிடுகின்றான் ....... உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா? லேகியோனிலிருந்து வெளியே துரத்தப்பட்ட பிசாசுகள் அதிகமாக கெடுதி விளைவிக்க எண்ணி, பன்றிகளுக்குள் போகவிரும்பின. எனவே, கிரியை செய்வதற்கென பிசாசுகளுக்கு ஏதாவதொன்று அல்லது யாராவது ஒருவர் அவசியம். 27 அதே வழியில் தான் தேவனும் கிரியை செய்கிறார். அவருக்கு நாம் அவசியமாயிருக்கிறோம். நம் மூலம் கிரியை செய்ய அவர் நம் மீது சார்ந்திருக்கிறார். எங்கள் பயணத்தின்போது, அநேகர் தாங்கள் கண்ட் சொப்பனங்களுடன் எங்களிடம் வந்தனர். அவைகளின் அர்த்தத்தை பிழையின்றி உரைக்க கர்த்தராகிய இயேசு ஒருபோதும் தவறவில்லை. அது. அப்படியே நிறைவேறினது.., வேட்டைப்பொருளுக்கு எங்களை நடத்திச்சென்று, அது எங்கேயுள்ளது என்று காண்பிக்க அவர் நல்லவராயிருந்தார். அவ்வாறு இருப்பது என்பது மிகவும் அருமையானது. இரவில் தீ மூட்டி, அதைச் சுற்றி உட்கார்ந்து கொண்டு மனித சஞ்சாரத்தினின்று அநேக மைல்கள் தொலைவில் சென்று, மலைகளின் மத்தியில் தீ 'மினுக்கு' 'மினுக்கு' என்று எரிதல் (Flicker) என்பது. ஓர் அது மிகவும் அழகானது. 28 அங்கு தன் மனைவியினால் தொல்லை ஏற்பட்ட ஒரு சகோதரன் இருந்தார். அநேக ஆண்டுகளுக்கு முன்பு நான் கூட்டம் நடத்திக்கொண்டிருந்தபோது, அவள் தலையையுயர்த்தினாள். நான் தலை குனிந்திருக்க வேண்டுமென்று அவர்களிடம் கூறியிருந்தேன். அவ்வமயம் மேடையின் மேல் ஒரு ஸ்திரீ இருந்தாள். அசுத்த ஆவி அவளை விட்டுப்போக மறுத்தது. அந்த நேரத்தில்தான் இந்த ஸ்திரீ அவபக்தியாய் தன் தலையை உயர்த்தினாள். அந்த அசுத்த ஆவி மேடையின் மேலிருந்த ஸ்திரீயை விட்டு, இந்த ஸ்திரீயினுள் புகுந்தது. இது நடந்து பதினான்கு ஆண்டுகளாகிவிட்டது. அந்த ஸ்திரீ மோசமான நிலையைய டைந்து, அவளுக்கு மூளைக் கோளாறு ஏற்பட்டு, செய்யத்தகாத செயல்களைப் புரிந்து வந்தாள். உதாரணமாக, அவள் தன் கணவரை விட்டு வேறொவனை மணந்து கொண்டாள்; அப்படி செய்ததாக நினைவில்லை என்று அவள் கூறினாள். 29 மருத்துவர்கள் அவளைப் பரிசோதித் தனர் அதற்கு நீங்கள் என்ன பெயர் சொல்லி அழைக்கிறீர்கள்?... அம்னீஷியாவாக (Amnesia) இருக்குமாவென்று அந்த பெயர் என்னவாயிருப்பினும். டாக்டர், அது சரியென்று நினைக்கிறேன். அது அதுவல்ல, அது ஒரு ஆவி. அந்த ஸ்திரீ எனக்கு ஒரு நல்ல சிநேகிதி. ஆனால் அன்று முதல் அவள் என்னை வேண்டுமென்று வெறுக்க ஆரம்பித்தாள். (அது எதனால் என்று உங்களுக்குத் தெரியும்). அவளுடைய கணவர் என்னை அணுகினபோது, நாங்கள் ஜெபத்திற்காக அறையில் முழங்கால்படியிட்டோம். அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் இறங்கி வந்தார். அவ்வளவுதான். அன்றிரவு அவளுடைய கணவருக்கு அவர் சொப்பனத்தில் தோன்றினார். அவர் சொப்பனத்துடன் என்னிடம் வந்தார். அது ஏதோ கேலியென்று அவர் நினைத்தார். ஆனால் அவருடைய மனைவி சுகமாவதற்கு அதுவே பதில் என்பதை அவர் கண்டுகொண்டார். பரிசுத்த ஆவியானவர் எவ்வாறு ஈடுபடுகின்றார்! அங்கு டூசானில் சகோ. நார்மனுடனும் மற்றவர்களுடனும் இருந்தபோது கர்த்தர் வல்லமையாக கிரியை செய்யத் தொடங்கி, காரியங்களை வெளிப்படுத்தினார். ஒரு இரவு, இந்த தீர்மானத்துக்கு என்னைக் கொண்டு வந்தது என்னவெனில், நான் சகோ. உட், சகோ. சாத்மன் இவர்களுடன் நின்றுகொண்டிருந் தேன். அப்பொழுது இரவு 10 மணியிருக்கும். நான் வானத்தைப் பார்த்துக்கொண்டிருந் தேன். அப்பொழுது ஒரு ஆச்சரியம் (awe) என்னைப் பிடித்தது. நான் அவர்களிடம், ''அந்த வானத்தின் சேனைகளைப் பாருங்கள். எல்லாமே பூரண இசைவில் (harmony) அமைந்துள்ளன'' என்றேன். 30 சகோ. உட், அந்த இரண்டு நட்சத்திரங்கள் மிக அருகாமையில் உள்ளன. அது ஒரு ஒளியைப்போல் காணப்படுகின் றது“ என்றார். 31 நான், 'சகோ. உட் , உங்களுக்குத் தெரியுமா? விஞ்ஞானத்தின்படி, அந்த டிப்பரில் (dipper), (அந்த சிறு டிப்பரும், பெரிய டிப்பரும்); அந்த நட்சத்திரங்கள் ஒன்றுக்கொன்று இரண்டு அங்குலம் தூரம் கூட இல்லாததுபோல் காணப்படுகிறது. ஆனால் நமக்கும் அவைகளுக்கும் உள்ளதூரத்தைக் காட்டிலும், அவைகளுக் கிடையே உள்ள தூரம் மிக அதிகம். அவை ஆயிரக்கணக்கான மைல் வேகத்தில் பூமியை நோக்கிப் புறப்பட்டால், இந்த பூமியைவந்தடைய நூற்றுக்கணக்கான ஆண்டுகள் செல்லும். இந்த மகத்தான வானபரப்பில் அவர்கள் தொலைநோக்கி கருவியின் மூலம், 1200 கோடி லைட் ஆண்டுகள் (Lightyears) தூரத்திலுள்ள வைகளை மாத்திரமே காண முடிகின்றது என்கின்றனர். (கிரகங்களுக் கிடையேயுள்ள தூரம் 'லைட் ஆண்டுகள்' என்னும் அளவினால் அளக்கப்படுகின்றது. ஒளி ஒரு வினாடிக்கு 1,85,000மைல் வேகம் செல்லுகின்றது. அவ்வேகத்தில் அது ஒரு ஆண்டில் அடையும் தூரமே ஒரு 'லைட் ஆண்டு' என்று அழைக்கப்படுகின்றது - தமிழாக்கியோன்). அதற்கு அப்பாற்பட்ட தூரத்திலும் சந்திரன்களும் நட்சத்திரங்களும் உள்ளன. தேவன் அவை ஒவ்வொன்றையும் சிருஷ்டித்தார். அவர் அவைகளின் மத்தியில் இருக்கிறார் என்றேன். 32 நான்,''ஒருமுறை வானிலை ஆராய்ச்சி நிலையத்தில் என்னிடம் இவ்வாறு கூறப்பட்டது. வான ராசிகள் கன்னிராசி யிலிருந்து தொடங்கி, கடக ராசியை அடைந்து, கடைசியாக சிம்ம ராசியில் முடிகின்றன. கிறிஸ்து முதலாவதாக தோன்றினது ஒரு கன்னிகையில் மூலமே . அவர் இரண்டாம் முறை யூதா கோத்திரத்து சிங்கமாக வருகிறார். அந்த வானராசிகளைக் காண நான் எவ்வளவோ முயன்றேன். என்னால் முடியவில்லை. ஆனால் அவை அங்குள்ளன. அதற்காக பயின்றவர்கள் அவை அங்குள்ளன என்றறிவர். யோபு அதைக் கண்டான்.அது ஒரு காலத்தில் மனிதனுக்கு வேதாகமமாகத் திகழ்ந்தது. ஆனால் கோடிக்கணக்கான லைட் ஆண்டுகள் தூரத்தின் மத்தியில் தேவன் வீற்றிருந்து கீழே நோக்கிப் பார்க்கிறார், பவுல் அங்கிருக்கிறான். என் தாயாரும் அங்கு எங்கோ இருந்து கொண்டு கீழே நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்'' என்றேன். 33 வானத்தின் சேனைகளின் ஒழுங்கைக் குறித்து சிந்தித்தேன். எதுவுமே தவறான இடத்தில் பொருத்தப்படவில்லை. எல்லாமே அவைகளுக்குரிய நேரத்தில் கிரமமாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. தேவனுடைய மகத்தான சேனை - இராணுவ வீரர்கள் - என் நினைவுக்கு வந்தது. சந்திரன் அந்த ஒழுங்கிலிருந்து தவறினால், ஒரு சில நிமிடங்களுக்குள் பூமியைத் தண்ணீர் மறுபடியும் மூடிவிடும்; அது முன்போலவே ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் ஆகி, தண்ணீரில் மூழ்கிவிடும். சந்திரன் எப்பொழுதாகிலும் அசைந்தால், அது மறுபடியும் அதே செயலைப் புரியும். சந்திரன் பூமியை விட்டு சிறிது அகன்று சென்றால், அலைகள் அதன் கூடவே தாழ்ந்துவிடுகின்றன. அது தேவனுடைய மகத்தான சேனை. 34 தேவனுடைய மகத்தான சேனை அங்கிருப்பதை சிந்தித்து பார்த்தபோது....... நாங்கள் படுக்கைக்குச் சென்றோம். இவை ஒன்றும் கூட தங்கள் சுற்றுப் பாதையை விட்டு விலகுவதேயில்லை என்று சிந்திக்க ஆரம்பித்தேன். அவை அனைத்துமே தங்கள் பாதைகளில் உள்ளன. அவைகளில் ஒன்று நகர்ந்து சென்றால், அது ஒரு நோக்கத்திற்காகவே. அது பூமியை பாதிக்கும். அதன் விளைவை இப்பொழுது நாம் கண்டோம் - அவைகளில் சில வேறு இடங்களுக்கு நகர்ந்த காரணத்தால், அது எல்லாவற்றையுமே பாதிக்கின்றது. 35 அப்பொழுது நான் நினைத்தேன் ........ அந்த மகத்தான வானத்தின் சேனையை, எல்லாவற்றையும் ஒழுங்குக்குள் கொண்டு வர, தங்கள் தங்கள் இடங்களில் இருக்க வேண்டியதாயிருக்க, பூமியின் சேனையின் ஒழுங்கின்மையைக் குறித்து என்ன? ஒன்று ஒழுங்கிலிருந்து மாறும் போது, அது முழுவதையுமே ஒழுங்கின்மைக்கு கொண்டுவந்து விடுகிறது. ஒரு அங்கத்தி னன் ஒழுங்கை விட்டுவெளியேறும்போது, அது தேவனுடைய முழு திட்டத் தையுமே கெடுத்துவிடுகிறது. நாம் ஆவியின் ஒழுங்கை அப்படியே வைத்துக்கொள்ள முயலவேண்டும். 36 இன்று காலை நான் தேவனை நோக்கி வேண்டிக்கொள்வது என்னவெனில், இதை நாம் ஒரு உண்மையான சுகமளிக்கும் ஆராதனையாகச் செய்து, இன்று காலை இங்கு குழுமியுள்ள ஒவ்வொருவரையும் பரிசுத்த ஆவியானவர் தாமே ஒரு இசைவுக்கு கொண்டுவந்து, அதன் விளைவாக தானாகவே ஆத்தும சரீர சுகம் கிடைக்க வேண்டும் என்பதே - நாம் மாத்திரம் நம்முடைய ஸ்தானத்தில் நிலை கொண்டால். 37 நான் தொடக்கத்தில் கூறினது போன்று, புற்றுநோயால் பீடிக்கப்பட்டிருந்த அந்த ஸ்திரீ - டாக்டர் ஹால்ப்ரூக் அதை அறுத்து எடுத்துவிடப் போனார் - சிறகடிக்கும் சத்தத்துடன் அந்த மருத்துவமனைக்குள் வந்து, ஒரு வடுவும் கூட இல்லாமல் அந்த புற்று நோயை எடுத்துப்போட்ட அதே தேவன் இங்கிருக்கிறார் என்று அறிவீர்கள் அல்லவா? (சபையார் ''ஆமென்“ என்கின்றனர் - ஆசி) அவர் ஒன்றே ஒன்றிற்காக காத்திருக்கிறார். அதுதான் அவருடைய சேனை, நட்சத்திரங்களைப் போல், தங்கள் ஸ்தானங்களில் வருவதற்காக. 38 நமக்கு யுத்தங்களை அடுத்து யுத்தங்களும், யுத்தங்களின் செய்திகளும் உண்டாயிருந்தன என்று நாமறிவோம். இவ்வுலகம் நிலைக்குமானால், இன்னும் அநேக யுத்தங்கள் நடக்கும். ஆனால் இந்த அண்டசராசரத்தில் இரண்டு வல்லமைகள் மாத்திரமேயுண்டு என்பதை நீங்கள் உணர்ந்ததுண்டா? நாடுகளிடையே காணப்படும் வித்தியாச பேதங்கள் இவையனைத்திற்குமே இரண்டு வல்லமை கள் மாத்திரமே காரணமாயுள்ளன. ஆகவே இரண்டு வல்லமைகளும் இரண்டு ராஜ்யங்களும் மாத்திரமேயுள்ளன. மற்றவை அனைத்துமே இவ்விரண்டில் ஏதாவதொன்றுடன் சம்பந்தப்பட்டுள்ள சிறு காரியங்களாம். இந்த இரண்டு வல்லமைகள், தேவனுடைய வல்லமையும் பிசாசின் வல்லமையுமே. எல்லா யுத்தங்களும், எல்லா ஒழுங்கின்மையும், மற்றவை அனைத்துமே தேவனுடைய வல்லமை அல்லது சாத்தானின் வல்லமையின் ஆதிக்கத்துக்குட்படுகின்றது. ஏனெனில் இந்த இரண்டு வல்லமைகள் மாத்திரமேயுள்ளன. அவை முறையே ஜீவனின் வல்லமையும் மரணத்தின் வல்லமையுமாம். 39 சாத்தான் இதை மாத்திரம் செய்ய முடியும்.... அவன் பெற்றுள்ள வல்லமை, தாறுமாறாக்கப்பட்ட தேவனுடைய வல்லமையே. அது உண்மையான வல்லமையல்ல. அது தாறு மாறாக்கப்பட்ட தேவனுடைய வல்லமை. சாத்தான் பெற்றுள்ள அனைத்துமே அதுதான். மரணம் என்பது ஜீவன் தாறுமாறாக்கப்படுதல். பொய் என்பது உண்மை தவறாக உரைக்கப்படுதல் பாருங்கள்? விபச்சாரம் என்பது சரியான ஒரு செயல் தவறாக உபயோகிக்கப்படுதல். பாருங்கள்? சாத்தான் பெற்றுள்ள அனைத்துமே தாறுமாறாக்கப்பட்டவையே. ஆனால் அது ஒரு வல்லமை. இன்று நாம் உட்கார்ந்து கொண்டிருக்கும் இந்நேரத்தில் இவ்விரண்டு வல்லமைகளில் ஒன்று நம் மேல் ஆதிக்கம் செலுத்தப் போகின்றது. எனவே பொல்லாத வல்லமையை நாம் துரத்துவோம். வானத்தின் நட்சத்திரங்களைப்போல் நமது ஸ்தானத்தை எடுத்துக்கொள்வோம். 40 வேதம், தங்கள் அவமானங்களை நுரை தள்ளுகிற மார்க்கந்தப்பி அலைகிற நட்சத்திரங்களாயிருக்கிறார்கள்'' என்று யூதா நிருபத்தில் கூறுகிறது. நாம் மார்க்கந்தப்பி அலைகிற நட்சத்திரங்களாய் இருக்க விரும்பவில்லை : இது சரியாயிருக்குமோ அது சரியாயிருக்குமோ, இது நடக்குமோ, அது எப்படியிருக்க முடியும் என்பதாக அவ்வாறு ஐயமுற வேண்டாம். வானத்தின் நட்சத்திரங்களைப்போல், உங்கள் பணியில் உண்மையான இராணுவ வீரனாக நிலைகொள்ளுங்கள்! விசுவாசித்து அங்கு நிலைகொள்ளுங்கள்! ஜீவனும் மரணமும்....... 41 ஒரு இராணுவம் - ஒரு தேசம் மற்றொரு தேசத்துக்கு எதிராக யுத்தத்துக்குச் செல்ல ஆயத்தமாகும்போது, அது முதலில் உட்கார்ந்து, எது சரி, எது தவறென்றும், அந்த தேசத்துக்கு விரோதமாய் போருக்குச் செல்லலாமா என்றும் கணக்கிட்டுப் பார்க்க வேண்டும். இயேசு அவ்வாறு போதித்துள்ளார். ஜனங்கள் மாத்திரம் அவ்விதம் செய்வார்களானால் - தேசங்கள் அவ்வாறு நிதானிக்கும் பட்சத்தில் - நம்மிடையே யுத்தமே இராது. இப்பொழுது, நாம் பார்ப்பது என்ன வென்றால் ஒரு மனிதன் அதைச் செய்யாவிடில் தேசங்களின் இராணுவ தளபதிகள் உட்கார்ந்துகொண்டு அவர்கள் அவ்வாறு செய்வது சரியா என்றும், அவர்களுடைய நோக்கங்கள் சரியா என்றும், எதிரிகளின் சேனையை முறியடிக்க அவர்களிடம் போதுமான பலமும் படைகளும் உள்ளனவா என்றும் கணக்கிட்டுப் பார்க்காவிடில், அவர்கள் நிச்சயம் தோற்று போவார்கள். 42 தளபதி கஸ்டர் மரணத்துக்குரிய அந்த தவறைத்தான் செய்தார். நான் கேள்விப்பட்டபடி, சியோ (Sioux) நாட்டிற்குப் போகக் கூடாதென்று அரசு தளபதி கஸ்டருக்கு உத்தரவிட்டிருந்ததாம்; ஏனெனில் அவர்களுக்கு அது மத சம்பந்தமான உற்சவநேரமாயிருந்தது. அது அவர்களுடைய வழிபாட்டின் நேரம். ஆனால் கஸ்டர் குடித்து விட்டு, உத்தரவையும் பொருட்படுத்தாமல், அங்கு எப்படியாயினும் கடந்து சென்றுவிடலாம் என்று நினைத்தார். அவர்கள் அங்கு சென்று சில அப்பாவிகளை நோக்கிச் சுட்டனர். குண்டு அவர்கள் சிலரின் மேல்பட்டது என்று நினைக்கிறேன். ஜனங்கள் வழிபாட்டிலிருந்தபோது, அவர்களுக்கு ஆகாரம் கொண்டுவரச் சென்ற சாரணர்கள் தாம் சுடப்பட்டனர். கஸ்டர் கடந்து அந்நாட்டிற்குள் சென்றபோது, இச்சாரணர்களைக் கண்டு இராணுவத்தினர் என்று தவறாக நினைத்து அவர்களைச் சுட்டார். சாரணர்கள் தப்பி ஓடிவிட்டனர். அவர்கள் என்ன செய்தனர்? அவர்கள் ஆயுதம் தாங்கி வந்தனர். அதுவே தளபதி கஸ்டரின் முடிவு - ஏனெனில் அவர் முதலில் உட்கார்ந்து யோசிக்கவில்லை. அங்கு செல்ல வேண்டிய வேலையே அவருக்கில்லை. அங்கு செல்ல அவருக்கு உரிமையில்லை.அவர் இந்தியர்களை கீழ் கடற்கரையிலிருந்து மேற்குக்கு துரத்திவிட்டார். அவர்கள் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டனர். அவர் ஒப்பந்தத்தை மீறினார். அப்படி மீறினபோது, அவர் போரில் தோற்றார். 43 எனவே, ஒரு சேனை போருக்கு ஆயத்தமாகும்போது, முதலாவதாக அது இராணுவ வீரர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். போர் புரிவதற்கென அவர்கள் சீருடை உடுத்தியிருக்க வேண்டும். போர்புரிவதற்கான பயிற்சியை அவர்கள் பெற்றிருக்கவேண்டும். இதுவரை நடந்தவைகளிலேயே மிகப்பெரிய யுத்தம் இப்பொழுது நடக்கவிருக்கிறது என்று நான் நம்புகிறேன். தேவன் தமது இராணுவ வீரர்களைத் தெரிந்து கொண்டு, அவர்களுக்கு சீருடையுடுத்தி, பயிற்சிய ளிக்கிறார் என்று நம்புகிறேன். போர்க்களம் ஆயத்தமாகிவிட்டது. போரும் ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது. 44 முதலாவது பெரிய யுத்தம் பரலோகத்தில் தொடங்கினது. அப்பொழுது மிகாவேலும் அவனுடைய தூதர்களும், லூசிபருக்கும் அவனுடைய தூதர்களுக்கும் எதிராகப் போரிட்டனர். முதலாம் யுத்தம் பரலோகத்தில் தொடங்கினது. எனவே பாவம் முதலாவதாக பூமியில் ஆரம்பிக்கவில்லை, அது பரலோகத்தில் ஆரம்பித்தது. பிறகு அது பரலோகத்திலி ருந்து கீழே வீசியெறியப்பட்டு பரலோகத்திலிருந்து வெளியேற்றப்பட்டு பூமிக்கு தள்ளப்பட்டது மானிட பிறவிகள் மீது விழுந்தது. அப்பொழுது யுத்தம் தேவதூதர்களை விட்டுச்சென்று, அது மானிடரின் யுத்தமாக ஆனது. தேவனுடைய சிருஷ்டிப்பை நிர்மூலமாக்க சாத்தான் இறங்கி வந்தான். தேவன் தமக்கென படைத்துக்கொண்ட சிருஷ்டிப்பை நிர்மூலமாக்க சாத்தான் இறங்கி வந்தான். அப்பொழுது யுத்தம் பூமியில் ஆரம்பமானது. அது நமக்குள் ஆரம்பமாகி , அன்று முதல் அந்த யுத்தம் நடந்து கொண்டேயிருக்கிறது. 45 ஒரு யுத்தம் ஆரம்பிக்கும் முன், இரு சாராரும் சண்டையிட ஒரு போர்க்களத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். முதலாவது மகாயுத்தம் மனித சஞ்சாரமற்ற இடத்தில் (No Man's Land) சண்டையிடப்பட்டது. அங்குதான் அவர்கள் போர் புரிந்தனர். எனவே அதற்கான ஒரு இடத்தை தெரிந்துகொள்ளுதல் அவசியம். இஸ்ரவேல் ஜனங்கள் பெலிஸ்தியருக்கு எதிராக யுத்தத்துக்குப் புறப்பட்டபோது, அவர்கள் கூடின இடத்திற்கு இருபுறமும் மலை இருந்தது, அப்பொழுது தான் கோலியாத் புறப்பட்டு, இஸ்ரவேலின் சேனைகளுக்கு சவால் விடுத்தான். அந்த பள்ளத்தாக்கில் தான் தாவீது அவனை சந்தித்தான். அந்த இருமலைகளுக்கும் இடையே ஓடின அந்த சிறு அருவியிலிருந்து தான் அவன் கூழாங் கற்களைப் பொறுக்கினான். ஒரு இடத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். 46 அவர்கள் இருவருக்கும் உகந்த இடத்தில் -மனித சஞ்சாரமற்ற நிலத்தில் சண்டையிடுகின்றனர். ஒருவர் இங்கு சண்டையிடுவதும், மற்றவர் அங்கு சண்டையிடுவதும் கிடையாது. சந்திக்கக்கூடிய ஒரு போர்க்களம் உள்ளது. அங்கு ஒரு இராணுவப்படை மற்றொரு இராணுவப்படையுடன் தன் வலிமையைப் பரிசோதித்துக் கொள்கிறது, இருவரும் சந்திக்கும் இடம். இதைக் காணத் தவற வேண்டாம்! இந்த பெரிய யுத்தம் பூமியில் ஆரம்பமானபோது, இருவரும் சந்திக்கக் கூடிய ஒரு இடம் அவசியமாயிருந்தது. யுத்தத்தை ஆரம்பிக்க ஒரு இடம் தேவைப்பட்டது - யுத்தம் மும்முரமாக நடக்க . போர்க்களம் மனித சிந்தையே. அங்குதான் யுத்தம் ஆரம்பமாகின்றது. அதற்கென மனித சிந்தைதான் போர்க்களமாகத் தெரிந்து கொள்ளப்பட்டுள்ளது, ஏனெனில் தீர்மானங்கள் அனைத்துமே தலையில் தான்மனித சிந்தையில் தான் செய்யப்படுகின்றன. அது ஏதோ ஒரு ஸ்தாபனத்தில் தொடங்கவில்லை. அது எதேச்சையாக தொடங்கவில்லை. போர்க்களம் அங்கு தொடங்கவில்லை. அதனால் தான்ஸ்தாபனம் தேவனுடைய பணியைச் செய்ய முடியாது. நீங்கள் சத்துருவை சந்திக்க வேண்டியபோர்க்களம் உங்கள் சிந்தையே. நீங்கள் எதைத் தெரிந்து கொள்வீர்கள் என்று தீர்மானம் செய்ய வேண்டும். அது உங்களைச் சந்திக்கிறது. இங்கு மிகவும் வியாதிப்பட்டுள்ள இந்த சிறு பெண் இதை கூர்ந்து கவனிக்க வேண்டுமென்று விரும்புகிறேன். 47 தீர்மானங்கள் தலையில் - சிந்தையில் - செய்யப்படுகின்றன. அங்குதான் சாத்தான் உங்களைச் சந்திக்கிறான். தேவன் மனிதனைப் படைத்துள்ள விதமே, அவன் சிந்தையில் தீர்மானம் செய்ய வேண்டுமென்று. என்னிடம்..... என் குறிப்பு புத்தகத்தை நீங்கள் பார்க்க நேர்ந்தால், ஒரு சிறு வரைபடம் அதில் வரையப் பட்டுள்ளது. இதைநான் அண்மையில் கரும்பலகையில் வரைந்து காண்பித்தேன். மனித சிந்தை ஒரு கோதுமை மணியைப்போல் உண்டாக்கப்பட்டுள்ளது. அது ஒரு வித்து. மனிதன் ஒரு வித்து. சரீரப்பிரகாரமாக நீங்கள் உங்கள் பெற்றோரின் வித்து. ஜீவன் தந்தையிடமிருந்து வருகிறது, சதை பாகம் (Pulp) தாயினிடமிருந்து வருகிறது. இவ்விரண்டும் ஒன்று சேரும்போது - முட்டையும் இரத்தமும் ஒன்றாக கூடும்போது - இரத்த அணுவில் ஜீவன் உள்ளது. அதிலிருந்து குழந்தை உண்டாகின்றது. 48 எந்த ஒரு விதைக்கும் வெளியே ஓடு உண்டு. உள்ளே சதை பாகம் (Pulp)உண்டு. சதை பாகத்தினுள்ளே ஜீவ கிருமி உள்ளது. நாமும் அவ்வாறே உண்டாக்கப்பட்டுள் ளோம். நமக்குசரீரம், ஆத்துமா, ஆவி உண்டு. வெளிப்புறமான சரீரம்தான் ஓடு; அதற்குள் மனச்சாட்சி போன்றவைகளைக் கொண்ட ஆத்துமா ; ஆத்துமாவிற்குள் ஆவி ஆவிதான் மற்றெல்லாவற்றையும் நடத்துகின்றது. 49 நீங்கள் வீட்டிற்குச் சென்று மூன்று சிறு வட்டங்களை வரைவீர்களானால், வெளிப்புறமான சரீரத்திற்கு ஐம்புலன்கள் உள்ளன என்று காணலாம். அவை பார்த்தல், ருசிபார்த்தல். உணருதல், முகர்தல், கேட்டல் என்பனவாம். இந்த ஐம்புலன்களும் மனித சரீரத்தை நடத்துகின்றன.சரீரத்திற் குள் ஆத்துமா உள்ளது. அந்த ஆத்துமா, கற்பனை, மனச்சாட்சி, ஞாபகம், யோசனை , பிரியம் போன்றவைகளால் நடத்தப்படு கின்றது. ஆனால் ஆவிக்கு ஒரே ஒரு புலன் மாத்திரமே உள்ளது. அதை நாம் புரிந்து கொள்வோம்!அது விசுவாசம் அல்லது சந்தேகம்! அவையிரண்டில் ஒன்று மாத்திரமே ஆதிக்கம் செய்கிறது.அது முற்றிலும் உண்மை . அதற்கு ஒரே சாலை தான் உண்டு. அது தான் உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சுயாதீனம் . நீங்கள் சந்தேகத்தை ஏற்றுக்கொள்ளலாம், அல்லது விசுவாசத்தை ஏற்றுக்கொள்ளலாம் .இவைகளில் ஏதாவதொன்றை நீங்கள் நடைமுறையில் ஏற்றுக்கொள்ளலாம். எனவே, சாத்தான் முக்கியமாக, மனிதஆவி தேவனுடைய வார்த்தையை சந்தேகிக்கும்படி தூண்டுகிறான். ஆனால் தேவனோ முக்கியமாக, அந்த ஆவியில் தமது வார்த்தையை வைக்கப் பார்க்கிறார். பார்த்தீர்களா? அதுதான் அதை செய்கிறது. 50 இந்த சபை மாத்திரம் இப்பொழுது ஒன்றாக இணைக்கப்பட்டு, இவர்கள் அனைவரும் ஒரே மனதோடு, ஒரு சிறு சந்தேகமும் கூட அற்றவர்களாய் இருப்பார்களானால், அடுத்த ஐந்து நிமிடங்களுக்குள், நம்மிடையே பெலவீனர் ஒருவராவது இருக்கமாட்டார்கள். ஏனெனில் பரிசுத்த ஆவியை வாஞ்சிக்கிற எந்த ஒரு மனிதனும் அதை பெறமல் இருக்க முடியாது, ஆனால் அதை மாத்திரம் சரிப்படுத்துவீர்களானால், நீங்கள் பெற்றுகொள்வது நிச்சயம். 51 அங்கு தான் யுத்தம் தொடங்குகின்றது - சரியாக உங்கள் சிந்தையில். நீங்கள் அதை .... அது 'கிறிஸ்தவ விஞ்ஞானம்' அல்லவென்பதை ஞாபகம் கொள்ளுங்கள் .......அதாவது, 'ஜடப்பொருளின் மேல் சிந்தை ஆளுகை செய்தல்“ (mind over matter). அதுவல்ல சிந்தை ஜீவனை ஏற்றுக்கொள்கிறது; ஜீவன் தேவனுடைய வார்த்தை. அது ஜீவனைக்கொண்டு வருகின்றது. உங்கள் சிந்தையில் எழும் எண்ணம் அதைச் செய்வதில்லை, ஆனால் தேவனுடைய வார்த்தை எண்ணமாகிய வாய்க்காலின் வழியாக உள்ளே பிரவேசிக்கும்போது - பாருங்கள்? கிறிஸ்தவ விஞ்ஞானம் கூறுகின்றபடி அது சிந்தையை மாத்திரம் சார்ந்ததல்ல - ஜடப் பொருளின் மேல்சிந்தை ஆளுகை செய்தல். இல்லை, இல்லவே இல்லை. உங்கள் சிந்தை தேவனுடைய வார்த்தையை ஏற்றுக்கொண்டு அதை கிரகித்துக் கொள்கின்றது. உங்கள் சிந்தையை நடத்துகிறது எது? உங்கள் ஆவி . உங்கள் ஆவி ; தேவனுடைய வார்த்தையை கிரகித்துக்கொள்கிறது. தேவனுடைய வார்த்தையில், ஜீவன் உள்ளது. அது உங்களுக்குள் ஜீவனைக் கொண்டுவருகிறது. ஓ, சகோதரனே, அது நிகழும்போது, அந்த வாய்க்கால் வழியாக ஜீவன் உங்களுக்குள் வரும்போது, தேவனுடைய வார்த்தை உங்களில் வெளிப்படுகின்றது. நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.'' 52 அது என்ன செய்கிறது? நமது இருதயத்தின் மத்தியிலிருந்து - அதாவது ஆத்துமாவிலிருந்து - அது புறப்பட்டுச் சென்று, எல்லா வாய்க்கால்களையும் போஷிக்கின்றது. தொல்லை என்னவெனில், நாம் அநேக சந்தேகங்களுடன் இங்கு நின்று கொண்டு, அங்கு என்ன உள்ளதோ அதை ஏற்றுக்கொள்ள முயல்கிறோம். நீங்கள் அதை நிறுத்திவிட்டு, உண்மையான தேவனுடைய வார்த்தை பாயும் வாய்க்காலுக்கு வரவேண்டும்; அப்பொழுது அது தானாகவே எல்லா விடங்களுக்கும் செல்லும். உள்ளே என்ன இருக்கிறதோ, அதுதான் முக்கியம் வாய்ந்தது. சாத்தானும் உள்ளே தான் அணுகுகிறான். 53 நீங்கள், நான் திருடுவதில்லை, நான் குடிப்பதில்லை, இவைகளை செய்வதில்லை'' என்று கூறலாம். ஆனால் அதற்கும் இதற்கும் ஒன்றுமில்லை. அது உள்ளில் உள்ளதைப் பொறுத்தது - நீங்கள் எவ்வளவு நல்லவர்களாய் இருந்தாலும், எவ்வளவு உண்மையுள்ளவர்களாய் இருந்தாலும், - இவையாவும் மதிக்கப்பட வேண்டியவைகளே. ஆனால் இயேசு, ''ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால்...'' என்று கூறினார். பாருங்கள்? உங்களுக்குள்ளே மாறுதல் ஏற்பட வேண்டும். இல்லையேல் அது செயற்கையான ஒன்றைக் காண்பிப்பது போல் ஆகிவிடுகின்றது. ஏனெனில் உங்கள் இருதயத்தின் ஆழத்தில், அதை செய்ய வேண்டுமெனும் ஆவல் குடிகொண்டுள்ளது. அது செயற்கையாக இருக்கக்கூடாது. அது உண்மையாக இருக்க வேண்டும். 54 அது ஒரே ஒரு சாலை வழியாகத்தான் வரவேண்டும். அதுதான் உங்கள் சுயாதீனம் . உங்கள் சிந்தனைகளின் மூலமாக அது உங்கள் ஆத்துமாவுக்குள் வரவேண்டும். ''அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே அவன் இருக்கிறான். நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம் போ என்று சொல்லி அதை உங்கள் இருதயத்தில் சந்தேகப்படாமல், நீங்கள் சொன்னபடியே நடக்கும் என்று விசுவாசித்தால், அது அப்படியே ஆகும். உங்களுக்குப் புரிகிறதா? சபையார் 'ஆமென் என்கின்றனர் - ஆசி) பார்த்தீர்களா? அதுதான் போர்க்களம். 55 அதை மாத்திரம் உங்களால் முதலாவதாக தொடங்கக்கூடுமானால் நாம் காரியங்களைச் செய்ய அதிக வாஞ்சையுள் ளவர்களாயிருக்கிறோம். தேவனுக்கென்று ஏதாவதொன்றைச் செய்ய நாம் விருப்பங் கொண்டிருக்கிறோம். இந்த ஸ்திரீ உயிர் வாழ வேண்டுமென்று விருப்பங் கொண்டிருக்கிறாள் என்பதில் ஐயமில்லை. அவள் சுகமடைய வேண்டுமென்று விரும்புகிறாள். இங்குள்ள மற்றவரும் கூட சுகமாக வேண்டுமென்று விரும்புகின்றனர். அந்த கேஸ்'(Case) ஸைக் குறித்து நாம் கேட்கும்போது - டாக்டரைப் போல் - மரித்தோர் உயிரோடெழுதல் போன்றவைகளை ; தேவன் செய்துள்ள மகத்தான கிரியைகளைக் குறித்து நாம் கேள்விப்படும்போது, நாமும் விருப்பங் கொள்கிறோம். ஆனால் நடப்பது என்னவெனில், இந்த புலன்களின் மூலமாக - மனச்சாட்சி போன்றவைகளின் மூலமாக - இதை அணுகி இறுகப்பற்றிக்கொள்ள முயல்கிறோம். 56 அநேகமுறை அநேகர் வார்த்தையை தவறாகப் புரிந்து கொள்கின்றனர். நான் பீட அழைப்பைபற்றி கூறினதைக் குறித்து அநேகர் என் மீது தவறான அபிப்பிராயம் கொண்டுள்ளனர். நான் பீட அழைப்புக்கு அதிக முக்கியத்துவம் செலுத்துவதில்லை யென்று என்ன அர்த்தத்தில் கூறினேன் என்றால், நீங்கள் பீட அழைப்பைக் கொடுக்கக்கூடாது என்றல்ல. ஆனால் ஒருவர் வேறொருவர் கையைப் பிடித்துக்கொண்டு, ''ஓ, சகோ. ஜான், என்ன தெரியுமா? நீங்களும் நானும் இவ்வளவு நாட்களாக அண்டை வீட்டாராக இருந்து வருகிறோம். பீடத்திற்கு வந்து முழங்காற் படியுங்கள்'' என்று நிர்ப்பந்திக்கின்றனர். அவர் என்ன செய்கிறார்? ஒரு கரும்பலகை இங்கிருந்தால் நலமாயிருக்கும், அவர் என்ன செய்கிறார் என்பதை வரைந்து காண்பிக்கலாம். அவர் சிநேகத்தின் மூலம் மற்றவருடைய ஆத்துமாவில் கிரியை செய்யப்பார்க்கிறார். அது நடக்காது! அது வழி ஆகாது. நிச்சயமாக அதுவல்ல. அவர் எதைக்கொண்டு கிரியை செய்ய முயல்கிறார்? பழைய ஞாபகங்களின் மூலம், அவருடைய ஆத்துமாவில் .''ஓ, சகோ. ஜான், உங்களுக்கு அருமையான தாயார் இருந்தார்கள்; அவர்கள் அநேக ஆண்டுகளுக்கு முன்பு மரித்துப்போனார்கள்'' - பழைய ஞாபகம். பாருங்கள்? நீங்கள் அப்படி செய்யக்கூடாது. அது உங்கள் சுயாதீனத்தின் மூலமாக வரவேண்டிய ஒன்று. நீங்களாகவே, தேவனுடைய வார்த்தையை உங்களுக்குள் அனுமதித்து...... தாயார் நல்லவர்களாயிருந்தார்கள் என்பதற்காக நீங்கள் வருவதில்லை. நீங்கள் நல்ல அண்டை வீட்டார் என்பதற்காக வருவதில்லை. தேவன் உங்களை அழைப்பதனால் நீங்கள் வருகின்றீர்கள். அவருடைய வார்த்தையின் அடிப்படையில் அவரை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள். அந்த வார்த்தை மாத்திரமே உங்களுக்கு எல்லாமாக இருக்கின்றது. நீங்கள் மாத்திரம் எல்லாவற்றையும் வழியினின்று அகற்றி - மனச்சாட்சி, புலன்கள் போன்றவைகளை - வார்த்தை உள்ளே வர அனுமதிப்பீர்களானால், அந்த வார்த்தை அது கூறியுள்ளதை அப்படியே செய்யும். 57 அது எதைக் கொண்டு மூடப்பட்டுள்ளது பார்த்தீர்களா? நீங்கள், ''சகோ. பிரன்ஹாமே, மனச்சாட்சி, புலன்கள் போன்றவைகளுக்கு இதனுடன் யாதொரு சம்பந்தமும் இல்லை எனலாம். நிச்சயம் உண்டு. நீங்கள் வார்த்தையை உள்ளே வர அனுமதித்து, அதை மனச்சாட்சியால் மூடினால், அதனால் வளரமுடியாது. அது உருக்குலைந்த (deformed) வார்த்தையாகிவிடும். ஒரு நல்ல தானியம் பூமியில் புதைக்கப்பட்டு, அதன் மேல் ஒரு கோல் விழுந்தால், என்ன நடக்குமென்று கவனித்திருக்கிறீர்களா? அது கோணலாக வளரும். ஏனெனில் அதன் வளர்ச்சியை ஏதோ ஒன்று தடைசெய்து விட்டது. 58 இன்றைக்கு நமது பெந்தெகொஸ்தே விசுவாசத்தின் விவகாரமும் அதுவே. நாம் நமக்குப் போதிக்கப்பட்ட விசுவாசத்தின் வளர்ச்சியை - நமக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் பரிசுத்த ஆவியை - தடை செய்வதற்கு அநேக காரியங்களை அனுமதித்துவிட்டோம். நாம் மற்றவர்க ளைப் பார்க்கிறோம் பிசாசு எப்பொழுதுமே மற்றவர்களின் தோல்விகளை உங்களுக்குச் சுட்டிக்காட்டுகின்றானேயன்றி, உண்மை யான சாட்சியை நீங்கள் கேளாதபடிக்கு உங்களை அதனின்று விலக்கிவிடுகின்றான். சில நேரங்களில் அவன், ஏதாவதொன்றை பாவனை செய்யும் ஒரு மாய்மாலக்காரனை உங்களுக்குச் சுட்டிக் காண்பிக்கிறான். அவன் ஆள்மாறாட்டம் செய்தவனானபடியால், அவனால் அதை செய்யமுடிவதில்லை. ஆனால் அதுமாத்திரம் தேவனுடைய வார்த்தையின் அடிப்படையில் வந்திருக்கு மானால், ''வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை. அது நிலைத்திருக்க வேண்டும். பார்த்தாயா, சகோதரியே? 59 அது சிந்தையில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அப்பொழுது அது இருதயத்தில் விசுவாசிக்கப்படும். அப்பொழுது தேவனுடைய வார்த்தை தத்ரூபமாகிவிடும். அப்பொழுது ஆவி, ஆத்துமா, சரீரம் இவைகளின் புலன்கள் அனைத்துமே பரிசுத்த ஆவியினால் முழுவதும் சுத்தமாக்கப்பட்டிருக்கும். அப்பொழுது நீ தேவனுடைய புலனாகிவிடுகிறாய், நீ தேவனுடைய மனச்சாட்சியாகி விடுகிறாய். தேவனோடு சம்பந்தப்பட்டுள்ள அனைத் துமே உன் வழியாகப் பாய்கின்றது. உனக்கு எங்கும் எந்த சந்தேகமும் எழுவதில்லை. உன் சிந்தையில் வேறொன்றும் எழுந்து, 'குமாரி ஜோன்ஸ் தேவனை நம்பமுயன்றது என் நினைவுக்கு வருகிறது. குமாரி இன்னார், குமாரி டோ ஒருமுறை சுகத்திற்காக தேவனை நம்பித் தோல்வியடைந்தாள்'' என்று நீ கூறுவதில்லை. பாருங்கள்? அந்த வாய்க்கால் மாத்திரம் சுத்தம் செய்யப்பட்டு, உள்ளில் பரிசுத்த ஆவியினால் நிறைக்கப் பட்டிருக்குமானால், இப்படிப்பட்ட பழைய ஞாபகங்கள் தோன்றாது. குமாரி ஜோன்ஸ் என்ன செய்தாலும் பரவாயில்லை, (சகோதரன் பிரன்ஹாம் தன் கைகளை ஒரு தடவைதட்டுகிறார் - ஆசி) அது நீயும் தேவனும் ஒன்றாகிவிடுதல். உங்கள் இருவரைத் தவிர வேறு யாரும் அதில் இருக்கமாட்டார்கள். பார்த்தீர்களா? அதுதான் உங்கள் யுத்தம். 60 தொடக்கத்திலேயே அவனைக் கொன்றுவிடுங்கள். அவனுடைய ஓட்டத்தின் தொடக்கத்திலேயே அவனைத் தடுத்து நிறுத்திவிடுங்கள். நீங்கள் எவ்வளவுகாலம் இந்தப்போரை நீடிக்கச் செய்யவேண்டும் என்றல்ல. இப்பொழுதே அதை நிறுத்திவிடுங்கள். நீங்கள் உங்கள் பழைய ஞாபகங்களுடனும், மனசாட்சி யுடனும் வந்து, ''நான் தோல்வியடைய நேரிடும். ஒருக்கால் அது சரியாயிருக்காது'' என்பீர்களானால்! அப்படி செய்யவே செய்யாதீர்கள் நீங்கள் எல்லாவற்றையும் தூர எறிந்துவிட்டு, வாய்க்காலைத் திறந்து கொடுத்து, ''தேவனே, உமது வார்த்தை நித்திய காலமாய் சத்தியமாயுள்ளது. அது எனக்காக அளிக்கப்பட்டுள்ளது. முழு சபையுமே தோல்வியடைந்தாலும், நான் தோல்வியடையமாட்டேன். ஏனெனில் நான் உமது வார்த்தையை ஏற்றுக்கொண்டுள் ளேன்'' 61 அதுதான் யுத்தம். அதுதான். ஒரு வடுகூட விடாமல், ஒரு ஸ்திரீயின் மார்பிலிருந்து புற்றுநோயை அகற்றின சர்வ வல்லமையுள்ள தேவன், ஒரு குழந்தை வியாதிப்பட்டு மரிக்க அனுமதிப்பாரா? இல்லை, ஐயா! 62 உயர் நிலைப்பள்ளியில் படிக்கும் ஒரு சிறுமி அண்மையில் அங்கு வந்திருந்தாள். அவளுடைய தாயார் தொலைபேசியில் என்னிடம்,''என் பெண்ணுக்கு 'ஹாட்ஜ்கின் வியாதி' (Hodgkin's disease) உள்ளது'' என்றாள். (அது புற்றுநோய் வீக்கல் போல் வருவது). அவளுடைய தொண்டையிலிருந்த ஒருவீக்கத்திலிருந்து ஒரு துண்டை எடுத்து மருத்துவர்கள் பரிசோதித்ததில், அது ஹாட்ஜ்கின் வியாதி என்று கண்டுபிடிக்கப்பட்டது. எனவே மருத்துவர்,''அடுத்த வீக்கம் ஒருக்கால் இருதயத்தில் தோன்றலாம். அப்படி நேர்ந்தால், அவள் மரித்து விடுவாள். அது நேரிடும் வேகத்தைக்காணும் போது, அவள் இன்னும் மூன்று மாதங்கள் மாத்திரமே உயிர் வாழ்வாள்'' என்றார். தாய்,“நான் என்ன செய்யவேண்டும்? அவளை பள்ளிக்கு அனுப்பலாமா?'' என்று மருத்துவரைக் கேட்டாள். மருத்துவர், அவள் போய்க்கொண்டிருக் கட்டும். அவள் திடீரென்று மரித்துவிடுவாள். அவள் பள்ளிக்குப்போய், சாதாரண வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கட்டும். அவளிடம் இதைக் குறித்து ஒன்றும் சொல்ல வேண்டாம்'' என்றார். எனவே அந்தத் தாய் என்னிடம், ''நான் என்ன செய்ய வேண்டும்'' என்று கேட்டாள். நான், அவளைக் கொண்டுவந்து ஜெப வரிசையில் நிறுத்துங்கள் நீங்களும் அவளுடன் வாருங்கள்'' என்று கூறினேன். எனக்கு வினோதமான ஒரு உணர்ச்சி ஏற்பட்டது. 63 அந்த சிறு பெண் அன்று காலையில், சாயம் தீட்டியதால், நீல நிற உதடுகளுடன் - அவர்களுடைய பள்ளி அதை நியமித்துள்ளது. அந்த சிறுமி அங்கு வந்தாள் (அவள் யாரென்று எனக்குத் தெரியாது. என்னுடன் தொலைபேசியில் தான் அவர்கள் பேசினார்கள். நான் அவள் கையைப் பிடித்து, காலை வணக்கம், சகோதரியே என்றேன். அது அவள் தான். ஒரு சில நிமிடங்களில், அவர்களிருவரும் தேவனற்றவர்களாய் கிறிஸ்துவற்றவர்களாய் இருப்பதை உணர்ந்து கொண்டேன். நான் இந்த நிலையில் நீங்கள் எப்படி சுகத்தை எதிர்பார்க்க முடியும்? நீங்கள் இயேசு கிறிஸ்துவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்வீர்களா? இந்த குளத்திற்கு வந்து, உங்கள் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்வீர்களா?'' என்று கேட்டேன். அவர்கள்,''நாங்கள் அப்படியே செய்வோம்'' என்றனர். ஓ, என்ன நேர்ந்தது தெரியுமா? ஒருக்கால் அந்த ஸ்திரீ இன்று காலை இங்கு அமர்ந்திருக்கலாம். உங்களில் அநேகருக்கு அந்த 'கேஸ்'(Case) ஸைக் குறித்து தெரியும். இங்குள்ள தர்ம கர்த்தாக்களில் ஒருவரான சகோ. மைக் ஈகன் இந்த 'கேஸ்ஸை நேரடியாகப் பார்த்தார். அது நான்கு, ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது. அந்தபெண் மறுபடியும் மருத்துவரிடம் அழைத்துச் செல்லப்பட்டாள். ஹாட்ஜ்கின் வியாதி சிறிதளவு கூட அவளில் காணப் படவில்லை. 64 என்ன நடந்தது? நீங்கள் முதலில் வாய்க்காலைத் திறந்து கொடுக்கவேண்டும். நீங்கள் இராணுவ வீரராகிய பரிசுத்த ஆவியை போர்க்களத்தில் நிறுத்தி தேவனுடைய வார்த்தையை ஏற்றுக் கொள்ளவேண்டும். அவரே வார்த்தை. அவர் அங்கு நின்று கொண்டிருக்கிறார். அப்படியானால் எதுவும் அதை தடுத்து நிறுத்த முடியாது. மற்ற வாய்க்கால்கள் அனைத்துமே சுத்தம் செய்யப்பட்டு திறந்து கொடுக்கப்பட்டுவிடும். பழைய பாய்லர்களில் உஷ்ணம் செலுத்தும் குழாய் (Flue) அடைத்துக் கொண்டு நின்று விடுவதுபோல் . நீங்கள் தீ மூட்டினால் அது வெடித்துவிடும். இன்றைக்கு கிறிஸ்தவர் களும் அதேபோன்று வெடித்த நிலையி லுள்ள காரணம் என்னவெனில், அவர்கள் உள்ளே சென்று தங்கள் வாய்க்கால்களை சுத்தம் செய்வதில்லை. நீங்கள் மனச்சாட்சி, ஞாபகம், யோசனை போன்றவைகளை அகற்றி சுத்தம் செய்து, உள்ளேயிருந்து கலப்படமற்ற தேவனுடைய வார்த்தை வெளியே வந்து, அது சத்தியம் என்று அறிவிக்கப்படவேண்டும். இன்று இந்த பாகத்தில், பத்தாயிரம் பேர் தேவனை விசுவாசித்து மரித்தாலும், நாளை அந்த பாகத்தில் பத்தாயிரம் பேர் தேவனை விசுவாசித்து மரிக்க நேரிட்டாலும், அது என்னில் எந்தவித பாதிப்பையும் உண்டு பண்ணாது. நான் தனிப்பட்ட நபர். விசுவாசிப்பது நானே . நம்புவது நானே. 65 நாம் இவ்வாறு நமது வாய்க்கால்களைத் திறந்து கொடுத்து, நாம் பார்க்க முயன்றால், இவரும் அவரும், இவரும் அவருமாக, ஆயிரக்கணக்கானவர் சாட்சி பகருவதை நாம் காணலாம். ஆனால் பிசாசு நம்மிடையே வர மும்முரமாக முயல்கிறான். அவனால் அங்குவரக்கூடுமானால், அவன் உன் சேனையை தோற்கடித்து விடுவான். நீ உன் ஐம்புலன்களைக் கொண்டிருப்பதில் தவறொன்றுமில்லை - பார்த்தல், ருசிபார்த்தல், உணர்தல், முகர்தல், கேட்டல் என்பவைகளை . ஆனால் அவை வார்த்தையுடன் ஒத்துப்போகாம்லிருக்கும் பட்சத்தில், அவை கூறுவதற்கு செவிகொடுக்க வேண்டாம். கற்பனைகள், மனச்சாட்சி, ஞாபகங்கள், யோசனைகள் (reasonings). சிநேகம் இவையனைத்தும் வார்த்தையுடன் ஒத்துப்போகும் வரைக்கும் நல்லதே. ஆனால் உன் சிநேகம் வார்த்தையுடன் ஒத்துப்போகாவிட்டால், அதை நிராகரித்து விடு. உடனே உஷ்ணம் செலுத்தும் குழாயை ஊதி சுத்தம் செய். பாருங்கள்? உன் யோசனை தேவனுடைய வார்த்தையுடன் ஒத்துப்போகாவிட்டால், அதை விட்டு வெளியேறும். அது உண்மை . இயந்திரம்....... உனக்குள் இருக்கும் கற்பனைகள், மனச்சாட்சி, எதுவுமே வார்த்தையுடன் ஒத்துப்போகாவிட்டால், அதை அகற்றிவிடு. 66 உன்னிடம் என்ன உள்ளது? உனக்கு சூரியன் கிரகங்கள் அமைப்பு (Solar System) உள்ளது. அல்லேலூயா தேவன் கிரகங்களை ஒழுங்கான அமைப்பில் வைத்து,''உன்னை நான் அழைக்கும் வரை, அங்கேயே இரு'' என்றார். அவை அங்கேயேயுள்ளன. அவைகளை எதுவுமே அசைக்க முடியாது. தேவன் ஒரு மனிதனை தம் கரங்களில் கொண்டு, அவன் தன் புலன்கள், மனச்சாட்சி போன்ற அனைத்தையும் சுத்தப்படுத்தி, அவை ஆவியில் தேவனுடைய சார்பில் இருக்கும்போது, அங்கு சந்தேகத்தை உண்டாக்க உலகில் எந்த பிசாசும் இருக்க முடியாது. அது உண்மை. 67 பிசாசு அங்கு வந்து, ''உனக்கு சுகம் கிடைக்கவில்லையே'' என்று சொல்லும் போது, உன் மனச்சாட்சி அதை ஏற்றுக் கொள்ளாது. உஷ்ணம் செலுத்தும் குழாய் சுத்தமாக இருப்பதால் அது 'அல்லேலூயா என்று சத்தமிடுகிறது. வெளிச்செல்லும் துவாரம் (Outlet) 'தேவனுக்கு மகிமை' என்னும் ஊதல் ஓசையை எழுப்புகின்றது. தேவனுடைய வார்த்தையும், தேவனுடைய வல்லமையும் கிரியை செய்வதற்கென அது மிகவும் சுத்தமாயுள்ளதால், அது சத்தமிடு கின்றது. பாருங்கள்? அதுதான் முக்கியமானது. அதுவே உங்கள் போர்க்களம். உங்கள் போர்க்களம் தொடக்கத்திலிருந்தே ஆத்துமாவிலும் சிந்தையிலும் உள்ளது. சிந்தை ஆத்துமாவுக்கு - இல்லை, ஆவிக்கு-கதவாக அமைந்துள்ளது. உங்கள் சிந்தை திறக்கப்பட்டு, அது ஆவியை ஏற்றுக் கொள்கிறது, அல்லது ஆவியை நிராகரிக்கிறது. 68 உங்களுக்கு சிறுமனச்சாட்சிகள், சிறு உணர்ச்சிகள் போன்றவை இருக்கலாம். ஆனால் இவை அதனுடன் சம்பந்தப்பட்ட தல்ல. அவை சிறு உணர்ச்சிகளே. ஆனால் உண்மையில் அது வரும்போது, உங்கள் சிந்தை திறந்து கொடுக்கின்றது. உங்கள் சிந்தை அதை ஏற்றுக்கொள்கின்றது, அல்லது நிராகரிக்கின்றது. நண்பர்களே, அதுதான். தேவனே, இதை ஒருவராவது இழந்து போகவேண்டாம்! உங்கள் சிந்தை தான் கதவைத் திறந்து கொடுக்கின்றது; அல்லது அது கதவை மூடிவிட்டு, உங்கள் மனச்சாட்சிக்கும், உங்கள் ஞாபகத்திற்கும், உங்கள் சிநேகத்திற்கும் செவி கொடுக்கிறது. ஆனால் உங்கள் சிந்தை இவையனைத்தும் உள்ளே புகா வண்ணம் அடைத்துவிட்டு, தேவன் - அவருடைய வார்த்தையின் ஆவி - உள்ளே வர அனுமதிக்குமானால், அது மற்றவை அனைத்தையும் வெளியே தள்ளிவிடும்.அப்பொழுது எல்லா சந்தேகங்களும் மறைந்துவிடும். எல்லா பயமும் போய்விடும், எல்லா சந்தேகத்தின் உணர்ச்சிகளும் போய்விடும்; எல்லா உணர்ச்சிகளும் போய்விடும். தேவனுடைய வார்த்தையைத் தவிர வேறொன்றும் அங்கு நின்று கொண்டிருக்காது. சாத்தான் அதற்கு விரோதமாக போர் புரிய முடியாது! இல்லை ஐயா! அதற்கு விரோதமாக அவன் போர் புரியமுடியாது. அது உண்மையென்று நமக்குத் தெரியும். 69 இந்த யுத்தங்கள் ஏதேன் தோட்டம் நாட்கள் முதற்கொண்டு மனித சிந்தையில் நடந்து வந்துள்ளன. சாத்தான் அதை தொடங்கினான். அவன் ஏவாளைச் சந்தித்தபோது என்ன செய்தான்? அவன் தேவனுடைய வார்த்தையை மறுதலிக்க வில்லை. ஆனால் அவன் அதற்கு வெள்ளையடித்தான். அவன், 'நிச்சயமாக தேவன் .... (ஆதி - 3:1. பாருங்கள்?) .... அவர் வாக்களித்த இவையனைத்தும்...'' என்றான். தேவனுடைய வார்த்தை உண்மையென்று அவனுக்குத் தெரியும். அவன் நேரடியாக அதை கண்டனம் செய்யமுடியாது. அவன் அதற்கு மேல் சர்க்கரை பூசுகிறான் (sugar-coat). 70 எங்கள் தாயார் எங்களுக்கு மருந்து கொடுப்பது போல். அவர்கள் ஆமணக்கு எண்ணெயில் ஆரஞ்சு பழரசம் கலந்து கொடுப்பார்கள். ஆரஞ்சு பழரசம் இல்லாமலேயே ஆமணக்கு எண்ணெயைக் குடித்துவிடலாம் - அதை மறைக்க ஒரு விதமாக மாய்மாலம்! நாங்கள் இரவு நேரத்தில் எழுந்திருப்பது வழக்கம். எனவே இருமலுக்காக அவர்கள் எங்களுக்கு நிலக்கரி எண்ணெய் கொடுப்பார்கள். அவர்கள் நிலக்கரி எண்ணெயில் சர்க்கரை சேர்த்து கொடுப்பார்கள். பாருங்கள்? ஒரு வகையான மாய்மாலம். அதை உட்கொள்ளும்போது, சர்க்கரை போய் விட்டவுடன், அது தொண்டை சதையை எரித்துவிடும். 71 நண்பர்களே, அப்படித்தான் அது உள்ளது. சாத்தான் அதைக்குறித்து மாய்மாலமுள்ளவனாய் இருக்கிறான். அவன் சுலபமான வழியை ; ஒரு புத்திசாலித்தனமான திட்டத்தை உங்களுக்குக் காண்பிக்க முயல்கிறான். ஆனால் தேவன் தொடக்கத்தில் அளித்ததைக் காட்டிலும் அதிக புத்திசாலித்தனமான திட்டம் எதுவுமில்லை அவருடைய வார்த்தை! (சகோதரன் பிரன்ஹாம் பிரசங்க பீடத்தை மூன்று தடவை தட்டுகிறார் - ஆசி) வார்த்தையைப் பற்றிக் கொள்ளுங்கள், அதை இறுகப்பற்றிக் கொள்ளுங்கள். அதுவும் உங்களை இறுகப்பற்றிக் கொள்ளட்டும். அதில் நிலைத்திருங்கள்! அதுதான் முக்கியம். 72 ஏவாள் தன் சிந்தையைத் திறந்து, அவளுடைய யோசனைக்கு செவி கொடுத்தபோது, யுத்தம் மும்முரமாக ஆனது. அது உஷ்ணம் செலுத்தும் குழாய்க்குள் நுழைந்துவிட்டது. அந்த வாய்க்கால் வழியாக அவளுடைய யோசனை (reasoning) உள்ளே நுழைந்தது. அவள் தன் ஆத்துமாவில் யோசனைசெய்ய ஆரம்பித்தாள். அவளுடைய கண்கள் சர்ப்பத்தைக் கண்டன. காண்பதற்கு அவன் தன் கணவனை விட திடகாத்திரமாக அழகாயிருந்தான். பூமியிலுள்ள எல்லா மிருகங்களைக் காட்டிலும் அவன் தந்திரமுள்ளவனாய் இருந்தான். ஒருக்கால் அவன் தன் கணவனைக் காட்டிலும் அதிக சிவப்பாய் இருந்திருப்பான், அவன் ஆண்மைத் தனம் கொண்ட மிருகமாக அங்கு நின்று கொண்டிருந்தான். அவன் எவ்வளவு பெரியவன், அது எவ்வளவு பெரிய காரியம் என்று அவன் ஏவாளிடம் கூற முயன்றான். அவள் முதலாவதாக செய்தது என்னவெனில், அவள் தன் சிந்தையைத் திறந்து கொடுத்தாள். அவள் அப்படி செய்தபோது, மனித யோசனை அவளை ஆட்கொண்டு, ஓ, அது மிகவும் உணர்ச்சிகரமாக இருக்கும் அல்லவா?'' என்றது. 73 இன்றைக்கும் அவன் ஸ்திரீகளிடம் அதையே செய்கிறான். அழகான கணவன் மார்களைக் கொண்ட சில ஸ்திரீகள், பெரிய, வலிமை வாய்ந்த ஆண்மைத்தனம் கொண்ட மனிதரைக் காணும்போது, அவர்களுடைய சிந்தையை யோசனைக்கு திறந்து கொடுக்கின்றனர். அது சாத்தான், அது பிசாசு என்பதை ஞாபகம் கொள்ளுங்கள் அல்லது மனிதன் அழகான பெண்களைக் காணும் போதும் அப்படி நடக்கிறது, பெண்கள் மனிதர்களைக் கண்டாலும் - இரண்டு விதமாகவும். அவன் என்ன செய்கிறான்? அவன் யோசனை சக்தியின் மூலம் மனச்சாட்சியில் பணிபுரிகிறான். அப்பொழுது அதில் ஏதோ ஒரு அசைவு ஏற்படுகின்றது. தேவனுடைய வார்த்தைக்கு முதலிடம் கொடுங்கள். 74 ஒரு மனிதன் ....... பாவம் செய்யமுடியாது. அல்லேலூயா! இந்த கருத்து புதிதாக உதயமாகிறது. முதலாவதாக ஒரு மனிதன் தேவனுடைய வார்த்தையை அகற்றினாலொழிய, அவன் பாவம் செய்ய முடியாது. அவன் முதலில் தேவனுடைய வார்த்தையையும், தேவனுடைய சமுகத்தையும் தள்ளிவிடாமல் அவனால் பாவம் செய்ய முடியாது. (அதாவது அவிசுவாசிக்க முடியாது).. ஏவாளும் தேவனுடைய வார்த்தையை தள்ளி வைத்துவிட்டு, ஆத்துமாவுக்குச் செல்லும் வாய்க்காலை அவள் யோசனைக்கு திறந்து கொடுத்தபோது தான் அவள் பாவம் செய்தாள். என் கணவர் இவைகளை என்னிடம் கூறவில்லையே, ஆனால் நான் நினைக்கிறேன். நீ.... நான் இதை செய்யக்கூடாது என்று அவர் என்னிடம் கூறினார். ஆனால் நீ அதை தத்ரூபமாக, வெளிப்படையாக சொல்லிவிட்டாய். அது மிகவும் நன்றாயிருக்கும் என்று நினைக்கிறேன். ஏனெனில் அதை நீ எனக்கு மிகவும் வெளிப்படையாய் சொல்லிவிட்டாய்.'' பாருங்கள்? அதுதான் முதலாம் யுத்தம். அன்று ஏதேனில் உண்டான அந்த யுத்தத்தின் மூலம், மற்றெல்லா யுத்தங்களும் இரத்தம் சிந்துதலும் உண்டாயின. அவள் தேவனுடைய வார்த்தையை சந்தேகித்தாள். 75 தேவனுடைய வார்த்தையின் ஒரு சிறு இம்மியை (inta) சந்தேகித்த தன் விளைவாக இவ்வளவு தொல்லைகள் ஏற்படுமானால், தேவனுடைய வார்த்தையை சந்தேகிக்கும் நாம் அங்கு எப்படி செல்லப்போகிறோம்? உங்களால் முடியவே முடியாது. நீங்கள் மனச்சாட்சிக்கும், ஞாபகத்திற்கும், யோசனைக்கும் உங்கள் சிந்தையை அடைத்து விடவேண்டும். 'சிந்தனையை களைந்துவிட்டு.'' நாம் அதைக் குறித்து சிந்தனை செய்வதில்லை.''தேவன் அவ்வாறு கூறியுள்ளார்,'' என்னும் அடிப்படையில் நாம் தேவனுடைய வார்த்தையை ஏற்றுக் கொள்கிறோம். அப்பொழுது அது உங்களுக்கும் தேவனுக்குமிடையே ஒரு அருவியை உண்டாக்கிவிடுகிறது. அப்பொழுது உங்களுக்கும் தேவனுக்கு மிடையேயுள்ள எல்லா வாய்க்கால்களும் திறக்கப்படுகின்றன. அதுதான் யுத்தம், போர்க்களம் . 76 நாம் சிறு .22 துப்பாக்கியை உபயோகிக்க வேண்டாம். ஒரு அணுகுண்டை உபயோகிப்போம். நமது பணியை நாம் சரிவர செய்வோம். தேவனுடைய அணுகுண்டை நாம் பெற்றுக்கொள்வோம். ''அது என்ன, சகோ. பிரன்ஹாம்?'' அது அவருடைய வார்த்தையின் பேரிலுள்ள வி -சு - வா - ச - ம். அதுவே தேவனுடைய அணுகுண்டு. அது வியாதியையும் பிசாசுகளையும் தகர்த்தெறிந்து விடுகிறது, அவைகளை அழித்துவிடுகிறது. அது தேவபக்தியில்லாத எல்லாவற்றையும் சுக்கு நூறாக்கிவிடுகிறது. விசுவாசம் என்னும் அந்த குண்டு தேவனுடைய வார்த்தையை ஆதாரமாகக் கொண்டு விழுமானால், அது எல்லா பிசாசுகளையும், எல்லா வியாதிகளையும் தகர்த்தெறிந்துவிடும். நீங்கள்,''சகோ. பிரன்ஹாமே, அப்படியா? சிலர் மாத்திரம் - சுகமடைகின்றனர், மற்றவர்கள் ஏன் அடைவதில்லை?'' என்று கேட்கலாம். அது வாய்க்காலின் காரணமாக. நீங்கள் தலையை வெளியே நீட்டி அதைக் காணலாம். ஆனால்அதை நீங்கள் உங்களுக் குள் பெற்றிருந்து, அது வெளியே காணப்பட வேண்டும் - வெளியே இருந்து கொண்டு உள்ளே காண்பதல்ல. உள்ளே இருந்து கொண்டு வெளியே காணப்பட வேண்டும். பாருங்கள்? 77 நீங்கள் சிந்தனையின் மூலமாக வரமுடியாது, இந்த மற்றவைகளின் மூலமாக நீங்கள் வரமுடியாது. நீங்கள் தேவனுடைய வாய்க்காலின் வழியாக ஆத்துமாவுக்குள் வரவேண்டும். அதை நீங்கள் எப்படி செய்ய வேண்டும்? கடைசி வாய்க்கால் எது? அது சிந்தனை செய்து,''புலன்கள், ஓ, என்னால் உணரமுடிகின்றது. ஆம், அது அங்கே உள்ளது. அதை என்னால் முகர முடிகின்றது. அவை அங்குள்ளன , ஆம் என்று கூறும். அடுத்தபடியாக நீங்கள் இவ்வாறு சிந்திக்கிறீர்கள்: ''அவர் என்ன கூறுகிறார் என்பதை அறிந்திருக்க வேண்டும். நான் சுகமடையவே முடியாது என்று மருத்துவர் கூறிவிட்டாரே. அது உண்மையாயிருக்க வேண்டும்.'' பார்த்தீர்களா? அங்குதான் நீங்கள் தவறு செய்கின்றீர்கள். அது பிசாசு அங்கு நின்றுகொண்டிருத்தல். பிசாசு அத்தகைய எண்ணங்களை உங்களுக்குள் புகுத்துகிறான். அதை நம்பாதீர்கள். அல்லேலூயா! ''நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும் படி வேண்டுகிறேன்“ என்று தேவனுடைய வார்த்தை கூறுகிறது, அது உண்மை. அங்கு எப்படி நீ உண்மையான இராணுவ வீரனாக இருக்கமுடியும்? ''நீ வாழ்ந்து சுகமாயிருக் கும்படி வேண்டுகிறேன்.'' 78 அங்கு அந்த கால்வாய்கள் உள்ளன. நீங்கள் அவைகளை திறந்து கொடுத்தால்; அவைகளை கடந்து சென்றுவிட விரும்ப வில்லை.சாத்தான் மனச்சாட்சியின் மூலமாகவும், மற்றவைகளின் மூலமாகவும் அவைகளில் புகமுடிந்தால், அவன் சிந்தையின் வழியாக ஆத்துமாவை அடைகிறான். அவன் உங்களை அடைய முடிந்தால்.... அவனை உள்ளே நுழைய நீங்கள் அனுமதிக்கும் வரை அவைகளில் ஒன்றையும் நீங்கள் காண முடியாது. அவனை நீங்கள் உள்ளே அனுமதித்து ஆகவேண்டும். அவன் உள்ளே நுழைந்தால், ஆதிக்கத்தைப் பெற்றுவிடுகிறான். அதன்பின்பு அவன் என்ன செய்கிறான்? அவன் உங்கள் மனச்சாட்சியை உபயோகிக்கத் தொடங்குகிறான், அவன் இதை உபயோகிக்கத் தொடங்குகிறான், இந்த வடிகாலை உபயோகிக்கத் தொடங்குகிறான். அது என்ன? பார்த்தல், ருசி பார்த்தல், உணர்தல், முகர்தல், கேட்டல், கற்பனைகள், மனச்சாட்சி, ஞாபகங்கள், சிந்தனைகள், சிநேகம். இந்த வெவ்வேறு சிறு வாய்க்கால்களை அவன் உபயோகிக்கத் தொடங்குகிறான் -அவைகளில் ஒன்றில் அவன் புகமுடிந்தால். அவன் முதலில் உங்கள் சிந்தையில் வரவேண்டும், அதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். 79 அது ...கவனியுங்கள்! அது உங்களுக்கு விரோதமாக பலமுறை தாக்கும். ஆனால் நீங்கள் அதை ஏற்றுக்கொள்ளும் வரை, அது உங்களில் புகுந்துகொள்ள முடியாது. சாத்தான் ஏவாளிடம் நடந்து சென்று, அந்த பழம் இனிமையானதென்று உனக்குத் தெரியுமா?'' என்று கேட்ட பொழுது, அவள் சற்று நின்று சிந்தித்தாள். அங்குதான்அவள் தவறு செய்தாள் - அவள் சற்று நின்றபோது, நீங்கள் எதற்கும் நின்று சிந்திக்க வேண்டாம். உங்களிடம் செய்தி உள்ளது! இயேசு ஜீவிக்கிறார். தேவன் சுகமளிப்பவர். அதுதான் செய்தி நீங்கள் எதற்கும் நின்று சிந்திக்க வேண்டாம். எதையுமே செய்ய வேண்டாம். ஏவாளோ ஒரு வினாடி நின்று சிந்தித்தாள். அப்பொழுது சாத்தான் அவளுடைய சிந்தையில் புகுந்தான். அவள் அது நியாய மாகத்தான் தோன்றுகிறது'' என்றாள். ஓ, அப்படி செய்யாதீர்கள்! தேவன் கூறினதை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள். 80 தேவன் ஆபிரகாமிடம், அவனுக்கு சாராள் மூலம் ஒரு குழந்தை பிறக்கும் என்று கூறினபோது, அவன் சற்று நின்று சிந்தித் திருந்தால் என்னவாயிருக்கும்? அப்பொழுது அவளுக்கு அறுபத்தைந்து வயது; அவனுக்கு எழுபத்தைந்து வயது. அவனுக்கு நூறு வயதும் அவளுக்கு தொண்ணூறு வயதும் ஆன பின்பும், அவன் தேவனுடைய வார்த்தை உண்மையென்று அறிக்கையிட்டான். அவர் இல்லாதவைகளை இருக்கிறவைகளைப் போல் அழைத்தார். பாருங்கள்? அவன் நம்பினான். அவனுக்கு நம்பிக்கை இருந்ததா? அவன் நம்புகிறேன்' என்னும் வார்த்தையை உபயோகிக்கவில்லை. நீங்கள்,''நான் குணமாகிவிடுவேன் என்று நம்புகிறேன். நான் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்வேன் என்று நம்புகிறேன், நான் கிறிஸ்தவன் என்று நம்புகிறேன், நான் இதை செய்கிறேன் என்று நம்புகிறேன்'' என்று கூறுகின்றீர்கள். அப்படியானால் அது உங்களுக்குத் தேவையில்லை! ஆபிரகாம் அதை பார்க்கவும் கூட இல்லை. ஆமென் அவன் நம்பிக்கைக்கு விரோதமாக தேவனுடைய வார்த்தையை விசுவாசித் தான், விசுவாசமானது நம்பிக்கைக்கு அப்பாற்பட்டதாகும். விசுவாசம் என்பது உள்ளேயிருந்து வருகிறது. அது எங்கிருந்து வருகிறது? அது எப்படி நுழைகிறது? சிந்தை என்னும் கதவின் வழியாய்; அங்குள்ள போர்க்களத்தின் வழியாய். 81 நீங்கள் யுத்தத்தை ஒழுங்கு செய்யும்போது ....... பிசாசு இன்று காலை ஒவ்வொருவருடைய இருதயத்திலும் அமர்ந்திருக்கிறான். அவன் இச்சிறுமியின் இருதயத்தில்அமர்ந்திருக்கிறான்; அவன் உன் இருதயத்தில் அமர்ந்திருக்கிறான். அவன் சுற்றிலும் எல்லாவிடங்களிலும் அமர்ந்திருக்கிறான். அவன், “ஓ, அவர்கள் முன்பு முயற்சி செய்ததை நான் கண்டிருக்கிறேன்; நான் முன்பு கேட்டிருக் கிறேன்'' என்பான். அவனைத் துரத்துங்கள். அவ்வளவுதான், அவனை வெளியே துரத்துங்கள். நாம் படித்த வேத பாகத்தில் என்ன கூறப்பட்டுள்ளது? அவன் கீழே தள்ளப்பட்டான் என்று. அது உண்மை. அவன் தள்ளப்பட்டான். 82 நாம் பயிற்சி பெற்றிருக்கி றோம். போதகர்களே, நமக்கு என்ன நேர்ந்தது? நாம் எத்தகைய பயிற்சி பெற்றுள் ளோம் என்று வியப்புறுகிறேன். தேவன் இந்த உக்கிரமான போருக்காக பயிற்சியளித்து வந்திருக்கிறார். மத்தேயு 24 கூறுகிறது - தானியேல் 12ம் கூட - இதுவரைக்கும் சம்பவித்திராத மிகுந்த உபத்திரவம் பூமியில் உண்டாகும் என்று. நாகரீகமும் கல்வியும் தேவனுடைய வார்த் தையை ஒடுக்கி, மனித சிந்தனைக்கு முக்கியத்துவம் அளித்துள்ள காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். யுத்தம் நடக்கப்போகிறது. யார் நிற்பார்கள்? அல்லேலூயா யுத்தம் தொடங்க ஆயத்தமாயுள்ளது. அவள் அணிவகுத்தி ருக்கிறாள். 83 நமக்கு எவ்வளவு பெரிய எதிர்ப்பு உள்ளதென்று பாருங்கள்.'நீங்கள் சும்மா நின்று கொண்டு விருத்தசேதனமில்லாத பெலிஸ்தியன் ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளை நிந்திப்பதை பார்த்துக் கொண்டிருக்கிறீர்களே! நான் போய் அவனோடு சண்டையிடுவேன்'' என்று கூறின தாவீதைப் போல் யாரிருப்பார்கள்? ஆமென்! (சகோதரன் பிரன்ஹாம் பிரசங்க பீடத்தை மூன்று தடவை தட்டுகிறார் - ஆசி) இன்று காலை எழுந்து நின்று, நான் தேவனுடைய வார்த்தையை அப்படியே ஏற்றுக்கொள்வேன்! ஆமென்! எது தவறினாலும், அவர் என்ன செய்தாலும், இவர் என்ன செய்தாலும் எனக்குக் கவலையில்லை. அதற்கும் இதற்கும் யாதொரு சம்பந்தமுமில்லை என்று கூறும் ஆண்களும் பெண்களும் தேவனுக்கு அவசியமாயுள்ளது. சவுல்களே, நீங்கள் அவனுக்குப் பயந்தால், உங்களுக்குரிய இடத்துக்கு சென்றுவிடுங்கள். ஆனால் தேவனுடைய சேனையோ அணிவகுத்து முன் செல்கிறது. ஆமென்! வீரமுள்ள மனிதர், விசுவாசமுள்ள மனிதர், வல்லமையுள்ள மனிதர், புரிந்துகொள்ளக் கூடிய மனிதர். அவர்கள் சாமர்த்திய முள்ளவர்களாக இருக்க வேண்டுமெனும் அவசியமில்லை. அவர்கள் படித்தவர்களாக இருக்கவேண்டுமெனும் அவசியமில்லை. அவர்கள் வாய்க்கால்களாக இருக்க வேண்டும். தேவன் அந்த சிறு வாய்க்கால்களை எடுத்து உபயோகிக்கிறார். ஏவாள் ஒரு வினாடி நின்று இப்படியா என்று பார்க்கலாம்'' என்று யோசித்தாள். இது போன்றது....... 84 இன்று காலை இங்குள்ள இந்த சிறு சீமாட்டியிடம், அவள் தன் வாழ்க்கை பாதையின் முடிவுக்கு வந்துவிட்டதாக மருத்துவர் அறிவித்திருப்பார். அதைக் குறித்து ஒன்றுமே செய்ய முடியாது. அந்த மருத்துவரை நான் குற்றப்படுத்தவில்லை. அவர் விஞ்ஞான அடிப்படையில் செயல் புரிபவர். அந்த வியாதி அந்த பெண்ணின் உடலில் பரவியுள்ளதை அவர் கவனிக்கிறார். அதை குணமாக்கவே முடியாது. அதை நிறுத்த அவரிடம் மருந்து கிடையாது. எனவே புற்றுநோய் அந்த பெண்ணை மேற்கொண்டுவிட்டது. நிச்சயமாக. மரணம் அந்த குழந்தையை மேற்கொண்டுவிட்டது. ஆனால் இந்த நமது மகத்தான இராணுவ தளபதி (அல்லேலூயா) உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறார். ஒன்றும் அவரை ஜெயங்கொள்ள முடியாது. அல்லேலூயா! 85 இராணுவத்தின் ஞானம் அனைத்துமே தளபதிகளில் உள்ளது. ஜெர்மனி தேசத்தின் ராமன் என்பவர் ஜெர்மானிய இராணுவத்தின் ஞானமாக விளங்கினார் - ஹிட்லர் அல்ல, ராமல். அது உண்மை . இராணுவ தளபதியாகிய ஐசன்ஹவர், பாட்டன் போன்றவர்கள் போர்க்களத்தில் இருந்தனர். எந்த வழியில் இராணுவம் செல்ல வேண்டுமென்று அவர்கள் கட்டளையிட்ட னரோ, அதை சார்ந்து வெற்றி அமைந்திருந்தது. நீங்கள் உங்கள் தளபதியை பின்பற்றுங்கள்! அவர் சரியான தளபதியாக இருந்தால், அவர் நான்கு நட்சத்திரங்கள் பெற்றவராக இருந்தால், அவர் சரியானவர் என்று நிரூபிக்கப்பட்டிருந்தால், அவரைப் பின்பற்றுங்கள்! அது தவறு என்று ஒருக்கால் உங்களுக்கு தோன்றினாலும், போர்க்களத் திற்கு சென்று அவருடைய கட்டளையின்படி செய்யுங்கள். அல்லேலூயா! 86 நமக்கு இயேசு என்னும் ஐந்து நட்சத்திரங்களைப் பெற்ற தளபதி இருக்கிறார் (ஆங்கிலத்தில்) J-E-S-U-S ஐந்து எழுத்துக்களைக் கொண்டது - தமிழாக்கியோன்). அவர் விசுவாசம் என்னும் ஐந்து நட்சத்திரங்களை நம்மேல் வைத்துள்ளார் (ஆங்கிலத்தில் F-A-I-T-H ஐந்து எழுத்துக்களைக் கொண்டது -தமிழாக்கியோன்). அவர் ஒரு யுத்தத்திலும் கூட தோற்றதில்லை. அல்லேலூயா! (சகோதரன் பிரன்ஹாம் பிரசங்க பீடத்தை ஒரு தடவை தட்டுகிறார் - ஆசி) அவர் மரணம், பாதாளம், கல்லறை இவைகளின் மேல் வெற்றி சிறந்துள்ளார். பிசாசுகளை வழியிலிருந்து விலக்குங்கள். அவரே மகத்தான தளபதி. எனவே பிசாசுகள் அங்கு வருவதேயில்லை. 87 இதுவரை நடந்த யுத்தங்களிலேயே மிகப்பெரிய யுத்தம் இப்பொழுது ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது. நிச்சயமாக. ஓ, அல்லேலூயா அதை நான் நினைத்துப் பார்க்கும்போது, அங்கு நான் நின்று கொண்டு அவர் செய்யும் காரியங்களை கவனிக்கும் போது; அவர் காரியங்களை வெளிப்படுத்தி, ''இது இப்படி இருக்கும், அது அப்படி இருக்கும்'' என்று வெளிப்படையாக அறிவித்து அது உண்மையாக இருக்கும்போது, நான் திரும்பிப் பார்த்து, ''யார் இந்த சிறந்த தளபதி?'' என்று கூறுகின்றேன். நான் திரும்பிப் பார்த்து, எந்த சிறந்த மருத்துவர் அப்படி கூறினார் என்று பார்ப்பதில்லை. நமது தளபதி என்ன கூறியுள்ளாரோ, அதைத்தான் நான் காண்கிறேன். அவர் நமது இரட்சிப்பின் அதிபதி. அல்லேலூயா!இரட்சிப்பு என்றால் என்ன? விடுவித்தல்! மகிமை! அவர் நம்மை விடுவிக்கும் அதிபதியாக இருக்கிறார். 88 'திடீர் தாக்குதல்' (Charge) செய்ய வேண்டிய மகத்தான மணி நேரம் அருகில் உள்ளது. அல்லேலூயா! இராணுவ வீரர்கள் பளபளப்பான ஆயுதங்களுடன் கண்ணைக் கவரும் வண்ணங்களுடைய சீருடைகளுடனும் நின்று கொண்டிருக்கின் றனர். இன்று காலை இக்கூடாரத்தில் விசுவாசமும் சந்தேகமும் ஒன்றுக்கொன்று எதிராக அணிவகுத்துள்ளன - சந்தேகம் ஒரு பக்கமும், விசுவாசம் மற்றபக்கமும், வீரர்களே, உங்கள் பணியில் அயராது நில்லுங்கள் அல்லேலூயா! நமது தளபதி - விடிவெள்ளி நட்சத்திரம் - நம்மை நடத்திச் செல்கிறார். அவர் பின் வாங்குவதே (retreat) கிடையாது. அவருக்கு பின்வாங்குதல் என்னும்வார்த்தையே தெரியாது. அவர் பின்வாங்க வேண்டிய அவசியமில்லை. ஆமென் நிச்சயமாக. இதுவரை சண்டையிட்டதிலேயே மிகப்பெரிய யுத்தம் இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது (ஆம், ஐயா!) - ஜீவனுக் கும் மரணத்துக்கும் இடையே, வியாதிக்கும் சுகத்துக்கும் இடையே, விசுவாசத்துக்கும் சந்தேகத்துக்கும் இடையே (ஓ, என்னே!), விடுதலைக்கும் அடிமைத்தனத்துக்கும் இடையே யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. வீரர்களே, உங்கள் ஈட்டிகளை கூர்மையாக்குங்கள், உங்கள் ஆயுதங்க ளுக்கு மெருகேற்றுங்கள். 89 தேவன் தமது வீரர்களை ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறார். ஆமென் தேவன் தமது சேனையை அபிஷேகிக்கிறார். அமெரிக்கா தனது இராணுவ வீரர்களை இரும்பு தலைப்பாகை, ஆயுதங்கள் போன்றவைகளினால் சிறப்பாக உடுத்துகின்றது. அவர்களுக்கு யுத்த தளவாடங்களையும், பீரங்கிகளையும், அதற்கு அவசியமாயுள்ள எல்லாவற் றையுமே அளிக்கிறது. தேவனும் தமது சேனையை உடுத்துகின்றார். அல்லேலூயா! நாம் எத்தகைய ஆயுதங்களை உபயோகிக்கிறோம்? தேவனுடைய வார்த்தையாகிய ஆவியின் பட்டயம். ஆமென்! தேவனுடைய வார்த்தையானது இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமா வையும் கணுக்களையும் ஊடுருவக்குத் துகிறதாயும், இருதயத்தின் நினைவு களையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது. தேவனுடைய வார்த்தை . அவருடைய வார்த்தையை நாம் விசுவாசிக்க வேண்டும். அப்படித்தான் தேவன் நமக்கு ஆயுதந்தரிப்பிக்கிறார். 90 ஏவாளுக்கும் அவர் அந்த ஆயுதத்தை தான் கொடுத்திருந்தார். ஆனால் அவளோ அவளுடைய ஆயுதத்தை உடைத்துப் போட்டாள். அவள் எப்படி அதை செய்தாள்? தன் சிந்தையை யோசனைக்கு (reasoning) திறந்து கொடுத்த தன் மூலம். நீங்கள் தேவனுடைய வார்த்தையை சரியா தப்பாவென்று யோசனை (reason) செய்வ தில்லை. அதற்கு யோசனை அவசியமில்லை. தேவனுடைய வார்த்தையை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். அதைக் குறித்து எவ்வித சந்தேகமும் படக்கூடாது. அதற்கு எவ்வித யோசனையும் கிடையாது. அது தேவனுடைய வார்த்தை. அத்துடன் அது சதாகாலங்களிலும் முற்று பெற்று விடுகிறது. தேனே, நான் கூறுவது புரிகிறதா? தேவனுடைய வார்த்தை . தேவன் வாக்களித்தார். தேவன் அவ்வாறு கூறினார். 91 அவர்கள் ஆபிரகாமிடம்,''உனக்கு குழந்தை பிறக்குமென்று எப்படித் தெரியும்?'' என்று கேட்டார்கள். அவன், ''தேவன் கூறினார்'' என்றான். அத்துடன் அது முற்று பெற்றுவிட்டது. ''பின்னை ஏன் உனக்கு இன்னும் குழந்தை கிடைக்கவில்லை?'' ''எனக்கு எப்பொழுது கிடைக்குமென்று தெரியாது. ஆனால் அது எனக்குக் கிடைக்கும். தேவன் அவ்வாறு கூறினார். அது என்னை சிறிது கூட சந்தேகிக்கச் செய்யாது.'' 'நீ ஏன் உன் இடத்திற்கு திரும்பி செல்லக்கூடாது?'' ''நான் இந்த தேசத்தில் அந்நியனும் சஞ்சாரியுமாய் இருக்க வேண்டும். ஆமென். 'தேவன் வாக்களித்துள்ளார். எனவே அவர் அனுப்பியுள்ள இந்த தேசத்தில் குழந்தையைக் கொடுப்பார். 92 ''அல்லேலூயா! தேவன் உங்களை அனுப்பியுள்ள இந்த பரிசுத்த ஆவியின் சூழ்நிலையில் உங்களுக்கு சுகத்தைக் கொடுப்பார். (சகோதரன் பிரன்ஹாம் பிரசங்க பீடத்தை மூன்று தடவை தட்டுகிறார் - ஆசி) அவர் அதை உங்களுக்குத் தருவார். நீங்கள் விசுவாசியுங்கள்! ஆமென். ஆத்துமா, சரீரம், புலன்கள், மனச்சாட்சி என்னும் உஷ்ணம் செலுத்தும் குழாய்களை (flues) திறந்து கொடுங்கள்.... தேவனுடைய வார்த்தைகள் ஊடுருவ விட்டுக்கொடுங்கள். முதலில் சிந்தையை எடுத்துக்கொள்ளுங்கள். அதுதான் போர்க்களம். ஓ, என்னால் அதை உணர முடிந்தால் ....'' என்று கூற வேண்டாம். அதற்கும் இதற்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை. உங்கள் சிந்தையைத் திறந்து கொடுங்கள். அதுதான் போர்க்களம். அங்குதான் யுத்தத்திற்காக அணிவகுக்கப்படுகின்றது - இந்த போர்க்களத்தில் தான், உங்கள் சிந்தையில் அதை திறந்து கொடுத்து, ''நான் .... எல்லா சந்தேகங்களையும்; என் சந்தேகங்களை நான் சந்தேகிக்கிறேன்'' என்று கூறுங்கள். ஆமென்! ''என் சந்தேகங்களை நான் சந்திக்கிறேன், தேவனுடைய வார்த்தையை நான் விசுவாசிக்கிறேன். சாத்தானே, இதோ நான் எதிர்க்க வருகிறேன்'' என்று கூறுங்கள். ஏதோ ஒன்று நிச்சயமாக நிகழும்.ஆம், ஐயா! 93 அவர் தமது ஊழியக்காரர்களை தமது ஆவியினால் அபிஷேகிக்கிறார். அவர் அவர்களிடம் தேவதூதர்களை அனுப்புகிறார். சில நேரங்களில் ஜனங்கள் அதைக் குறித்து பரிகாசம் செய்கின்றனர் - தேவதூதர்கள் வருவதைக் குறித்து. உங்களுடன் ஒரு நிமிடம் நான் வேதாகமத்தைத் திருப்ப விரும்புகிறேன். ஒரு நிமிடம் எபிரெயர் நிருபத்திற்கு வேதாகமத்தைத் திருப்புவோம். எபிரெயர் 4ம் அதிகாரம், இல்லை , முதலாம் அதிகாரம் 14ம் வசனம் : இரட்சிப்பைச் சுதந்தரிக்கப் போகிறவர்களினிமித்தமாக ஊழியஞ் செய்யும்படிக்கு அவர்களெல்லாரும் அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாயி ருக்கிறார்களல்லவா? ''நீர் என்னுடைய வலது பாரிசத்தில் உட்காரும்'' என்று தூதர்களில் யாருக்காவது எப்பொழுதாகிலும் அவர் சொன்ன துண்டா ? தேவதூதர்களிடம். 94 தேவன் தூதர்களை அனுப்புகிறார் என்று வேதம் நமக்கு உறுதியாக கூறுகின்றது. மகிமை! அவர்கள் யார்? பணிவிடை : ஆவிகள். மகிமை! இந்த பணிவிடை ஆவிகள் எங்கிருந்து அனுப்பப்படுகின்றன? தேவனுடைய சமுகத்திலிருந்து. என்ன செய்வதற்காக? அவருடைய வார்த்தையை போதிப்பதற்காக. ஆமென்! நீங்கள் ஏதோ ஒரு ஸ்தாபன குழுவின் வேததத்துவத்தை போதிக்கக்கூடாது. அவருடைய வார்த்தையை நீங்கள் போதிக்க வேண்டும். அவை அனுப்பப்படும் அவருடைய பணிவிடை ஆவிகள். அவை பணிவிடை ஆவிகள் என்று நாம் எவ்வாறு அறிவோம்? தேவனுடைய வார்த்தை தீர்க்கதரிசிகளிடம் வந்ததென்று வேதம் கூறுகிறது. அது சரியா? இந்த தேவதூதர்கள் அவருடைய ஆவியின் மூலமாக - பரிசுத்த ஆவியின் மூலமாக - அவருடைய வார்த்தையை அளிக்கின்றனர். ஆவியும் வார்த்தையும் தீர்க்கதரிசிகளிடம் வந்தது. தீர்க்கதரிசிகள் தேவனுடைய வார்த்தையைக் கொண்டிருந்தனர். அதனால் தான் அவர்களால்அற்புதங்களைச் செய்ய முடிந்தது. அது மனிதனல்ல, மனிதனுக்குள் ளிருந்த தேவனுடைய ஆவி ; தேவனுடைய வார்த்தைக்காக, மனிதனிலிருக்கும் கிறிஸ்துவின் ஆவி .... அவன் என்ன செய்தான்? ஒவ்வொரு வாய்க்காலையும் சுத்தப்படுத்தினான். தேவன் அவனைத் தெரிந்துகொண்டார். அவன் பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் பண்ணப்பட்டான். அது அவனல்ல. அவன் தரிசனத்தில் ஒன்றைக் காணும் வரைக்கும், அதை செய்யவே மாட்டான். எலியா கர்மேல் பர்வதத்தின் மேல் நின்றுகொண்டு, 'இவை எல்லாவற்றையும் உம்முடைய வார்த்தை யின்படியே செய்தேன். நீர் தேவன் என்று இன்றைக்கு விளங்கப்பண்ணும்'' என்றான் . ஓ , தேவனுக்கு மகிமை! 95 அதை நான் அநேகமுறை கண்டிருக்கிறேன். தேவனுடைய ஆவி ஓரிடத்திற்கு வந்து அந்த இடத்தை அபிஷேகிப்பதை நீங்கள் காணும்போது; இன்று காலை இங்குள்ள இந்த சிறு கூட்டம் மாத்திரம் தங்கள் சிந்தையை செலுத்தி, எல்லா சந்தேகங்களையும் வழியிலிருந்து விலக்குவார்களானால் மரித்தோர் உயிரோடெழுவதையும், சப்பாணிகள் நடக்கிறதையும், குருடர் பார்வையடைகிற தையும், செவிடர் கேட்கிறதையும் நீங்கள் காணும்போது, நீங்கள் இன்னும் எப்படி சந்தேகிக்க முடியும்? 96 கர்த்தருடைய தூதனின் புகைப்படம் இங்கு சுவரில் தொங்கிக்கொண்டிருக்கிறது. அது விஞ்ஞானத்தை திகைக்க வைத்துள்ளது. அவர் என்ன செய்கிறார்? வார்த்தையில் நிலை கொள்கிறார். ஆமென் அது பிசாசுகள் அனைத்தையும் முறியடிக்கிறது. ஆம், அது அப்படித்தான் செய்கிறது? அது என்ன? வார்த்தையில் நிலைகொண்டு, வார்த்தையை போதிக்கும் போதகர்களை அபிஷேகிப்பதற்கென அவை தேவனுடைய சமுகத்திலிருந்து அனுப்பப்பட்ட பணிவிடை ஆவிகள். அவர் அடையாளங்களினால் வார்த்தையை உறுதிப்படுத்துகிறார். அது நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிற இயேசு கிறிஸ்துவைக் கொண்டு வருகிறது. அவர் அங்குவருகிறார். அவர் விஞ்ஞான ரீதியாகவும், உலகப் பிரகாரமாகவும், ஆவிக்குரிய பிரகாரமாகவும், எல்லா விதங்களிலும் இங்கேயும் நிரூபித்திருக்கும் போது, நாம் எப்படி சந்தேகிக்க முடியும்? காரியம் என்ன? அது நமது சிந்தையிலுள்ளது, அது நமது சிந்தைகளை சந்தேகத்துக்கு திறந்து கொடுத்து, 'ஓ, அது முடியுமா இல்லையா என்று தெரியவில்லை. நாளை நான் சற்று சுகமானேன் என்று உணர்ந்தால்...'' என்கிறோம். ஓ, அதற்கும் இதற்கும் எவ்வித தொடர்புமில்லை. 97 நான் அடிக்கடி கூறுவதுண்டு. ஆபிரகாம் ஒருக்கால் சாராளிடம் கூறியிருப்பான்... அவள் ஸ்திரீயின் பருவத்தைக் கடந்திருந் தாள் (நான் என்ன கூறுகிறேன் என்று புரிந்து கொண்டிருப்பீர்கள்), அவளுடைய ஜீவனின் காலத்தை, இருபத்தெட்டு நாட்களை . பாருங்கள்? அவளுக்கு அப்பொழுது அறுபத்தைந்து வயது. அப்பருவத்தைக் கடந்து பதினைந்து, இருபது ஆண்டுகளா யிருக்கும். அவன் அடுத்த சிலநாட்களுக்குப் பின்பு,“அன்பே, ஏதாவது வித்தியாசம் தெரிகிறதா?'' என்று கேட்டிருப்பான். ''ஒரு வித்தியாசமும் இல்லை.'' “அதற்கும் இதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. நாம் அடைந்தே தீருவோம். நல்லது , இப்பொழுது, நீ வாலிப ஸ்திரீயாக மாறி, ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு உனக்குத் தொடங்கினால், அது குழந்தையை அணைத்துக்கொண்டு எல்லாம் சரியாகிவிடும் என்று நாமறிவோம். இன்று ஏதாவது வித்தியாசம் தெரிகிறதா? அவர் எனக்கு வாக்களித்து ஒரு மாதம் ஆகிவிட்டது. அன்பே, ஏதாவது வித்தியாசம் தெரிகிறதா?'' ஆபிரகாமே, சிறிதளவு வித்தியாசம் கூட இல்லை. எந்த ஒரு அறிகுறியும் இல்லை. சில ஆண்டுகளாக நான் எப்படி இருந்து வந்தேனோ அப்படித்தான் இப்பொழுதும் இருக்கிறேன். சிறிதளவு வித்தியாசமும் இல்லை.'' 'தேவனுக்கு மகிமை, எப்படியும் நாம் அடைந்தே தீருவோம்.'' 98 ''ஆபிரகாமே, அப்படியா நினைக்கிறீர்கள்? அவர் உங்களுக்கு வாக்களித்திருந்தால், இந்த விதமாக ஒரு அடையாளத்தை நமக்கு கொடுத்திருப்பாரே, நிச்சயமாக ஒரு அடையாளத்தைக் கொடுத்திருப்பாரே“! அல்லேலூயா! பெலவீனமான விபச்சாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள். அது உண்மை !அவனுக்கு ஒரு அடையாளம் இருந்தது. அது என்ன? தேவனுடைய வார்த்தை . அதுதான் இந்த விதமாக ஒரு அடையாளத்தை நமக்கு கொடுத்திருப்பாரே. தேவன் தமது பிள்ளையை எப்படி சுகப்படுத்துவார்? தேவனுடைய வார்த்தை அவ்வாறு வாக்களித்துள்ளது. எனக்கு உணர்ச்சி ஏற்பட்டாலும் ஏற்படாமல் போனாலும், என்ன நேர்ந்தாலும், தேவன் அவ்வாறு வாக்களித்துள்ளார். அத்துடன் அது முற்று பெற்றுவிடுகிறது. 99 ஆபிரகாம் சாராளிடம், ''குழந்தைக்கு குல்லாய், மற்றெல்லாவற்றையும் எடுத்துக்கொள். நாம் வேறு தேசத்திற்குப் போகின்றோம் என்றார்.'' ''எங்கு போகின்றோம்?'' 'எனக்கு தெரியாது (ஆமென்!). ஆயினும் நாம் போகின்றோம், புறப்படலாம். ''எல்லாவற்றையும் மூட்டைக் கட்டிக் கொண்டு அவர்கள் புறப்படுகின்றனர். அல்லேலூயா அதுதான் உண்மையான தேவனுடைய வார்த்தை. அவனை எது உறுதியாக நிலைகொள்ளச் செய்தது? நாம் நிச்சயமாக அடைவோம்'' என்னும் தேவனுடைய வாக்குத்தத்தம், தேவனுடைய வார்த்தை. 100 ஆபிரகாமே, உன் ஜனங்களை விட்டுப் பிரிந்து வா. ஏனெனில் அவர்கள் சந்தேகக்காரர்கள், அவிசுவாசிகள். அவர்கள் உன்னையும் அந்நிலைக்கு ஆளாக்குவார்கள். நீ அவர்களை விட்டுப் பிரிந்து வந்து எனக்காக வாழ்வாயாக?'' அது என்ன? அது என்ன?'' உன் மனச்சாட்சி, புலன்கள், அடையாளங்கள் எல்லாவற்றை யும் விட்டு விடு. உன் சிந்தையைத் திறந்து கொடு. அது நான் என்று நினைவுகூரு. வந்து என்னுடன் வாழ்வாயாக.“ ஆமென்! இன்று காலை தேவன் ஆபிரகாமின் சந்ததியார் ஒவ்வொருவரையும் அவ்வித மான வாழ்க்கைக்கு அழைக்கிறார். (சகோதரன் பிரன்ஹாம் பிரசங்க பீடத்தை நான்கு தடவை தட்டுகிறார்- ஆசி) இப்பொழுது உலகம் பூராவும் பெரிய யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. தேவன் தமது பிள்ளைகளை எவைகளினின்று பிரிந்து வரும்படி விரும்புகிறார்? ருசி பார்த்தல், உணர்தல், முகர்தல், கேட்டல் கற்பனைகள், மனச்சாட்சி, ஞாபகங்கள், யோசனை, சிநேகம் போன்ற எல்லாவற்றினின்றும். அவர்கள் தங்கள் சிந்தையைத் திறந்து கொடுத்து, வார்த்தை உள்ளே வரும்படி அனுமதித்து, வார்த்தையுடன் அணிவகுத்து செல்லவேண்டுமென்று அவர் விரும்புகிறார். அப்படி செய்பவன் தான் உண்மையான இராணுவ வீரன். 101 அப்படித்தான் நட்சத்திரங்கள் நின்று கொண்டிருக்கின்றன. சூரியன் - கிரகங்கள் அமைப்பு (SolarSystem) மாறவேயில்லை. வானராசிகள், விடிவெள்ளி நட்சத்திரம், பூமி சிருஷ்டிக்கப்பட்ட நாள் முதற்கொண்டு, ஒவ்வொரு காலையிலும் அதேவிதமாக எழும்பிப் பிரகாசித்து தம் பணியை செய்கின்றன. மாலை நட்சத்திரம் மாலையில் தன் இடத்தை எடுத்துக் கொள்கிறது. ஒவ்வொரு நட்சத்திரமும், அந்த சிறு டிப்பர் (dipper)உட்பட, அது எந்த இடத்தில் இருக்க வேண்டுமென்று குறிக்கப்பட்டுள்ளதோ, அங்கேயே உள்ளது. வடக்கு நட்சத்திரம் அசையாமல் நிலையாக நிற்கிறது. அல்லேலூயா! மற்றெல்லாமே வடக்கு நட்சத்திரத்தை சுற்றி வருகிறது. ஏனெனில் அது பூமியின் நடுவில் உள்ளது. அது கிறிஸ்து. ஆமென்! 102 அவர் அங்கு நின்றுகொண்டு, ஒரு பெரிய தளபதியைப் போல் தமது சேனைகளுக்குக் கட்டளையிடு கிறார். மோசே கையையுயர்த்தினவனாய் மலையின் மேல் நின்று கொண்டிருந்தது போல. இஸ்ரவேல் ஜனங்கள் போர் புரிந்து, எதிரிகளை முறியடித்து முன்சென்று கொண்டிருந்தனர். மோசே உயர்த்தின் கரங்களுடன் அங்கு நின்றுகொண்டிருந்தான்.சூரியன் அஸ்தமிக்கும் வரைக்கும் அவன் உயர்த்தின் கரங்களுடன் அங்கு நின்றுகொண்டிருந்தான். அவர்கள் அவனுடைய கரங்களை உயரப் பிடித்துக்கொள்ள வேண்டியதாயிருந்தது. அது மோசே. அவன் இயேசுவுக்கு முன்னடையாளமானவன். இயேசுவின் கரங்கள் உயர்த்தப்பட்டுள்ளன என்று உறுதிப்படுத்த, அவை சிலுவையில் ஆணியடிக்கப்பட்டன. அல்லேலூயா! அவர் மகிமையின் பாதுகாப்பு அரணுக்கு (ramparts) இரத்தம் தோய்ந்த தமது ஆடையுடன் ஏறிச்சென்று, இன்று தேவனுடைய மகத்துவத்தின் வலது பாரிசத்தில் அவருடைய சமுகத்தில் இருக்கிறார். எனவே ஒவ்வொரு இராணுவ வீரனும் தன் யுத்தத்தில் வெற்றிபெற்று, தேவனுடைய வார்த்தையுடன் முன்னேறுவான் (என்னநேர்ந்தாலும் எனக்குக் கவலையில் லை). அவன் தாமே போரிட்டு விடுதலைக்குச் சென்றுவிடுவான். ஆமென்! 103 முட்டையிலுள்ள கோழிக்குஞ்சு வெளியே எட்டிப் பார்க்க பயந்தால் என்னவாகும்? முட்டையை தன் அலகினால் கொத்த பயந்தால் என்னவாகும்? வெளியிலிருந்து ஒரு சத்தம், அந்த முட்டை ஓட்டை கொத்தாதே; உனக்கு சாபம் உண்டாகும் என்று கூறினால் என்னவாகும்? ஆனால் இயற்கையே - அந்த கோழிக் குஞ்சுக்குள் இருக்கும் தன்மையே - 'அதை கொத்தி துளையுண்டாக்கு“ என்று கூறுகிறது. ஸ்தாபனங்கள் அனைத்துமே , அற்புதங்களின் நாட்கள் கடந்துவிட்டன. உனக்கு தீங்கு ஏற்படும். நீ மூடவைராக்கியத் துக்குள் நுழைகிறாய்'' என்று கூறட்டும். நீங்களோ உங்களால் முடிந்தவரை ஓட்டை கடினமாகக் கொத்துங்கள். அல்லேலூயா! ''சாத்தானே, அப்பாலே போ . இதிலிருந்து நான் வெளிவரப் போகின்றேன். நான் அதற்குள் இனிஇருக்கமாட்டேன். பழைய பிசாசின் ஆதிக்கத்தில் நான் இருக்கமாட்டேன். இன்று காலை நான் கொத்தி வெளிவரப் போகின்றேன். ஆமென்! நான் ஒரு கழுகு'' என்று கூறுங்கள். ஆமென்! அல்லேலூயா! 104 அந்த கோணல் கழுத்து கழுகுக் குஞ்சு அந்த முட்டை ஓட்டைக் கொத்துகிறது. அது எவ்வளவு கடினமாயிருந்தாலும், அது கொத்தி வெளிவருகிறது. முதலாவதாக அது சிறகுகளை சற்று அடித்து பார்க்கிறது. அது சரியாயுள்ளது. - நீங்கள் கொத்தி வெளி வாருங்கள்! அது உண்மை. நீங்கள் எப்படி அதை செய்வீர்கள்? கர்த்தர் உரைக்கிறதாவது, கர்த்தர் உரைக்கிறதாவது, கர்த்தர் உரைக்கிறதாவது, என்பதனால் தகர்த்தெறிந்து. முடிவில் உங்களால் சிறிது தூய காற்றை சுவாசிக்கு முடிகிறது. கர்த்தர் உரைக்கிறதாவது - உங்கள் தலைவெளியே வந்துவிட்டது. கர்த்தர் உரைக்கிறதாவது - கடினமாக தள்ளுங்கள். நீங்கள் வெளியே வந்து கொண்டிருக்கிறீர்கள். கழுகுக் குஞ்சு வெளியே வந்த பிறகு, மறுபடியும் முட்டைக் குள் செல்வதில்லை. ஆமென்! அது விடுதலையாகி விட்டது. ஓ, என்னே! புலன்கள், மனச்சாட்சி வழியாக அந்த வார்த்தை இங்கு அடைந்த பின்பு ; சிந்தை திறந்து கொடுத்து அதை உள்ளே அனுமதித்தபின்பு (ஓ, தேவனே, இரக்கமாயிரும்), மறுபடியும் அடிமைத்தனம் இல்லை. நீங்கள் விடுதலையடைந்து விட்டீர்கள். குமாரன் யாரை விடுதலை யாக்கினாரோ, அவன் முட்டையிலிருந்து வெளி வந்தவன். 105 உங்கள் ஸ்தாபனம் உங்களை மறுபடியும் அழைக்க முடியாது. பிசாசு உங்களை ஒன்றும் செய்ய முடியாது. அவன் உங்களைப் பார்த்து சத்தமிடுவான், ஆனால் நீங்களோ பெரும்பாதை அதிவேகமாய் போய்க் கொண்டிருக்கிறீர்கள் - ஓ, என்னே, ராஜாவின் பெரும் பாதையில், அபிஷேகம் பண்ணப்பட்ட சிலுவையின் வீரர்களாக. 'இயேசு இவ்வுலகத்தின் ஒளி என்று விசுவாசித்து பறைசாற்றும் கழுகுகளாகிய நீங்கள் அனைவரும் ராஜாவின் பெரும் பாதையில் சென்று கொண்டிருக்கிறீர்கள். 106 நிச்சயமாக! ஆம் ஐயா! இவை போதகர்களாயிருக்க, (ministers) தேவனுடைய சமுகத்திலிருந்து அனுப்பப்பட்ட பணிவிடை ஆவிகள் (ministering spirits). எதற்கு பணிவிடை செய்ய? வார்த்தைக்கு ஏதோ ஒரு வேத சாஸ்திரத்துக்கு அல்ல, தேவனுடைய வார்த்தைக்கு. அவை பணிவிடை செய்வதற்கென்று தேவனுடைய சமுகத்திலிருந்து அனுப்பப்படும் பணிவிடை ஆவிகள். அது வார்த்தைக்குப் பதிலாக, வேறு ஏதாவதொன்றுக்குப் பணிவிடை செய்தால், அது தேவனிடத்திலிருந்து வந்ததல்ல. ஏனெனில் உம்முடைய வார்த்தை எப்பொழுதுமே பரலோகத்தில் நிச்சயிக்கப்படுகிறது, தேவன் அதை கவனமாகப் பாதுகாக்கிறார். வார்த்தையைத் தவிர வேறெதாவதொன்றைப் போதிக்க அவர் ஒருபோதும் ஒரு ஆவியை அனுப்பமாட்டார். அவர் பெரிய டாக்டர் பட்டங்களைக் கொண்ட ஒரு ஆவியை அனுப்பி, அவரும் தன் கழுத்துப்பட்டையை பின்னால் திருப்பி விட்டுக்கொண்டு, அற்புதங்களின் நாட்கள் கடந்துவிட்டன. அது நம்மெல்லாருக்கும் தெரியும்' என்று கூற மாட்டார். இல்லை! இல்லை! அது தேவனிடமிருந்து வந்த ஆவியல்ல. அது வார்த்தைக்கு முரணாயுள்ளது. ஆமென்! அவர் வார்த்தையின் ஆவிக்கு பணிவிடை செய்யும் ஆவிகளையே அனுப்புகிறார். ஆமென்! (இன்னும் நான்கைந்து காரியங்கள் உள்ளன. அவைகளை இப்பொழுது விட்டு விட்டு, அடுத்த ஞாயிறன்று எடுத்துக் கொள்கிறேன். சரி!). 107 சாத்தானும் அவனுடைய பிசாசுகளும் அபிஷேகம் பண்ணப்பட்டிருக்கின்றனர். இந்த தூதர்களின் ஆவிகள் உங்களிடம் வார்த்தையைக் கொண்டுவர, நீங்கள் வார்த்தையை நம்பச் செய்ய, அபிஷேகம் பண்ணப்பட்டிருக்குமானால் ....... ஒரு தீர்க்கதரிசி - உண்மையான தீர்க்கதரிசி - தேவனுடைய வார்த்தையை மறுதலிப்பதை நீங்கள் கேட்டதுண்டா ? (சபையார் ''இல்லை'' என்கின்றார் - ஆசி) இல்லை, ஐயா அவர்களுடைய நாட்களிலிருந்த ஸ்தாபனங்கள் எழும்பி, ''அவன் தவறு என்று சொன்னபோது, என்ன நிகழ்ந்தது? அவன் தனக்குத்தானே, தன்னந்தனியாக நின்று, ''அது சரி'' என்றுரைத்தான். 108 அந்த நாளிலே அந்த சிறு உருளும் பரிசுத்தனான மிகாயாவை - இம்லாவின் குமாரனை -பாருங்கள். அங்கு அபிஷேகம் பண்ணப்பட்டவராய் கருதப்பட்ட நானூறு பேர் இருந்தனர். அவர்கள் கொழுத்த உணவைத் தின்று, பெரிய பட்டங்களைப் பெற்று, அதிகமாகப் படித்து, மெருகேற்றப் பட்ட அறிவாளிகளாக இருந்தனர். அவர்கள்,''விசுவாசமுள்ள எங்கள் ராஜாவே , போம்! கர்த்தர் உம்மோடு இருப்பாராக! அந்த தேசம்நமக்குச் சொந்தமானது. அதை யோசுவா நமக்குத் தந்தான். நீர் போய் அதை கைப்பற்றிக்கொள்ளும். நாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை . நீர் போய் அதை கைப்பற்றிக்கொள்ளும்'' என்றனர். ஆனால் யோசபாத் என்ன சொன்னான்? ''இங்குள்ள வேறு யாருமில்லையா?' என்று கேட்டான். அவர்களிடம் நானூறு பேர் இருந்தனர். அவர்கள் ஏன் இந்த நானூறுபேரை விசுவாசிக்கக் கூடாது? அவன், ''நிச்சயமாக எங்கோ வேறொருவன் இருக்க வேண்டும்'' என்றான். ''எங்களிடம் ஒருவன் இருக்கிறான், வேறொருவன் இருக்கிறான். ஆனால் ஓ, அவனை நான் வெறுக்கிறேன்.'' அஷ், பாருங்கள்? ''அவன் கூறுவதைக் கேட்கவே நான் விரும்புகிறேன்.'' பாருங்கள்? அவனைக் கொண்டு வாருங்கள். அவன் என்ன சொல்லுகிறான் என்று பார்ப்போம்“ என்றான். 109 எனவே அவர்கள் மிகாயாவிடம் வந்து, நன்றாக கவனி! இன்று காலை உன் பிரசங்கத்தை சரிபடுத்திக்கொள். ஏனெனில் நீ ராஜாவுக்கு பிரசங்கிக்கப் போகின்றாய். நீ பாலஸ்தீனாவிலுள்ள இன்னார் இன்னார் போதகர் குழுவுக்கு - போதகர் குழு முழு வதற்கும் - பிரசங்கிக்கப் போகின்றாய். அவர்கள் இப்படித் தான் கூறினார்கள். நீயும் அப்படியே கூறு. நீயும் அப்படியே விசுவாசி'' என்றனர். அந்த சிறு ... அவர்கள் அங்கு தவறான மனிதனை அடைந்தனர். அவன் தனது பழைய யோசனை அனைத்தையும் அறவே அகற்றினவன். அவன் உஷ்ணம் செலுத்தும் குழாயை - மனச்சாட்சியை - சுத்தப்படுத்தி னவன். நீ அவர்கள் கூறினதையே கூறினால், அவர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா? உன்னை மகத்தான போதகராக்கி விடுவார்கள். நீ மாத்திரம் அவர்களுடன் இணங்கினால், உன்னைப் பொதுவான கண்காணிப்பாளராக செய்து விடுவார்கள். அப்படி செய்பவன் உண்மையான தேவனுடைய மனிதன் அல்ல. அவனுடைய உஷ்ணம் செலுத்தும் குழாய் சுத்தமாக்கப்பட்டிருந்தது. அவனுடைய மனச்சாட்சி, மற்ற அனைத்துமே தெளிவாக இருந்தது. அவனுடைய சிந்தை தேவனுடைய வார்த்தைக்கு திறந்து கொடுக்கப்பட்டி ருந்தது. அவன் தேவனுடைய வார்த்தையை மாத்திரமே விசுவாசிப்பவன். அவை பணிவிடை ஆவிகள்; அது ஒரு பணிவிடை ஆவி. அவன், இப்பொழுது என்ன சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஒன்றை மாத்திரம் உங்களிடம் கூற விரும்புகிறேன். தேவன் என்னிடம் என்ன கூறச் சொல்லுகிறாரோ, அதை மாத்திரமே கூறுவேன்.'' அன்று இரவு அவர்கள் தங்கினார்கள். அவனுக்கு ஒரு தரிசனம் உண்டானது. 110 அடுத்த நாள் காலை மிகாயா வேதாகமத்தை திருப்பி, 'வேதம் . என்ன கூறுகிறதென்று பார்க்கலாம். அந்த தரிசனம் அதனுடன் இணைகின்றதா?... இது அவர்கள் கூறினதற்கு முரணாயுள்ளது. எனவே எங்கோ தவறுள்ளது. எலியா தீர்க்கதரிசி என்ன கூறினானென்று பார்க்கலாம். அவன் தீர்க்கதரிசியென்று நாமறிவோம். எலியாவுக்கு உண்டான தேவனுடைய வார்த்தை என்ன வென்றும், அது என்ன கூறுகிறதென்றும் பாருங்கள்'' யேசபேலே , உன் இரத்தத்தை நாய்கள் நக்கும். நீதிமானாகிய நாபோத்தின் நிமித்தம் அவளை நாய்கள் தின்னும்'' என்று கூறுவதை என்னால் கற்பனை செய்ய முடிகிறது. அவன் அப்பொழுது கூறினான்.... அவன் அதை கண்டபோது, அவனுடைய தரிசனம் தேவனுடைய வார்த்தையுடன் ஒன்றாக இணைவதை உணர்ந்தான். ஆகாபுக்கு அழிவு நெருங்கினது. அவன் அங்கு நடந்து சென்று, 'போங்கள், ஆனால் இஸ்ரவேல் ஜனங்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போலிருப் பதைக் கண்டேன்'' என்றான். பாருங்கள், அவனுடைய தரிசனத்தை வெளிப்படை யாகக் கூற அவன் வெட்கப்பட வில்லை. ஏனெனில் அது கர்த்தருடைய வார்த்தையா யிருந்தது. அதை பரிபூரணமாக அவன் ஏற்றுக்கொள்ள முடியுமென்று கண்டான். ஏன்? அவன் தனது இருதயத்தையும் சிந்தையையும் தேவனுடைய வார்த்தைக் குத் திறந்து கொடுத்திருந்தான். தேவனுடைய வார்த்தை மீண்டும் தன்னை வெளிப்படுத்திக் கொடுத்தது. எனவே அது பரிபூரணமான தேவனுடைய வார்த்தை என்பதை அவன் உணர்ந்தான். 111 “ஓ, நான் மாத்திரம் மிகாயாவாக இருந்தால்' என்று நீங்கள் கூறலாம். நீங்கள் அப்படி இருக்க முடியும். நீங்கள் அப்படி இருக்கமுடியும். நீங்கள் அப்படி இருக்கிறீர்கள். தேனே, நீயும் கூட. (சகோ. பிரன்ஹாம் வியாதிபட்டிருக்கிற சகோதரியிடம் மறுபடியும் பேசுகிறார் - ஆசி) நீ தீர்க்கதரிசியாகிய மிகாயா. நீ என்ன செய்ய வேண்டும்? உன் சிந்தையை திறந்து கொடுக்க வேண்டும். இன்று காலை உங்களிடம் நான் என்ன கூற முயல்கிறேன்? தேவனுடைய வார்த்தையை பாருங்கள்? உங்கள் சிந்தையைத் , திறந்து, நான் சுகமாக முடியும் என்று நம்புகிறேன்'' என்று கூறுங்கள். நல்லது, அப்படியானால் அது என்ன? அது கர்த்தருடைய வார்த்தையா? நிச்சயமாக அது கர்த்தருடைய வார்த்தை. ஆனால் அங்குள்ளவன், 'அற்புதங்களின் நாட்கள் கடந்துவிட்டன. உன்னால்இதை செய்யமுடியாது .......'' என்கிறான். அதை மறந்துவிடு! தேவனை முதன்மைஸ்தானத்தில்வை. இங்கு தேவனுடைய வார்த்தை வருகிறது. அவர் அதை உரைத்தார். அது அப்படியேயாயிற்று. 112 சாத்தான் என்ன செய்தான்? சாத்தான் மற்றவர்களை அபிஷேகித்தான். சாத்தான் தனது ஊழியக்காரர்களை அபிஷேகிக் கிறான். ஓ, நிச்சயமாக, உ. ஊ, நிச்சயமாக! அவன் தனது ஊழியக்காரர்களை அபிஷேகிக்கிறான். அவன் எதனால் அவர்களை அபிஷேகிக்கிறான்? அவிசுவாசத்தினால். தேவனுடைய வார்த்தையை அவிசுவாசிக்க, சாத்தானும் அவனுடைய தூதர்களும், மானிடர்களை அபிஷேகிக்கின்றனர். அதை நீங்கள் உறுதிப்படுத்த விரும்பினால், ஆதியாகமம் 3:4க்குத் திருப்புங்கள். நாம் அந்த பாகத்திற்கு வேதத்தைத் திருப்பி, இதை ஒரு நிமிடம் கவனித்து, அதுவே அவனுடைய முதல் உபாயமா என்று பார்ப்போம். அதுதான் அவன் செய்த முதல் காரியம். அந்த உபாயத்தை அவன் கைவிடுவதில்லை. அவன் எப்பொழுதும் அதையே செய்கிறான். அப்படித்தானா என்று பாருங்கள். அவன் வார்த்தையுடன் இணங்காமல் இருக்கவில்லை. அவன் அதை சற்று தப்பர்த்தங்கொள்ளும்படி (misconstrue) செய்தான், அதன் அர்த்தம் என்னவென்று அவளுக்கு அறிவிக்க விரும்பினானோ அவ்விதமாக - முழுவார்த்தையும் எடுத்துக் கொள்ளாதே என்றவிதமாக. 113 இப்பொழுது ஆதியாகமம் 3:4. அதைத்தான் அது கூறுகிறதா என்று பார்ப்போம்.சரி. அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை. “...சாகவே சாவதில்லை. பாருங்கள், அவன் எப்படி அதை திரும்ப உரைத்தான் என்று. 'ஓ, அற்புதங்களின் நாட்கள் கடந்து விட்டன என்று நாங்கள் நம்புகிறோம். பெந்தெகொஸ்தே நாளன்று ஜனங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றது போல் இப்பொழுது பெறுகின்றனர் என்று நாங்கள் நம்புவது கிடையாது. நீங்கள் எந்த முறையில் ஞானஸ்நானம் பெற்றிருந்தாலும், அதனால் எவ்வித வித்தியாசமுமில்லை. ''பிசாசைப் பார்த்தீர்களா? அவனுடைய உபாயங்களை பார்த்தீர்களா? “நீ சுகமடைய முடியாது என்று மருத்துவர் கூறியிருந்தால், அத்துடன் அது முற்று பெற்றுவிட்டது.'' 114 நான் மருத்துவரை அவமானப்படுத்துவ தாகவோ அல்லது அவர் மேல் அவநம்பிக்கைகொள்வதாகவோ எண்ண வேண்டாம். அவர் விஞ்ஞான முறைப்படி தன் பணியைச் செய்கிறார். மருத்துவர் தன்னால் இயன்றவரை ஒருவன் உயிரைக் காப்பாற்ற முயல்கிறார். அதை காப்பாற்ற முடியவில்லை. ஏனெனில் அதற்கு மேல் அவருக்கு ஒன்றும் செய்யத் தெரியவில்லை. அவருடைய அறிவுக்கு எட்டின் வரை, அந்த மனிதன் உத்தமமாக முயன்றார். நன்மை தீமைஅறியத்தக்க விருட்சம் சரிதான். ஆனால் அது போகும் வரைக்கும் நீங்கள் சென்று, அதிலிருந்து ஜீவ விருட்சத்துக்குத் தாவி, முன் செல்லுங்கள். ஆமென்.அவ்வளவுதான். அதுவரைக்கும் தான் கிரியை செய்யும். ஆம். சாத்தானின் உபாயம் என்ன? அது இங்கு என்ன சொல்லுகிறது? கவனியுங்கள், 2ம் வசனம். நான் முதலாம் வசனத்திலிருந்து 3ம் வசனம் வரைக்கும் படிக்கிறேன். தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப் பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது. அது ஸ்திரீயை நோக்கி: நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ என்றது.? 115 அவன் கூறுவதைக் கேளுங்கள் - அவன் எவ்வளவு மோசமாகச் செல்கிறான் என்றும், அவன் வார்த்தையை எப்படி வெள்ளையடிக்கிறான் என்றும். பாருங்கள்? அவன் என்ன செய்ய முயல்கிறான்? அவளுடைய சிந்தையில் நுழைய முயல்கிறான். பாருங்கள்? வார்த்தை அங்கு அவளை ஏற்கனவே அரணிட்ட பின்பும், அவன் அவளுடன் பேசுகிறான். சாத்தான் உங்களுக்கு அரணிட அனுமதியாதேயுங்கள். பாருங்கள்? தேவனுடைய வார்த்தையை உங்கள் இருதயங்களில் அரணாக்கிக் கொள்ளுங்கள். அதையே செய்யுங்கள். மிகாயாக்களே, கவனியுங்கள். ஸ்திரீ சர்ப்பத்தைப் பார்த்து: நாங்கள் தோட்டத்திலுள்ள விருட்சங்களின் கனிகளைப் புசிக்கலாம். ஆனாலும், தோட்டத்தின் நடுவில் இருக்கிற விருட்சத்தின் கனியைக் குறித்து ..... (பாருங்கள், நடுவில் ) .... தேவன்: நீங்கள் சாகாதபடிக்குஅதைப் புசிக்கவும் அதைத் தொடவும் வேண்டாம் என்று சொன்னார் என்றாள். பாருங்கள், அதுதான் வார்த்தை . தேவன் கூறினதை அவள் அவனிடம் எடுத்துரைக்கிறாள். இப்பொழுது கவனியுங்கள்! அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை. 116 அவனுடைய உபாயத்தைப் பார்த்தீர்களா? பாருங்கள்? அவன் என்ன செய்ய முயல்கிறான்? மானிடவர்க்கத்தில் முதலாவது தோன்றிய அந்த விலைமதிக்க முடியாத ஸ்திரீயை தேவனுடைய குமாரத்தியை தேவனுடைய வார்த்தையில் அவிசுவாசத்தையுண்டாக்க அவளை அபிஷேகிக்க முயல்கிறான். அதை தான் அவள் செய்யும்படி அவன் தூண்டினான். தேனே, உன்னையும் அவன் அவ்வாறு செய்யத் தூண்டுவான். சகோ. பிரன்ஹாம் வியாதிபட்டிருக்கிற சகோதரியிடம் மறுபடியும் பேசுகிறார் - ஆசி) உங்கள் ஒவ்வொருவரையும் அவன் அதையே செய்யத் தூண்டுவான் - உங்களை அபிஷேகிப்பான். நீங்கள் செய்யவேண்டிய ஒன்று, அதை உதைத்துத் தள்ளிவிடுவதே (நீங்கள் சுயாதீனமுள்ளவர்கள், உங்களுக்கு விருப்பமானால் அதை ஏற்றுக் கொள்ளலாம்). ஏவாள் மாத்திரம் சற்று நின்று அவனுக்குச் செவி கொடுக்காமல் போயிருந்தால் நீங்கள் எதற்கும் நின்று செவிகொடுக்க வேண்டாம் நிற்க வேண்டாம்! 117 எலியா கேயாசியிடம், 'என் தடியை எடுத்துக்கொண்டு, மரித்துப்போன குழந்தையின் மேல் வை. வழியில் யாராகிலும் பேசினால், மறுமொழி சொல்லாதே. யாராகிலும் உன்னை நிறுத்த முயன்றால், நீ சென்று கொண்டேயிரு'' என்றான். அந்த ஸ்திரீ அவளுடைய வேலைக்காரனை அழைத்தபோது அவளைக் கவனியுங்கள். அவள் கழுதையின்மேல் சேணம் கட்டி ஏறி, தன் வேலைக்காரனை நோக்கி, 'இதை ஓட்டிக் கொண்டுபோ. நான் உனக்குச் சொன்னால் ஒழிய (சகோ. பிரன்ஹாம் தன்னுடைய கரங்களை இரண்டு தடவை தட்டுகிறார் - ஆசி) எங்கும் ஓட்டத்தை நிறுத்தாதே'' என்றாள். அதுதான்! நீங்கள் செய்தியைப் பெற்றுக்கொண்ட பிறகு, முன்னேறிக் கொண்டேயிருங்கள். ஆமென்! என்னால் நடக்கமுடியாது, எனக்கு பெலவீனமாயுள்ளது'' என்று சொல்லாதீர்கள். சென்று கொண்டே யிருங்கள். நிற்காதீர்கள். எல்லாவற்றையும் தள்ளிவிட்டு, எதிரியை வெட்டிக்கொண்டே செல்லுங்கள். சகோதரனே, உன் கையில் பட்டயம் உள்ளது. வெட்டிக்கொண்டே செல். 118 நான் பிரசங்கம் பண்ண கால்பந்து விளையாட்டு அரங்கத்துக்கு ஒருமுறை சென்றிருந்தேன். அங்கு வாசலில், ''வெற்றி என்பது சண்டையிடும் நாயின் அளவைப் பொருத்ததல்ல, அது நாய் போடும் சண்டையின் அளவைப் பொருத்தது'' என்று எழுதியிருந்தது. அதுதான் சண்டையில் வெற்றியைத் தருகிறது பாருங்கள்? நீங்கள், பாருங்கள், அந்த பெரிய சபைகள் அனைத்தும் இதற்கு விரோதமாயுள்ளன'' என்று கூறலாம். அவர்களுடைய அளவு எவ்வளவு பெரிதாக இருந்தாலும் எனக்குக் கவலையில்லை. அது அந்த நாய் போடும் சண்டையைப் பொறுத்தது. அது தனிப்பட்ட நபரிலுள்ள விசுவாசத்தைப் பொறுத்தது. நீ கோழையாயிருந்தால், உன்னை ஆலிங்கனம் செய்யும் இருப்பிடத்துக்கு திரும்பிவிடும். சகோதரனே, போர் வீரனாயிருந்தால், அங்கு தைரியமாய் நில். யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது - நன்மையும் தீமையும் எதிர்த்து சண்டை யிடுகின்றன. நாம் சண்டையிடுவோம்! 119 பீட்டர் கார்ட்ரைட் என்பவர் பட்டினத்துக்குச் சென்று, ''கர்த்தர் என்னிடம், இங்கு வந்து எழுப்புதல் கூட்டம் நடத்தச் சொன்னார்'' என்றாராம். அவர் ஒரு பழைய உக்கிராண அறையை (Store room) வாடகைக்கு எடுத்து சுத்தப்படுத்தத் தொடங்கினார். அந்த பட்டினத்தில் ஒரு பெரிய முரடன் இருந்தான். அவனுடைய இடுப்பில் ஒரு துப்பாக்கி தொங்கிக்கொண்டிருக்கும். அவன் நடந்து சென்று யாரோ ஒருவரிடம், ''அந்த மனிதன் என்ன செய்து கொண்டிருக்கிறார்?' என்று கேட்டான். அவர், அவர் ஒரு பிரசங்கி . அங்கு கூட்டம் நடத்தப்போவதாக அவர் கூறுகிறார்'' என்று பதிலளித்தார். அவன், ''அவரை தெருவில் எறிந்து துரத்திவிட வேண்டும். இந்த இடத்தில் எங்களுக்கு கூட்டங்கள் எதுவும் தேவையில்லை என்றான். 120 அவன் அங்கு சென்று கதவண்டை நின்றான். பீட்டர் கார்ட்ரைட் 'கோட்டை அணிந்து கொண்டு ஜன்னல்களையும் சுவர்களையும் கழுவிக்கொண்டிருந்தார் - அவர் சிறிய உருவமுள்ளவர். உங்களுக்குத் தெரியுமா, கோழி கறியை தன் கையால் தின்றதால் ஒழுங்காசாரம் அந்த பிரசங்கி அவனைப் பார்த்து சிரித்தார், இன்று அது அவர் ஜன்னல்களை கழுவிக் கொண்டிருந்தார். அந்த முரடன் அங்கு சென்று தன் கோட்டை கழற்றினான். அவனுடைய இடுப்பில் துப்பாக்கி தொங்கிக் கொண்டிருந்தது. அவன், 'என்ன செய்து கொண்டிருக்கிறாய்?'' என்றான். அவர்,''நான் ஜன்னல்களைக் கழுவிக்கொண்டிருக்கிறேன்'' என்று கூறிவிட்டு, தொடர்ந்து கழுவிக் கொண்டிருந்தார். அவருக்கு ஒரே நோக்கம் இருந்தது. தேவன் அவருடன் எழுப்புதல் கூட்டம் நடத்தக் கூறினார். 121 அவன், 'நாங்கள் எழுப்புதல் கூட்டங்கள் நடத்த அனுமதிக்கமாட்டோம்'' என்றான். அவர், ஆனால் கர்த்தர் என்னிடம் எழுப்புதல் கூட்டம்நடத்தக் கூறினார்'' என்றார். பாருங்கள்? அவர் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். பாருங்கள்? பாருங்கள்? அவன், 'நீ ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். நான் தான் இந்த பட்டினத்தை நடத்துபவன்“ என்றான். அவர்,''அப்படியா?'' என்று கூறிவிட்டு ஜன்னல்களைக் கழுவிக் கொண்டிருந்தார். அவன், ''நீ எழுப்புதல் கூட்டம் நடத்துவதற்கு முன்பு என்னை சண்டையில் தோற்கடிக்க வேண்டும்'' என்றான். அவர்,“ஓ, அப்படியா? சரி, செய்கிறேன்'' என்றார், அவர் கோட்டை கழற்றி , அவனருகில் சென்று, கழுத்துப்பட்டையைப் பிடித்து, அவனைக் குத்தி கீழே தள்ளி , குதித்து அவன் மேல் உட்கார்ந்து, 'நான் அரசாள வேண்டுமானால் சண்டை யிடவேண்டும். ஆண்டவரே, என் தைரியத்தை அதிகரியும் என்றார். அவனை அடித்து நொறுக்கினார், ''உனக்கு போதுமானது கிடைத்துவிட்டதா?'' என்று கேட்டார். அவன், 'ஆம்'' என்றான். அவன் எழுந்து அவருடன் கை குலுக்கினான். அன்றிரவு நடந்த கூட்டத்தில்அவன் இரட்சிக் கப்பட்டான். பார்த்தீர்களா. 122 தேவனுடைய வார்த்தையை ஏற்றுக் கொண்டு, எல்லா சந்தேகங்களையும் வெட்டி வீழ்த்தி முன்னேறுங்கள். பார்த்தீர்களா? நிச்சயமாக! அதுவே நமது அடுத்த பணியாக இருக்குமானால் அதை செய்வோம். சரி!அடுத்தபடியாக நான் செய்ய வேண்டியது, என்னுடைய எல்லா சந்தேகங்களையும் வெட்டி களைந்து அதனின்று அகல்வதே. என்னுடைய அடுத்த வேலை எல்லா குழப்பங்களையும் அகற்றிவிடுவது. என் புலன்கள், ''நீ மோசமான நிலையிலிருக் கிறாய் என்று கூறினால், அடுத்தபடியாக நான் செய்யவேண்டியது அவைகளை வெட்டிகளைந்து விடுவதே. அது உண்மை . நீங்கள்,''நல்லது, அவைகள் என்னிடம் கூறுகின்றன.... சகோ. பிரன்ஹாமே, என் புலன்கள் என்னிடம் கூறுகின்றன...'' எனலாம். நீங்கள் அதை வெட்டிகளைவது நல்லது. அதைத் தவிர வேறொன்றையும் நீங்கள் செய்யக்கூடாது. அதை உங்கள் அடுத்த பணியாகச் செய்யுங்கள். உங்கள் கோட்டை கழற்றிவிட்டு, அதை நோக்கிச் சுடுங்கள். முன்னேறிச் சென்று கொண்டேயிருங்கள். ''நான் ஜெயிக்கப்போகிறேன்' என்னும் ஒரே நோக்கத்தை கொண்டவர்களாயி ருங்கள். ஆமென்“ நான் ஜெயிக்கப் போகின்றேன், நான் தோற்க முடியாது. ''ஆமென்! 123 சாத்தான் அபிஷேகிக்கிறான். பாருங்கள்? அவன் கையாளும் முதல் உபாயம் என்ன? அவன் நுழையும் முதல் இடம் எது? சிந்தை. அவன் சொல்வதைக் கேட்க அவள் சற்று நேரம் நின்றாள். ''ஓ, அப்படியா!'' அங்குதான் அநேக வாலிப பெண்கள் தவறு செய்தனர், அநேக வாலிப ஆண்களும் தவறு செய்தனர். அது உண்மை , சற்று நேரம் நின்று செவி கொடுத்தல், சற்று நேரம் நிற்பது. 124 எத்தனை முறை விவாகரத்து வழக்குகள் வருவதை நான் கண்டிருக்கிறேன்? ''சகோ. பிரன்ஹாமே, அவன் என்னைப் பார்த்து இப்படி விசில் அடித்தான் (சகோ. பிரன்ஹாம் விசில் அடித்து ஓசை எழுப்புகிறார் - ஆசி). நான் சற்று நின்றேன், உண்மையில் அப்படி நிற்க வேண்டுமென்று நினைக்கவில்லை.'' அஷ் உஷ், உங்களுக்கு புரிகிறதா. 'ஓ, அவள்... நான் மேசையின் மறுபுறம் உட்கார்ந்து கொண்டிருந்தேன். அவளுடைய கண்கள் மிகவும் அழகாயிருந்தன. 'பாருங்கள், பாருங்கள், பார்த்தீர்களா? அதுதான். பிசாசு அதையே செய்கிறான். 125 “ஓ, நான் சுகமடைய முடியாது என்று மருத்துவர் கூறுகிறார். எனவே நான்...'' பார்த்தீர்களா? அதேதான். நடந்த யுத்தங்களிலே மிகப்பெரிய யுத்தம். ''நல்லது, அவர்கள் சொல்லுகிறார்கள்... இன்னார் இன்னார் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டதாக உரிமை பாராட்டியதை நான் கண்டேன்...'' ஆம், நீ ஏதாவதொரு மாய்மாலக்காரனைக் கண்டிருப்பாய். ஆனால் உண்மையில் அதைப் பெற்றுக்கொண்டவர்களைக் குறித்தென்ன? பார்த்தாயா? ஆம், பிசாசு உனக்கு இப்படிப்பட்ட காக்காய் கண்ணியைத்தான் (Crow bait) சுட்டிக் காட்டுவான். அவன் உண்மையான புறாவை உனக்குக் காண்பிக்க மாட்டான். அதை காண்பிக்காமல், உன் கண்ணை மறைத்து விடுவான். ஓ, அவனும் ஒரு போராளிதான். ஆனால் உலகத்திலிருக்கிறவனைப் பார்க்கிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். எனவே, இங்குள்ள சேனைகளின் தளபதிகளே, தேவனுடைய வார்த்தையை இறுகப்பற்றிக் கொள்ளுங்கள், அதை விசுவாசியுங்கள், அது உண்மை . உங்கள் அரணைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். அது உண்மை . உங்கள் பணியில் நிலைத்து நில்லுங்கள். 126 ஒரு சமயம் இங்கு ஒரு சிறு பெண் இருந்தாள். இன்றைக்கும் கூட அவள் இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கலாம். அவளுடைய பெயர் நெல்லி சான்டர்ஸ். முதன் முறையாக பிசாசு துரத்தப்பட்டதை நான் கண்டிருக்கிறேன் என்றால் (நாங்கள் கல்லறைத் தோட்டத்துக்கு அப்பால் மூன்று பிளாக்குகள் தள்ளி குடியிருந்தோம். அப்பொழுது தான் நான் ஒரு பிரசங்கியா னேன். நான் இந்த மூலையில் ஒரு கூடாரக் கூட்டத்தில் பிரசங்கித்துக் கொண்டிருந்தேன் அந்த சிறு பெண் மிகச் சிறந்த நடனக்காரி. அவள் இங்குள்ள உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டி ருந்தாள். அவளும் லீஹார்னும் (இந்தப் பட்டினத்திலுள்ள உங்கள் அநேகருக்கு லீஹார்னைத் தெரியும். அவன் குளிக்கும் அறை ஒன்றை நடத்தி வருகிறான். அவளும் லீ ஹார்னும் நாட்டிலேயே மிகச் சிறந்த நடன ஜோடி, அவன் ஒரு கத்தோலிக்கன். அவர்களுக்கு மதம் ஒருபொருட்டல்ல. எனவே (நெல்லியும் மற்றவர்களும், அவள் சிறந்த நடனக்காரி , அவனும் கூட. அங்கு ப்ளாக் பாட்டம், 'ஜிட்டர்பர்க்ஸ் போன்ற நடனங்கள் ஆடப்பட்டன. இவர்களிருவரும் நாட்டிலேயே மிகச்சிறந்த நடனக்காரர்கள். 127 ஒருநாள் (ஒரு இரவு) அவள் தடுமாறிக்கொண்டு கூட்டத்திற்கு வந்தாள். அந்த சிறு நெல்லி பீடத்தின் முன்னால் முகங்குப்புற விழுந்தாள். தேவன் அவளை ஆசீர்வதிப்பாராக. அவள் பீடத்தின் முன்னால் விழுந்துகிடந்து, தலையை தூக்கி அழ ஆரம்பித்தாள். அவளுடைய கண்ணீர் கன்னங்களில் வழிந்தது. அவள், ''பில்லி'' என்றாள் அவளுக்கு என்னைத் தெரியும்). அவள், “நான் இரட்சிக்கப்பட வேண்டு மென்று விரும்புகிறேன்”என்றாள். நான், ''நெல்லி, நீ இரட்சிக்கப்பட முடியும். பெண்ணே , இயேசு உன்னை ஏற்கனவே இரட்சித்து விட்டார். அவருடைய வார்த்தையின் அடிப்படையில் அதை நீ ஏற்றுக்கொள்ள வேண்டும்“ என்றேன். அவள் அங்கு தங்கியிருந்து, அழுது, ஜெபித்து, உலக காரியங்களுக்கு மறுபடியும் செவி கொடுப்பதில்லையென்று தேவனிடம் வாக்கு கொடுத்தாள். உடனே அவளுடைய ஆத்து மாவில் ஒரு அழகான இனிமையான சமாதானம் குடிகொண்டது. அவள் எழுந்து சத்தமிட்டு, தேவனைத் துதித்து, அவரை மகிமைப்படுத்தினாள். 128 அதற்கு பின்பு ஆறு அல்லது எட்டு மாதங்கள் கழித்து, ஒரு இரவு அவள் ஸ்பிரிங் தெரு வழியாக வந்து கொண்டிருந்தாள் இப்பொழுது அவள் வாலிபப் பெண், அவளுக்கு அப்பொழுது சுமார் பதினெட்டு வயதிருக்கும். அவள் என்னிடம் வந்து, ''ஹோப்...'' (அது என் மனைவி. அவள் மரித்துவிட்டாள்). அவள், ''காண்பதற்கு நான் ஹோப்பையும் ஐரீனையும் போல் இருந்திருந்தால் நலமாயிருக்கும். அவர்கள் உலக காரியங்களில் சிக்கிக்கொண்டதேயில்லை'' என்றாள். அவள், 'உலகம் நம்மேல் ஒரு அடையாளத்தை போட்டுவிடுகிறது. எனக்கு கரடுமுரடான தோற்றம் உள்ளது. நான் முகவர்ணம் தீட்டிக்கொள்வதைவிட்டு விட்டேன். ஆயினும் என் முகம் கரடுமுரடாக காணப்படுகிறது. அவர்களுடைய முகம் எவ்வளவு இளமையாயும் களங்கமற்றதாகவும் காணப்படுகிறது! நான் அப்படி செய்யாமலிருந்தால் நலமாயிருக்கும்'' என்றாள். நான், 'நெல்லி, இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களினின்றும் சுத்திகரிக்கிறது. தேனே, நீ சென்று விசுவாசி' என்றேன். 129 வேய்ன் ப்ளட்ஸோ (அவனை உங்களில் அநேகருக்கு தெரியும். அநேக ஆண்டுகளாக அவன் என்ஆப்த நண்பன்). அவன் பயங்கர குடிகாரனாயிருந்தான். என் சகோதரன் எட்வர்ட்டுடன் அவன் இங்கு வந்திருந்தான். அவன் குடித்து தெருவில் விழுந்து கிடந்தபோது, அவனை நான் தூக்கிக்கொண்டு வந்தேன். ஏனெனில் போலீசார் அவனைக் கைது செய்ய முயன்றனர். அவனை இங்கு கொண்டு வந்தேன். அப்பொழுது நான் ஒரு பிரசங்கி . என் பெற்றோருடன் வசித்து வந்தேன். அது எனக்கு விவாகமாவதற்கு அநேக ஆண்டுகட்கு முன்பு. நான் அவனைக் கொண்டு வந்து படுக்கையில் கிடத்தினேன். நான் சாய்வு நாற்காலியில் உறங்கினேன். பிரன்ஹாம் குடும்பம் பெரியது என்று உங்களுக்கு தெரியும் (நாங்கள் பத்து பேர்). எங்களுக்கு நாலு அறைகள் இருந்தன. என்னிடம் ஒரு பழைய சாய்வு நாற்காலி இருந்தது. நான் அதை இழுத்து, அதில் உறங்கினேன். குடித்திருந்த வேய்னை நான் படுக்கையில் கிடத்தினேன். அவனை வீட்டுக்குத் தூக்கிக்கொண்டு வந்து படுக்கையில் கிடத்த வேண்டியதாயிற்று. நான் அங்கு படுத்துக் கொண்டிருந்தேன். நான், 'வேய்ன், இப்படி செய்வது உனக்கு வெட்கமாயில்லையா?' என்று கேட்டேன். 130 அவன்,''உ , து, பில்லி, என்னிடம் அப்படி பேசாதே', என்றான் (சகோ. பிரன்ஹாம் குடிகாரன் உளறுவதைப்போல் பேசி காண்பிக்கிறார் - ஆசி). நான் அவன் மேல் என் கையை போட்டு, 'வேய்ன், உனக்காக நான் ஜெபிக்கப்போகிறேன். கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக'' என்றேன். நான் இரட்சிக்கப்பட்டு அப்பொழுது ஏறக்குறைய ஒரு ஆண்டு காலம் தான் ஆகியிருந்தது. அப்பொழுது திடீரென்று வாடகை காரின் கதவு திறக்கப்பட்டு வேகமாக மூடும் சத்தம் கேட்டது, யாரோ கதவை வேகமாக தட்டி, சகோ. பில், சகோ. பில் என்று கூப்பிடுவது கேட்டது (சகோ. பிரன்ஹாம் பிரசங்க பீடத்தைபதினைந்து தடவை தட்டுகிறார் - ஆசி). “ நான்,''இது என்ன , யாரோ மரித்துக் கொண்டிருக்கிறார்கள் போலிருக்கிறது என்று எண்ணினேன். நான் கதவினருகே ஓடினேன். என் பழைய துணிகளை எடுத்து, என் பைஜாமாவின் மேல் சுற்றிக்கொண்டு, வேய்னையும் போர்த்திவிட்டு, கதவினருகே ஓடினேன். அது பெண்ணின் குரல் போன்றிருந்தது. நான் கதவைத்திறந்தபோது, இந்த வாலிபப் பெண் அங்கு நின்று கொண்டிருந்தாள். அவள்,''உள்ளே வரலாமா?'' என்று கேட்டாள். நான்,''உள்ளே வா“ என்று சொல்லி விளக்கைப் போட்டேன். அவள் அழுது கொண்டே ,“ஓ, பில், பில்லி, நான் முடிந்து போனேன்,! நான் முடிந்து போனேன்''! என்றாள். 131 ''என்ன நேர்ந்தது, நெல்லி மாரடைப்பு ஏதாகிலும் ஏற்பட்டதா?'' என்று கேட்டேன். அவள், 'இல்லை, சகோ. பில். நான் ஸ்பிரிங் தெரு வழியாக வந்து கொண்டிருந்தேன். உண்மையில் சகோ.பில், உண்மையில் சகோ. பில், நான் தவறு செய்ய வேண்டுமென்று நினைக்கவே யில்லை, நான் தவறு செய்ய வேண்டுமென்று நினைக்கவே யில்லை'' என்றாள். நான், 'என்ன நேர்ந்தது?'' என்று கேட்டேன். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. நான் அப்பொழுது ஒரு வாலிபன். நான் நினைத்தேன் ...... அவள்,“ஓ, சகோ. பில், நான் சின்னா பின்னமாகிவிட்டேன்'' என்றாள். நான், ''அமைதியாயிரு , சகோதரியே, நடந்ததை கூறு என்றேன். அவள்,''நான் தெருவின் வழியாக நடந்து ரெட்மென் அரங்கத்தை அடைந்தேன்...'' என்றாள் (அங்கு சனிக்கிழமை இரவுகளில் நடனம் நடப்பது வழக்கம்). அவள்,''என் உடைகளுக்காக துணி வாங்கிக் கொண்டு திரும்பும்போது, இசையைக் கேட்டேன், மேலும் அவள், 'உங்களுக்கு தெரியுமா?'' என்றாள். நான் ஒருநிமிடம் அங்கு நின்றேன். அது இனிமையாகிக் கொண்டே இருந்தது. அங்கு நின்றால் தவறொன்றுமில்லை'' என்று நினைத்தேன். 132 அங்குதான் அவள் தவறு செய்தாள் - சற்று நேரம் அங்கு நின்றாள். அவள் இசையைக் கேட்டுக்கொண்டேயி ருந்தாள். அவள்,''ஓ, ஆண்டவரே, உம்மை நான் நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர். நானும் நீயும் இந்த இடத்தில் நடன போட்டிகளில் எத்தனையோ விருதுகளை வென்றது. என் ஞாபகத்துக்கு வருகிறது. அந்த இசை முன்பு என்னைக் கவர்வது வழக்கம். ஆனால் இப்பொழுது இல்லை'' என்று நினைத்தாள். ஓ, ஓ! ஓ, ஓ! அது உன்னைக் கவரவில்லை என்றா நினைக் கிறாய்? அது ஏற்கனவே உன்னைக் கவர்ந்துவிட்டது. அவன் உன்னை நடன கூடத்திற்குஅனுப்பினதற்கு அது சமானம். பாருங்கள்? எத்தனை பேருக்கு நெல்லி சான்டர்ஸை தெரியும்? நல்லது, உங்கள் அனைவருக்கும் என்று நினைக்கிறேன். ஆம், நிச்சயமாக! எனவே அவர்கள்.... அவள் தொடர்ந்து, என்ன நேர்ந்தது தெரியுமா? நான் அரங்கத்தின் படிகளில் ஏறிச் சென்றால், ஒரு சிலருக்கு என் சாட்சியை அறிவிக்க முடியும் என்று நினைத்தேன்' என்றாள். பார், நீ பிசாசின் எல்லைக்குள் சென்றுவிட்டாய், அதனின்று விலகு! பொல்லாங்கானதாய் தோன்றும் எல்லாவற்றையும் உதறித் தள்ளு ! அவளோ படிகளில் ஏறி சில நிமிடங்கள் அங்கு நின்றாள். முதலாவதாக நடந்தது என்ன தெரியுமா? சில நிமிடங்களுக்குள் ஒரு பையனின் கரங்களைப் பிடித்து நடனமாடத் தொடங்கி விட்டாள். பின்பு அவளுக்கு சுய நினைவு வந்தபோது, அங்கு நின்று,''நான் நிரந்தரமாக இழக்கப்பட்டேன்'' என்று அழுதாள். 133 அப்பொழுது நான் நினைத்தேன் எனக்கு வேதாகமம் அதிகம் தெரியாது. ஆனால் இயேசு, 'என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்' என்று கூறியிருக்கிறார் என்று நினைக்கிறேன்'' என்று. வேய்னுக்கும் அப்பொழுது குடிமயக்கம் சற்று தெளிந்து, அங்கு நடப்பதை உட்கார்ந்து கவனித்துக் கொண்டிருந்தான். பாருங்கள்? நான், ''பிசாசே, நீ யாரென்று எனக்குத் தெரியாது. ஆனால் இப்பொழுது உன்னிடம் கூறுகிறேன். இவள் என் சகோதரி, இவளைப் பிடித்துக்கொண்டிருக்க உனக்கு எவ்வித உரிமையும் கிடையாது, அவள் அதை செய்ய வேண்டுமென்று நினைக்கவில்லை; அவள் ஒரு நிமிடம் அங்கு நின்றாள்“ (அங்குதான் அவள் தவறு செய்தாள். அவளை விட்டு நீ வெளியே வரத்தான் வேண்டும். நான் சொல்வது கேட்கிறதா?'' என்றேன். கர்த்தர் எனக்குதவி செய்வாராக. (தேவன் நியாயாசனத்தில் உட்காருவார் என்று எனக்குத் தெரியும்). திரையிடப்பட்டிருந்த அந்த கதவு தானாகவே திறந்து மூடத் தொடங்கினது பம்பிடி, பிளம்பிடி, கா - ப்ளம்ப், கா-ப்ளம்ப், கா-ப்ளம்ப். நான் நினைத்தேன்... அவள்,“பில்லி, அங்கே பாருங்கள்'' என்றாள். நான்,“ஆமாம், அது என்ன?' என்றேன் . . . அவள், ''எனக்குத் தெரியாது'' என்றாள். 134 நான்''எனக்கும் தெரியவில்லை'' என்றேன். கதவு பம்பிடி-பம்ப், டி - பம்ப் என்று ஓசையுண்டாக்கி, திறந்து மூடிக் கொண்டிருந்தது , “என்ன நேர்ந்தது?'' என்று நான் நினைத்தேன். நான் இப்படி பார்த்துவிட்டு, ''சாத்தானே, அவளை விட்டுப் போ; இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே அவளை விட்டுவெளியே வா'' என்றேன். அப்படி நான் கூறினபோது, இவ்வளவு நீளமுள்ள ஒரு பெரிய வெளவால்; அதன் செட்டைகளிலிருந்து நீண்ட ரோமம் தொங்கிக் கொண்டிருந்தது. அது அவள் பின் பக்கத்திலிருந்து'விர்ர்ர்ர்' என்று வேகமாக பறந்து என்னை நோக்கி வந்தது. நான்,'ஓ, ஆண்டவராகிய தேவனே, இயேசு கிறிஸ்துவின் இரத்தம் இதனின்று என்னை பாதுகாப்பதாக'' என்றேன். வேய்ன் படுக்கையிலிருந்து குதித்தெழுந்து பார்த்தான். அது நீண்ட நிழலைப் போல் அங்கு சுற்றிச் சுற்றி வட்டமிட்டு படுக்கைக்குப் பின்னால் சென்றது. வேய்ன் படுக்கையை விட்டு எழுந்து வேகமாக அடுத்த அறைக்கு ஓடினான். 135 நான் நெல்லியை வீட்டுக்குக் கொண்டு சென்றுவிட்டு வந்தபோது அதை காணவில்லை அம்மா போர்வையை உதறிப் பார்த்தார்கள். ஆனால் படுக்கையில் ஒன்றுமில்லை. அது என்ன? ஒரு பிசாசு அவளை விட்டு வெளியேறினது. என்ன நேர்ந்தது? அவள் ஒரு வினாடி அங்கு நின்றாள். அவ்வளவுதான். நீங்கள் நிற்கவே வேண்டாம். தேவன் தமது வார்த்தையை உங்கள் இருதயங்களில் ஆழமாகப் பதிக்கிறார். அந்த பட்டயத்தை நீங்கள் எடுத்துக்கொண்டு, வெட்டத் தொடங்குங்கள். அல்லேலூயா ''எனக்கு எதற்கும் நேரமில்லை. இப்பொழுது தான் கடந்து வந்தேன். இளைப்பாறுவதற்கு கூட எனக்கு நேரமில்லை'' என்று சொல்லுங்கள். 136 அந்த தீர்க்கதரிசி ,''என் கோலை எடுத்துக்கொண்டுபோய் குழந்தையின் மேல் வை. வழியில் யார் பேசினாலும் மறுமொழி கூறாதே.'' பிசாசு, 'உன் உடல் நிலை எப்படி இருப்பதாக உணருகிறாய் ....? என்று கேட்டால், மறுமொழி கூறாதே. போய்க் கொண்டேயிரு'' என்றான். பிசாசு சொல்கிறான், 'உனக்கு இன்னாரைத் தெரியுமா? அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்ட பின்பு, புத்தி சுவாதீனத்தை இழந்து விட்டார்கள்'' என்று. அவனுக்கு மறுமொழி கூறாதீர்கள், சென்றுகொண்டே யிருங்கள். உங்களுக்கு இன்னாரைப்பற்றித் தெரியாது. அது உனக்கும் தேவனுக்கு மிடையே உள்ள விஷயம். அது உண்மை . தேவனை உங்களுக்கு முன்பாக வையுங்கள். 137 அவர் தமது ஊழியக்காரர்களை அபிஷேகிக்கிறார் (நான் துரிதமாக முடிக்க வேண்டும்) தேவன் தமது ஊழியக்காரர்களை அபிஷேகிக்கிறார். பாருங்கள்? (நான் சில குறிப்புகளை விட்டு கடந்துசெல்ல வேண்டும். ஆனால் இதைக் கூற விரும்புகிறேன்). இங்கு... கூர்ந்து கவனியுங்கள். சிறு பெண்னே கூர்ந்து கவனி. சகோ. பிரன்ஹாம் வியாதிபட்டிருக்கிற சகோதரியிடம் மறுபடியும் பேசுகிறார் - ஆசி) இங்கு பிசாசின் உபாயத்தை நாம் காண்கிறோம். அப்பொழுது நாம் என்ன செய்கிறோம்? இங்கு தீர்க்கதரிசிகள், இன்னும் அநேகரைக் குறித்த வேதவாக்கி யங்களை எழுதி வைத்திருக்கிறேன் - அவன் எப்படி அவர்களிடம் வந்தான் என்று. வேதத்தில் வெவ்வேறு மக்களிடையே அவன் வந்து அதையே செய்கிறான். அவனுடைய உபாயம் எப்பொழுதுமே ஜனங்கள் தேவனுடைய வார்த்தையை அவிசுவாசிக்கும்படி செய்வதே. 138 சிலுவையின் வீரர்களே, கவனியுங்கள்! வேதாகமத்தில் எழுதப்பட்ட தேவனுடைய வார்த்தையில் ஒன்றை நீங்கள் அவிசுவாசிப் பீர்களானால் ஆயுதம் பறிக்கப்பட்டவர்களா கின்றீர்கள். (disarmed) தேனே, அதை நீ விசுவாசிக்கிறாயா (சகோ. பிரன்ஹாம் வியாதிபட்டுள்ள சகோதரியுடன் மறுபடியும் பேசுகிறார் - ஆசி) நீ ஆயுதம் பறிக்கப்பட்டு, சரணடைகின்றாய். ஜெல்லி மீனே (Jelly fish). தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தை தரித்துக்கொள். ஆமென்! நாம் யுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறோம். தேவன் கூறினது சத்தியம், எல்லா மனிதருடைய வார்த்தையும் பொய். பாருங்கள்? ஒரு காரியத்துக்கு மாத்திரம் நீங்கள் செவி கொடுக்கும்படி அவன் செய்துவிட்டால் அதுவே அவன் உபாயம். அப்பொழுது நீங்கள் ஆயுதம் பறிக்கப்பட்ட வர்களாகின்றீர்கள். எத்தனை காரியங்களுக்கு ஏவாள் செவிகொடுக்க வேண்டியதாயிருந்தது? ஒரே ஒரு காரியத்துக்கு. அவள் அப்பொழுதே ஆயுதம். பறிக்கப்பட்டாள். பிசாசு என்ன செய்தான்? அவளுடைய ஆவிக்குள் பிரவேசித்தான். அவள் வழி தவறினாள். அது சரியா? அவள் தேவனுடைய வார்த்தையை அவிசுவாசித்த அந்த நிமிடத்திலேயே ஆயுதம் பறிக்கப்பட்டு வழி தவறினாள். சரி, இங்கு அவனுடைய உபாயத்தைக் காண்கிறோம். 139 தேவனுடைய வீரர்கள் தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தை தரித்துக்கொள்ளும்படி கட்டளையிடப்படுகின்றனர். அது சரியா? (சபையார்“ஆமென்'' என்கின்றனர் - ஆசி) அந்த வேதவாக்கியத்தை நீங்கள் குறித்துக்கொள்ள விரும்பினால், அது எபேசியர் 6:10முதல் 13 வசனங்கள். பாருங்கள்? சற்று முன்பு அதை நாம் படித்தோம். அதுவே நம்முடைய பொருள். சரி. கவனியுங்கள், தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தை தரித்துக் கொள்ளுங்கள் (சில நிமிடங்கள் நமக்குண்டா?). ஆமென். ஒரு நிமிடம் அது என்னவென்று பார்ப்போம். தேவனுடைய சர்வாயுதவர்க்கம் என்னவென்று பார்ப்போம். சரி, நாம் 10ம் வசனத்தில் தொடங்குவோம். இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தைக் கண்டுபிடிப்போம். கடைசியாக என் சகோதரரே...... 140 நான் அதிக நேரம் எடுத்துக்கொண்டேன் என்றறிகிறேன். இப்பொழுது நேரம் பன்னிரண்டு மணிக்கு இருபது நிமிடம். இன்று அதிக நேரம் உங்களுக்குப் போதிக்க நான் நினைக்கவில்லை. நான் கோடை காலத்தில் வெளிநாட்டுப் பயணத்தை துவக்குவதற்கு முன்பு, இன்னும் ஒரு செய்தி உங்களுக்கு அளிக்க முடியுமோ என்னமோ? (பார்த்தீர்களா?) 141 உங்களுக்குத் தெரியுமா? நான் ஏன் இப்படி செய்கிறேன் . என்று உங்களுக்குத் தெரியுமா? நான் அதை உங்களுக்கு கூறட்டும் அன்றொரு நாள் ஒரு சொப்பனம் கண்டேன். உங்களிடம் அதை கூற நான் நினைக்கவில்லை. ஆனால் என் மனதில் அது எழுந்தது. தேவன் எனக்கு சொப்பனத்தின் வியாக்கியானத்தை அளித்ததினால், அதை கூறிவிடுவது நல்லது. நான் சுவிசேஷ ஊழியத்திற்காக ஒரு பெரிய ஆற்றைக் கடக்க ஆயத்தமாயிருப்பதாக சொப்பனம் கண்டேன். நானும் என் மனைவியும் அங்கிருந்தோம். இந்த பட்டினத்திலுள்ள ஜார்ஜ் ஸ்மித் என்பவரை - ''ஆறு வினாடி' ஸ்மித்தை - எத்தனை பேருக்குத் தெரியும்? அவருடைய மகன் இப்பொழுது காவல் படையில் சேர்ந்திருக்கிறான். பாவம் ஜார்ஜ், இப்பொழுது குடிகாரனாகிவிட்டார். ஆனால் ஒரு காலத்தில் அவர் மிகச்சிறந்த குத்துச்சண்டை வீரர்களில் ஒருவர். நான் ஒய்.எம்.சி.ஏ. (Y.M.C.A.)வுக்கு செல்வதற்கு முன்பாக அவர்தான் எனக்கு பயிற்சியளித்தவர். அவர் குத்துச்சண்டை பயிற்சியளிப்பது வழக்கம். அவர் மிகவும்வேகமாக குத்துச்சண்டை போடுவார். அவர் ஒரு 'வெல்டர் வெயிட்' மாத்திரமே. அவருடைய எடை 145 பவுண்டு. அவர் எனக்கு பயிற்சியளித்தார். அவர்தன் கையை இப்படி கொண்டுவந்து என் வயிற்றில் குத்துவார். பின்பு என்னைத் தூக்கி சுவரருகில் நிறுத்துவார் (பாருங்கள்?) ஆனால் எனக்கு ஒன்றும் நேரிடாது. அவர் எனக்கு பயிற்சியளித்து வந்தார். அது சிறந்த பயிற்சியேயன்றி வேறொன்றுமில்லை. 142 அன்றொரு இரவு ஒரு சொப்பனம் கண்டேன். “ஆறு வினாடி'' ஸ்மித் (கவனியுங்கள், இது தரிசனமல்ல, சொப்பனம்) - வாலிபர்கள் 'ஆறு வினாடி” ஸ்மித்திடம் மல்யுத்தம் செய்வதாக நான் சொப்பனத்தில் கண்டேன். அந்த வயோதிபன்; எனக்கு ஐம்பத்திரண்டு வயதாகிறது. அவருக்கு ஐம்பத்தெட்டு , அறுபது வயதிருக்கும். அந்த வாலிபர்கள் அவரருகில் சென்று அவரைத் தொடக்கூட முடியவில்லை. அவர் அவர்களை இப்படி தன் கைகளால் கத்தரி போட்டு தரையில் தள்ளி , இறுகப் பிடித்துக் கொண்டார். நான் இது விசித்திரமாயுள்ளதே' என்று எண்ணினேன். என் மனைவி என்னுடன் இருந்தாள். நான், 'மேடா. உனக்குத் தெரியுமா? இவர்தான் எனக்கு குத்துச்சண்டை பயிற்சியளித்தவர்' என்றேன். அவள்,“நீங்கள் கூறினது நினைவிருக்கிறது” என்றாள். நான்,''ஆம், அவரளித்த பயிற்சியினால் நான் பதினைந்து குத்துச்சண்டை போட்டிகளில் வெற்றி பெற்று பணம் சம்பாதித்து, சுவிசேஷத்தை பிரசங்கிக்க வேண்டும் என்பதற்காக அந்த தொழிலை விட்டுவிட்டேன்' என்றேன். 143 அப்பொழுது காட்சி மாறினது. நான் ஆற்றை கடக்கத் தொடங்கினேன். நான் சென்றபோது, ஒரு இயந்திரப் படகில் சென்று கொண்டிருந்தேன். நான் சுற்று முற்றும் பார்த்தபோது, இரண்டு சகோதரர்கள் துடுப்புகளால் இயக்கப்படும் ஒரு சிறு படகில் (Canoe) உட்கார்ந்து கொண்டு, என்னுடன் வர ஆயத்தமாயிருப்பதைக் கண்டேன். நான் அவர்களிடம்,''சகோதரரே, நீங்கள் அப்படி செய்யக்கூடாது. நான் தனியாகப் போகவேண்டும்'' என்றேன். படகுக்காரன் என்னிடம் வந்து, ''இதோ உங்கள் படகு'' என்றான். அது வெண்ணிற பிளாஸ்டிக் படகு. நான், 'இது எனக்கு வேண்டாம்'' என்றேன். அவன்,''இதில் நீங்கள் இந்த வழியாக மணிக்கு ஐம்பது மைல் வேகத்தில் செல்லலாம்'' என்றான். நான், ஆனால் நான் அந்த வழியாக கடந்து செல்லவேண்டும்'' என்றேன். பாருங்கள்? ''அவன்,“அப்படியானால் அந்த ஆட்கள் இருக்கும் படகில் ஏறிக்கொள்ளுங்கள்'' என்றான். நான், 'அவர்கள் படகு ஓட்டுபவர்கள் அல்ல. படகைக்குறித்து அவர்களுக்கு அதிகம் தெரியாது. அவர்கள் உற்சாக மிகுதியினால் அப்படி செய்ய முயல்கின்றனர். அவர்களால் அந்த படகை ஓட்ட முடியாது. அவர்களிருவரும்மூழ்கிவிடுவார்கள். அவர்களால் முடியாது'' என்றேன். அவன், அவர்களை நம்பமாட்டீர்களா?' என்றான். நான், 'கவனி, அவர்களைக் காட்டிலும் எனக்கு படகுகளைக் குறித்து அதிகம் தெரியும். அந்த படகைஓட்டி ஆற்றைக் கடக்க நான் முனையமாட்டேன். அதைக் கடக்க இயந்திரப் படகு தேவை'' என்றேன். 144 அவன் அந்த சகோதரரில் ஒருவரை நோக்கி, 'நீர் படகு ஓட்டுபவரா?'' என்று கேட்டான். அந்த சகோதரர்கள், 'ஆம்' என்றனர். பாருங்கள்? ''நான்,“அவர்கள் கூறுவது தவறு என்றேன். படகுகாரன் என்னிடம் வந்து, நீர் செய்யவேண்டியது என்னவென்று கூறுகிறேன். அவர்கள் உம்மை நேசிக்கின்றனர். உம்மை நம்புகின்றனர். நீர் அந்த இயந்திரப் படகில் ஆற்றைக் கடக்க முனைந்தால், அவர்கள் அந்த படகில் உம்மைப் பின் தொடருவார்கள். அப்படி செய்தால், அவர்களிருவரும் மரித்து விடுவார்கள். அவர்களால் உம்மைப் பின் தொடர முடியாது'' என்றான். நான்,''சரி, அப்படியானால் நான் என்ன செய்ய வேண்டும்?'' என்றேன். கப்பல் துறையிலிருந்த படகுக்காரன் என்னிடம், நீர் திரும்பி சென்றுவிடும். இந்த தேசத்திலேயே ஒரே ஒரு சிறு சேமிப்பு அறை (Store house) மாத்திரமேயுள்ளது. அங்கு ஆகாரத்தை சேமித்துவையும். அவர்கள் இங்கு தங்கிவிடுவார் கள், நீர் போய்விடுவீர். ஆனால் நீர் ஆகாரத்தைச் சேமித்து வைக்க வேண்டும்'' என்றான். நான் எல்லாவிதமான காய்கறிகளையும் - முட்டை கோஸ், சிவப்பு முள்ளங்கி (turnip)முள்ளங்கி (radish) போன்றவைகளை வாங்கி, அங்கு குவித்து வைத்தேன். அப்பொழுது உறக்கத்தினின்று விழித்துக்கொண்டேன். அதன் அர்த்தம் என்ன வென்று அப்பொழுது புரியவில்லை. ஆனால் இப்பொழுது எனக்குப் புரிகிறது. பாருங்கள் ? நண்பர்களே, நாம் ஆகாரத்தை சேமித்து வைக்கிறோம். நீங்கள் தனியாக நடக்கவேண்டிய வாழ்க்கை இது. 145 லியோ, நீர் முதலில் இங்கு வந்தபோது, கூர்நுனிக் கோபுரத்தைக் குறித்து கண்ட சொப்பனம் ஞாபகமிருக்கிறதா? (சகோ. லீயோ மெர்சியர் ஆமென்'' என்கிறார் - ஆசி) நீர் அங்கு ஏறி வந்துவிடலாம் என்று நினைத்தீர். நான், 'லியோ, யாரும் இங்கு ஏறி வரமுடியாது. தேவன் ஒரு மனிதனை இங்கு கொண்டு வைக்க வேண்டும். நீரூம் உலகிலுள்ள எல்லாவற்றிலும் ஏறினீர்'' என்றேன். நான்,''லியோ, இங்கு நீர் வர முடியாது, (பாருங்கள்?) கீழே போய், இது தேவனிடமிருந்து வந்தது என்று ஜனங்களிடம் சொல்லுங்கள் (பார்த்தீர்களா? பாருங்கள்?) இது உங்கள் சுய முயற்சியை சார்ந்திருக்கும் ஒன்றல்ல...'' என்றேன். சகோதரரும், சகோதரிகளும், என் சபையும் எவ்வளவு நல்லவர்களோ; மற்ற சபைகளும், எல்லாவிடங்களிலுமுள்ள சகோதரரும் நல்லவர்களே....... 146 மற்ற சபைகளிலிருந்து என்னை விலக்கிக்கொள்ள முடியாது. யாரோ ஒருவர், ''நீங்கள் ஏன் திரித்துவக் காரருடனும், இது, அது, மற்றதுடனும், ஒருத்துவக்காரருடனும், இயேசுவின் நாமம் குழுவினருடனும், இன்னும் மற்றவர்களுடனும் கலந்து கொள்கிறீர்?'' என்று கேட்கிறார். அவர்கள் அனைவரும் என்னுடையவர்கள். அவர்கள் என்ன செய்தபோதிலும், அவர்கள் என்னுடைய வர்கள். அவர்கள் என் பிரசங்க பீடம். இஸ்ரவேல் ஜனங்கள் பொல்லாப்பு செய்தபோது, கர்த்தர் மோசேயிடம்,''நீ அவர்களை விட்டுப் பிரிந்து வா. உன் மூலம் ஒரு புது கோத்திரத்தை உண்டாக்குவேன்'' என்றார். ஆனால் மோசேயோ வழியில் குப்புற விழுந்து, 'அவர்களைக் கொல்வதற்கு முன்பு என்னைக் கொன்று போடும்'' என்றான். அவர்கள் என்ன செய்திருந்த போதிலும், அவர்களிடம் தான் நான் அனுப்பப்பட்டேன். அவர் ஒளியை அனுப்புகிறார் - ஒளி இருக்கும் இடத்தில் பிரகாசிக்க அல்ல, இருளில் பிரகாசிக்க. ஒளி அந்த இடத்துக்குத்தான் உரியது. அந்த ஜனங்களுடன் நீங்கள் ஒற்றுமையாயிருக்க வேண்டும். என்னவாயினும் அவர்களுடன் நீங்கள் நிற்க வேண்டும். அவர்களுடைய தவறுகளில் ... 147 இஸ்ரவேல் ஜனங்கள் அதிக தவறு செய்தனர். தேவனே சலிப்படையும் அளவுக்கு அவர்கள் தவறு செய்தனர். ஆனால் மோசே ....மோசேக்கு அந்த தன்மை எப்படி இருந்தது என்று நான் வியந்ததுண்டு. அது தான் மோசேக்குள் இருந்த கிறிஸ்துவின் ஆவி. பாருங்கள்? நாமெல்லாருமே தவறு செய்பவர்கள். நாம் தவறு செய்தபோது, அவர் நம்மனைவருக்கா கவும் வாதாடினார். அவர்கள் எவ்வளவு தவறாக இருந்தாலும், நாம் அவர்களுடன் ஐக்கியங்கொள்ளாமல் இருக்க வேண்டாம், அல்லது அவர்களிட மிருந்து நம்மை பிரித்துக்கொள்ள வேண்டாம். நம்மால் ஒரு ஆத்துமாவை ஆதாயப்படுத்தும் வரைக்கும், நாம் ''சர்ப்பங்களைப் போல் வினாவுள்ளவர்களா கவும், புறாக்களைப் போல் கபடற்றவர்களாகவும் சென்று, நம்மால் இயன்றவரை ஆத்துமாவை ஆதாயப்படுத்த முயல்வோமாக. 148 இன்று காலை நான் கூறுவது என்னவெனில், ஆகாரத்தை சேமித்து வைப்பதாகும் - உங்களுக்குப் புசிக்க ஏதாகிலும் இருக்க, உங்களுக்கு விருந்துண்ண ஏதாகிலும் இருக்க. அதை உங்கள் ஒலி நாடாக்களில் பதிவு செய்து, உங்கள் குளிர்ச்சி அறையில் உட்கார்ந்து கேளுங்கள். ஒருக்கால் நான் அதிக தூரம் சென்றுவிட்ட பின்பு, இவை உண்மையென்பதை நீங்கள் நினைவு கூருவீர்கள். உங்கள் அறையில் உட்கார்ந்து கொண்டு கேளுங்கள். பாருங்கள்? இதுவே ஆகாரம் சேமிப்பு அறையில் சேமித்து வைத்தல். பயணம் எங்கென்று எனக்குத் தெரியாது. ஆனால் அது எங்கிருந்தாலும், அவர் எங்கு வழி நடத்துகின்றார் என்று அவருக்குத் தெரியும். எனக்குத் தெரியாது. நான் அவரைப் பின் செல்கிறேன். 149 அவர் இங்கு என்ன செய்கிறார்? கவனமாய்க் கேளுங்கள். கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள் (அவருடைய சத்துவத்தின் வல்லமையில் பலப்படுங்கள்). நீங்கள் பிசாசின் தந்திரங்களுக்கு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக் கொள்ளுங்கள். ஏனெனில் (நமக்குப் போராட்டம் ) மாம்சத்தோடும் இரத்தத் தோடுமல்ல... (தோட்டாவைச் சுடுவதும், கத்தியால் வெட்டுவதும் அல்ல. பாருங்கள், அதுவல்ல). துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிக ளோடும்) 150 இவ்வுலகத்தை ஆளுவது யார்? பிசாசு. நிச்சயமாக. இப்பொழுது இங்கு நடந்து கொண்டிருக்கும் - இந்த அரசாங்கங்களில் நடந்து கொண்டிருக்கும் - தேவ பக்தியற்ற செயல்களுக்கு காரணம் யார்? அதற்கெல்லாம் காரணம் பிசாசுதான். அப்படிதான் வேதம் கூறுகின்றது. பிசாசு ஐக்கிய நாடுகளின் மேல் ஆதிக்கம் கொண்டுள்ளான். (இன்னும் சில நிமிடங்களில் அதற்கு வருகிறேன். அவன் அவ்வாறு ஆதிக்கம் செலுத்துகிறானா இல்லையா என்று நாம் கண்டு கொள்வோம் தேவன் தமது ராஜ்யத்தை நிலை நாட்டும் வரை, இதுவரை இருந்ததும், இனிமேல் இருக்கப்போவதுமான ராஜ்யங்கள் அனைத்தின் மேலும் அவன் ஆதிக்கம் செலுத்துகிறான். அதிலுள்ள ஒவ்வொரு வரும் பிசாசு என்று கூற நான் முனையவில்லை. அரசாங்கங்களில் தேவ பக்தியுள்ள மனிதர் உள்ளனர். 151 இன்னும் சில நாட்களில் அப்படிப்பட்ட ஒருவர் இங்கு வந்து சகோ. ஆர்கன் பிரைட்டுடன் படக் காட்சி ஒன்றைக் காண்பிக்கப் போகின்றார். அவர் ஐந்து ஜனாதிபதிகளின் கீழ் அரசியல் நிபுணராக (diplomat) இருந்தவர். அவர் பெயர் சகோ. ரோ. அவர் ஒரு ... (ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் அவர் இங்கிருப்பார் என்று நினைக்கிறேன். சகோ. நெவில் அதை அறிவிப்பார்). அவர் மிகவும் அருமையானவர். அவருக்கு எட்டு மொழிகளில் பேசமுடியும் என்று கூறினார். (அப்படித் தான் நினைக் கிறேன்). ஆனால் அவர் பரிசுத்த ஆவியை பெற்றுக் கொண்டபோதோ, தேவனிடம் பேசுவதற்கு அவருக்கு மொழியே இல்லை. எனவே தம்மிடம் பேசுவதற்கென தேவன் அவருக்கு ஒரு மொழியைத் தந்தார் அதற்கு முன்பு அவர் பேசாத ஒரு மொழி. சரி. வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகள்ளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. ஆகையால் ....(இராணுவ வீரர்களே, ஜெபவரிசை தொடங்குவதற்கு முன்பு இதை கவனியுங்கள்)...தீங்கு நாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும். (அந்த நாளில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்)... சகலத்தை யும் செய்து முடித்தவர்களாய் நிற்கவும்! ஆமென் புரிந்து கொண்டீர்களா? பார், தேனே, (சகோ. பிரனஹாம் வியாதிபட்டிருக்கிற சகோதரியிடம் மறுபடியும் பேசுகிறார் - ஆசி) உன்னால் முடிந்த அனைத்தும் நீ செய்து முடித்த பின்பு, நில், அசையாதே!) திராணியுள்ளவர்களாகும்படிக்குத் தேவனுடைய (ஒரு சில ஆயுதத்தை மாத்திரமா?) சர்வாயுத் வர்க்கத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள். சத்தியம் என்னும் கச்சையை .... சத்தியம் என்றால் என்ன? தேவனுடைய வார்த்தை . அது உண்மை . ''உமது வசனமே சத்தியம்' சரி)... உங்கள் அறையில் ...... இதை கவனியுங்கள், இது என்னவென்று கவனியுங்கள். அது இங்குள்ள உங்கள் நடுபாகம்... கட்டினவர்களாயும், நீதியென்னும் மார்க்கவசத்தைத் தரித்தவர்களாயும் .... அதாவது, சரியானதை செய்வது - தேவனுடைய வார்த்தையை உங்களில் கொண்டவர்களாய், எது சரியோ அதை செய்தல் ....... சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்தவர்களாயும் எங்கும், எந்த இடத்திற்கும், எந்த நேரத்திலும் செல்லுதல். சுவிசேஷம் என்னும் பாதரட்சையைக் கால்களில் தொடுத்தல். பாருங்கள். இப்பொழுது கவனியுங்கள். பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப் போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக....... எல்லாவற்றிற்கும் அது மேலாயிருக்கிறது... விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக் கொண்டவர்களாயும் நில்லுங்கள் ....... அதுதான் அக்கினியாஸ்திரங்களை தள்ளிவிடுகிறது.(பாருங்கள்?) இரட்சணியமென்னும் தலைச்சீராவையும் ...... அது ஆத்துமா, சிந்தை - இங்குள்ள சிந்தை - தலை - தலையை மூடிக்கொள்கின் றது). தேவ வசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள். 152 இந்த தலைச்சீராவை நீங்கள் எப்படி விட்டுவிட முடியும்? அது என்ன செய்கிறது? அது பாதுகாக்கிறது. தலைச்சீரா எதனால் செய்யப்படுகிறது? பித்தளையினால். பித்தளையை உருக்கி மிருது வாக்க முடியாது. அது கடினமானது, இரும்பைக் காட்டிலும் கடினமானது. பித்தளையினால் செய்யப்பட்ட தலைச்சீரா. அது என்ன? நான் பெறும் சுகம் தேவனிடமிருந்து வருகிறது. என் இரட்சிப்பு தேவனிடமிருந்து வருகிறது. என் ஆவி அவருடைய வார்த்தையுடன் இணைகிறது'' என்று அறிந்து கொள்ளுதல். என் ஆவி ஸ்தாபனத்தின் கருத்துக்களுடன் இணைவதல்ல, வார்த்தையுடன் இணைவது . ஆமென். பார்த்தீர்களா? பாதுகாக்கும் ஒன்றால் மூடப்பட்டுள்ளது -இரட்சணியம் என்னும் தலைச்சீரா, விடுவிக்கப்படுதல், அதை எடுத்துக்கொண்டு அணிவகுத்து முன்செல்லுங்கள். ஓ, இப்பொழுது நாம் அதைத்தான் செய்ய வேண்டியவர்களா யிருக்கிறோம். 153 சாத்தானின் சேனை. இப்பொழுது கவனியுங்கள் (நான் துரிதப்பட வேண்டும், ஆனால் இதை புரியவைக்க வேண்டும்.) சாத்தானின் சேனை வியாதிகளைக் கொண்டு வருகிறது. சாத்தான் அதைத்தான் செய்கிறான். அவன் அழிப்பவன். சாத்தான் சாத்தானின் முழு ராஜ்யமே வியாதி, மரணம், துக்கம், ஏமாற்றம், கவலை போன்றவைகளைக் கொண்டுள்ளது - எல்லாமே சாத்தான். ஆனால் தேவனோ ஜீவன், விசுவாசம், சந்தோஷம், சமாதானம் என்பவைகளாயிருக்கிறார். இப்பொழுது இந்த இரு சேனைகளும் ஒன்றையொன்று சந்திக்கின்றன. அவை போரிடுகின்றன, இப்பொழுது இந்த கட்டிடத்தில் அவை போரிட்டுக் கொண்டிருக்கின்றன. அவை நாள்தோறும் உங்களில் போர் புரிந்து கொண்டிருக் கின்றன. சாத்தான் அவனுடைய சேனைகளுடன் உங்களைப் பின் தொடர்ந்து அந்த பிரம்மாண்டமான ராஜரீக கோலியாத் - உங்களை பயமுறுத்திக் கொண்டிருக்கி றான். ஆனால் நீங்களோ தேவனால் அவருடைய வார்த்தையைக் கொண்டு அரணிடப்பட்டிருக்கிறீர்கள். (ஆமென்!) உங்கள் அரையில் சத்திய வார்த்தையைக் கட்டிக்கொண்டிருக்கிறீர்கள். மகிமை! பிரசங்கியே , அதுதான் அது : இரட்சணியம் என்னும் தலைச்சீரா, விசுவாசம் என்னும் கேடகம். பட்டயத்தை கையில் பிடித்து அசைத்து, ''சாத்தானே , உன்னைச் சந்திக்க வருகிறேன். நீ என்னை விஞ்ஞானத்தின் நாமத்தினால் சந்திக்கிறாய், நீ என்னை நாகரீகம் என்னும் நாமத்தினால் சந்திக்கிறாய், நீ என்னை ஸ்தாபனம் என்னும் நாமத்தினால் சந்திக்கிறாய், என்னை இது அது மற்றது என்னும் நாமத்தினால் சந்திக்கிறாய், நானோ இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தினால் உன்னைச் சந்திக்கிறேன்! நான் உன்னைப் பின்தொடர்ந்து தாக்குகிறேன். வழிவிலகு!'' என்று சொல்வோமாக! அப்பொழுது மரணம்கூட அங்கு நிற்க முடியாது. அதன் வழியாக ஒரு துளையை வெட்டுங்கள். அது உண்மை . 154 சாத்தானின் சேனை வியாதிகளைக் கொண்டு வருகிறது. தேவனுடைய சேனையோ அவைகளைத் துரத்த நியமிக்கப்பட்டடுள்ளது. ஆமென் பார்த்தீர்களா? ஒவ்வொரு முறையும் சாத்தான் உங்கள் மேல் ஏதாவதொன்றை எறிந்தால், தேவனுடைய சேனை . அதை புறம்பே தள்ளவேண்டும். ஆமென் புறம்பே தள்ளுதல். அந்த உபாயத்தை தான் தேவன் கையாளுகிறார். தேவனுடைய வார்த்தையை அவிசுவாசிக்க சாத்தான் நிர்மூலமாக்கும் சேனையை உபயோகித்து, மிகாவேலைக் காட்டிலும் மேலான ராஜ்யத்தை நிலை நாட்டினான். தேவன் அவனைப் புறம்பே தள்ளினார்.தேவனு டைய போக்கே பொல்லாங்கைப் புறம்பே தள்ளுதல், யோசனையை (reasoning) புறம்பே தள்ளுதல், மூட வழக்கங்களைப் புறம்பே தள்ளுதல், கவலையை புறம்பே தள்ளுதல், வியாதியைப் புறம்பே தள்ளுதல், பாவத்தைப் புறம்பே தள்ளுதலாம். ஆமென்! நீங்கள் அதற்கெல்லாவற்றிற்கும் மேலாக இருக்கிறீர்கள். நீங்கள் கிறிஸ்து இயேசுவுக்குள் உயிரோடெழுப்பப்பட்டு, உன்னதங்களிலே உட்கார்ந்து கொண்டு, ஒவ்வொரு பிசாசையும் உங்கள் காலடியில் கொண்டிருக்கிறீர்கள். அவன் தலையைத் தூக்க முற்பட்டால்........ 155 நீங்கள் மரித்திருக்கிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியும். உங்கள் ஜீவன் கிறிஸ்துவுக்குள் மறைந்திருக்கிறது. நீங்கள் எதற்கு மரித்திருக்கிறீர்கள்? உங்கள் புலன்களுக்கு நீங்கள் மரித்திருக்கிறீர்கள், உங்கள் மனச்சாட்சிக்கு நீங்கள் மரித்திருக்கிறீர்கள். (உங்கள் மனித கருத்து, ''நான் நினைக்கிறேன்'' என்று சொல்லக் கூடும்). உங்கள் யோசனைக்கு நீங்கள் மரித்திருக்கிறீர்கள், அவையனைத்திற்கும் நீங்கள் மரித்திருக்கிறீர்கள். நீங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அடக்கம் பண்ணப்பட்டு, அவரோடுகூட உயிரோடெ ழுந்திருக்கிறீர்கள். அவர் எங்கெல்லாம் இருக்கிறாரோ, அங்கெல்லாம் நீங்கள் இருக்கிறீர்கள். சந்தேகக்காரரில் ஒருவன் பரலோகத்துக்குச் சென்றபோது என்ன நேர்ந்தது? தேவன் அவனை உதைத்துத் தள்ளினார். கிறிஸ்துவுக்குள் உயிரோடெ ழுந்த வீரர்களிடம் அவர் என்ன கூறினார்? ''பிசாசு வந்தால் அவனை உதைத்துத் தள்ளுங்கள்; அவனைப் புறம்பே தள்ளுங்கள்.'' 156 இயேசு தமது சேனைக்குப் பயிற்சியளித்து அவர்களை உலகின் எல்லா பாகங்களுக்கும் அனுப்பினபோது, ''நீங்கள் உலகமெங்கும் போய் சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான். விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான். என் வீரர்கள் என் நாமத்தினால் பிசாசுகளைத் துரத்துவார்கள், நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது. வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்'' என்றார். %%கிறிஸ்தவ வீரர்களே முன் செல்வீர் யுத்தத்துக்கு அணிவகுத்து செல்லும் போல் இயேசுவின் சிலுவை. முன் சென்று கொண்டிருக்கிறது ''அவருடனேகூட சிலுவையிலறை யப்பட்டேன்; ஆயினும் நான் பிழைத்திருக் கிறேன். இனி நானல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார். ''வார்த்தை முன் செல்கிறது. தேவன் தமது இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தினால் வெட்டி வழியுண்டாக்கிக் கொண்டு செல்கிறார். 157 கிராண்ட் என்பவர் ரிச்மண்டை கைப்பற்றின போது, கிராண்ட் வருவதை அந்த சிறு தெற்கத்திய ஸ்திரீ கண்டாள். அவள் ஆவியினால் ஏவப்பட்டு இந்த பாடலைப் பாடினாள். %%கர்த்தருடைய வருகையின் மகிமையை என் கண்கள் கண்டன. %%அவர் கோபாக்கினையின் திராட்சை சேர்த்து வைக்கப்பட்டுள்ள ஆலையை மிதிக்கிறார் %%விசுவாசமுள்ள மின்னலை தமது வேகமான பயங்கரமான பட்டயத்தால் தளர்த்தினார். %%அவருடைய சேனைகள் அணிவகுத்து முன்செல்கின்றன ஆமென்! 158 கிராண்ட் எப்படி ரிச்மண்டை கைப்பற்றினார்? அவர் ஒன்றுமே செய்யாமல் உள்ளே நுழைந்தார். ஆமென் அப்படித்தான் அவர் ரிச்மண்டை கைப்பற்றினார். தேவனுடைய வீரர்களும் அவ்வாறே பாவத்தையும் வியாதியையும் கைப்பற்றுகின்றனர் அவர்கள் உள்ளே நுழைந்து விடுகின்றனர். ஆமென் அப்படித்தான் அவர்கள் சந்தேகங்களையும், பயங்களையும், மற்றவைகளையும் மேற்கொள்கின்றனர். ஏதாவதொன்று தலை தூக்கினால், அவர்கள் அதை வெட்டி வீழ்த்தி, வழியுண்டாக்கி முன்னேறுகின்றனர். ஓ, என்னே! அதுதான். தேவன் பரலோகத்திலிருந்து அவர்களைக் கீழே தள்ளினது போல் இவைகளையும் புறம்பே தள்ளி விடுகிறார். நமது தலைமைஅதிபதி அது எப்படி செய்யப்பட்டதென்று காண்பித்தார். 159 ராய் ராபர்ஸன், சகோ. ஃபங்க் போன்ற இராணுவத்தில் சேவை புரிந்த உங்களுக்கு உண்மையான தளபதி எவ்வளவு முக்கியம் வாய்ந்தவர் என்பது தெரியும். ஒரு சமயம் நான் சற்று ... ஜெபர்ஸன்வில் தீயணைக்கும் படையில் பணிபுரிந்தேன்..... ஃபெளல் என்பவரின் இடம் தீப்பிடித்துக் கொண்டது. ஜெபர்ஸன்வில் தீயணைக்கும் படை அங்கு சென்றது. தீயணைப்பு அதிகாரி, ''இங்கு சிறிது தண்ணீர் பீச்சுங்கள்'' என்றார். (சகோ. பிரன்ஹாம் சிறு ரப்பர் குழாயின் வழியாய் தண்ணீர் பீச்சப்படும் போது உண்டாகும் சத்தத்தை பாவனை செய்கிறார் - ஆசி ) - ஒரு சிறு ரப்பர் குழாயின் வழியாக. பின்பு கிளார்க்ஸ்வில் தீயணைக்கும் படை அங்கு வந்தது 'இங்கு சிறிது தண்ணீர் பீச்சுங்கள்'' என்றார். (சகோ. பிரன்ஹாம் சிறு ரப்பர் குழாயின் வழியாய் தண்ணீர் பீச்சப்படும்போது உண்டாக்கும் சத்தத்தை பாவனை செய்கிறார் - ஆசி).... ஃபெளலின் கட்டிடம் எரிந்து கொண்டிருந்தது. 160 அவர்கள் லூயிவில் தீயணைப்பு படையை வரவழைத்தனர். இவர்கள் தீயணைப்பில் நன்கு பயிற்சி பெற்றவர்கள். ஓ, அந்த சங்குகள் (sirens) எவ்வாறு முழங்கிக்கொண்டு வந்தன! இங்கிருந்த படைகளின் தலைமை அதிகாரிகள், ''இங்கு சிறிது தண்ணீர் பீச்சுங்கள், அங்கு சிறிது தண்ணீர் பீச்சுங்கள்'' என்றனர் - பயிற்சி பெறாத மனிதர். சகோதரனே லூயிவில் தீயணைப்பு வண்டி நின்ற மாத்திரத்தில், அந்த ஏணியின் மேல் படியில் யார் இருந்தது? தலைமை அதிகாரி (captain). அந்த ஏணியை நிறுத்தினவுடன், அவர் மேலேறிச் சென்றார். அது ஜன்னலைத் தொட்டபோது (அவர் ஜன்னலை அடையக் கூடவில்லை, அதற்கு முன்பாகவே அவருடைய கோடாலியை எடுத்து ஜன்னலுக்குள் எரிந்து, பையன்களே , பின்னே வாருங்கள்' என்றார். சில நிமிடங்களுக்குள் தீயணைக்கப்பட்டது. சிறந்த அதிகாரி. அவர், இங்கு சிறிது தண்ணீர் பீச்சுங்கள், அங்கு சிறிது, தண்ணீர் பீச்சுங்கள்'' என்று சொல்லும் அதிகாரியல்ல. ''பையன்களே , பின்னே வாருங்கள்'' என்று சொல்லுபவர். ஆமென். அவர் வழிகாட்டினார்.அதை எப்படி செய்ய வேண்டும்மென்று அவர் காண்பித்தார். நான், ''நன்கு பயிற்சி பெற்ற அந்த தீயணைப்பு படை சில நிமிடங்களுக்குள் தீயையணைத்துவிட்டதே“ என்று எண்ணினேன். ஏன்? தாம் என்ன செய்யப்போகிறார் என்பதை நன்கறிந்த ஒருதலைமை அதிகாரி அவர்களுக் கிருந்தார். 161 சகோதரனே, உங்கள் வேத சாஸ்திரத்தைக் குறித்தும் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட ஸ்தாபனங்களைக் குறித்தும் நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் பேசி அதனுடன் விளையாடிக் கொண்டிருங்கள். ஆனால் எனக்கோ அதை எப்படி செய்ய வேண்டுமென்று என்னிடம் கூறின் ஒரு தலைமை அதிபதி இருக்கிறார்.''நல்லது , என்னால் முகர முடியுமானால், உணர முடியும் மானால்...'' என்று நீங்கள் கூறுகின்றீர்கள். ஓ, அர்த்தமற்றது! அதை எந்த விதத்தில் செய்ய வேண்டுமென்று தலைமை அதிபதி லூக்கா 4ம் அதிகாரத்தில் கூறியுள்ளார். அதை படிக்க எனக்கு நேரமில்லை. இன்று காலை நீங்களே அதை படித்துக் கொள்ளுங்கள். லூக்கா 4ம் அதிகாரம், முதலாம் வசனம் தொடங்கி, அவர்,''நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். நீங்கள் சென்று பெரிய ஸ்தாபனங்களை ஏற்படுத்தி, போதகர்களையும், மூப்பர்களையும், கார்டினல்களையும், பேராயர்களையும் நியமித்துக் கொள்ளுங்கள்' என்று கூறவில்லை. சாத்தான் அவரை சந்தித்தபோது, ''நீர் பசியாயிருக்கிறீர். இந்த கற்களை அப்பமாக்கும்'' என்றான். அவர்,''எழுதியிருக்கிறதே'' என்றார். அவன்,''உயர வாரும், நான் உம்மை உயர கொண்டு போய் சிலவற்றைக் காண்பிக்கிறேன்'' என்றான். “ஆனால் எழுதியிருக்கிறதே'' ''நீர் இதை செய்தால், நான் இதை செய்வேன்.'' ''எழுதியிருக்கிறதே.'' 162 அப்படித்தான் செய்ய வேண்டுமென்று நமது தலைமை அதிபதி கூறினார். சகோதரியே, அது எப்படி செய்யப்படுகிறது? வியாதியஸ்தர் மேல் நீங்கள் கைகளை வைத்தால் அவர்கள் சொஸ்தமாவார்கள்'' என்று எழுதியிருக்கிறதே! ஆமென்! அது என்ன? எழுதியிருக்கிறதே! அதுவே தளபதியின் கட்டளை. “என் வார்த்தைகளைக் கேட்டு என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு' என்று எழுதியிருக்கிறதே! எழுதியிருக் கிறதே! எழுதியிருக்கிறதே! அதுதான் கட்டளை. அதுதான் இராணுவ வீரன். அதுதான் முறை. நாம் முன்னேறிக் கொண்டிருக்கும் பீரங்கிப்படை அதுவே. 163 தாவீது என்ன செய்தான்? அவன் கோலியாத்தினிடம் நேரடியாக நடந்து சென்றான். அவன் நமக்குக் காண்பித்தான்.... அதை எப்படி செய்ய வேண்டுமென்று இஸ்ரவேல் இராணுவத்திற்கு தாவீது எவ்வாறு காண்பித்தான்? 'தாவீது' என்றால் அன்பார்ந்தவர், இரட்சகர்' என்று பொருள். பாருங்கள்? தாவீது அதை எப்படி செய்தான்? அவன், அதை செய்ய வேண்டியமுறை இதுதான். தேவனுடைய வார்த்தையை விசுவாசியுங்கள்“ என்றான். கோலியாத் அங்கு வந்து,“நான் என்ன செய்யப்போகிறேன் தெரியுமா? இந்த ஈட்டியின் முனையில் உன்னைத் தூக்கி பறவைகளுக்கு உன்னை ஆகாரமாகக் கொடுப்பேன்” என்றான். தாவீதோ, நீ என்னை ஒரு ஸ்தாபனமாக சந்திக்கிறாய்; ஒரு நவீன விஞ்ஞானியாக என்னை சந்திக்கிறாய்; பெரிய பதினான்கு அடி நீளமுள்ள உன் பட்டயத்துடன் என்னை சந்திக்கிறாய்; என்னால் தரையிலிருந்து தூக்கக் கூட முடியாத பித்தளை தலைச் சீராவையும் கேடகத்தையும் கொண்டவனாய் என்னைச் சந்திக்கிறாய்; பயிற்சி பெற்ற இராணுவ வீரனாக என்னை சந்திக்கிறாய்; வேத சாஸ்திரத்தில் நீ பெற்ற அநேக டாக்டர் பட்டங்களுடன் என்னை சந்திக்கிறாய். இவையனைத்தும் கொண்டவனாய் என்னை சந்திக்கிறாய். ஆனால் நானோ இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தில் வருகிறேன். இன்றைக்கு உன் தலையை உன் தோள்களிலிருந்து வெட்டுவேன்'' என்றான். ஆமென்! 164 அந்த சிறு பையன், அந்த இராட்சதனுக்கு எதிராக வருகிறான். ஆனால் அவன், தான் நின்று கொண்டிருக்கிறான் என்பதை அறிந்திருந்தான். இஸ்ரவேல் ஜனங்கள் அங்கு பயத்தினால் நடுங்கி, ''பாவம் அந்த சிறு பையன்' என்றனர். கோலியாத்,''நான் என்ன செய்கிறேன் பார்'' என்று கெர்ச்சித்துக் கொண்டு வந்தான். தாவீதுக்கு இயேசுவில் (J-E-S-U-S) விசுவாசம் (F-A-I-T-H) இருந்தது - ஐந்து கற்கள் (ஆங்கிலத்தில் 'இயேசு' 'விசுவாசம் என்னும் சொற்கள் ஐந்து எழுத்துக்களைக் கொண்டுள்ளன - தமிழாக்கியோன்). அதை தொடங்குவதற்கு ஒரு சிறு கல். அவன் அதை அப்படி சுழற்றினான். பரிசுத்த ஆவியானவர் அந்த கல்லின் மேல் ஆதிக்கம் வகித்தார். அது சுழன்று சென்றது. கோலியாத் தரையில் விழுந்தான். அப்படித்தான் அது செய்யப்பட்டது. இயேசுவும்,''நீங்கள் சுவிசேஷ ஊழியத்திற்கு செல்லும்போது, இந்த பிசாசுகளை மேற்கொள்ள விரும்பினால், அதை எப்படி செய்ய வேண்டுமென்று காண்பிக்கிறேன்“ என்றார். 165 சாத்தான் (கோலியாத்), 'உம்மை சந்திக்கிறேன். என்னால் என்ன செய்ய முடியுமென்று காண்பிக்கிறேன். நீர் பசியாயிருக்கிறீர். நீர் தேவனுடைய குமாரனேயானால், உமக்குச் சவால் விடுகிறேன். நீர் தேவனுடைய குமாரனென்று உம்மை அழைத்துக் கொள்கிறீர். உமக்கு சவால் விடுகிறேன். நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்த கற்கள் அப்பமாகும்படி செய்யும். சாப்பிடும், நீர் பசியாயிருக்கிறீர். நீர் தேவனுடைய குமாரனேயானால், அதை செய்ய உமக்கு வல்லமையிருக்கும்“ என்றான். ஆனால் அவரோ, “மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் பிழைப்பதல்ல என்று எழுதியிருக்கிறதே” என்றார். ஓ! அப்படித் தான் நமது தலைமை அதிபதி செய்தார். பிசாசு அவரை ஆலயத்தின் உப்பரிகையின் மேல்கொண்டு நிறுத்தி. ''நீர் தாழக் குதித்தால், இப்படி எழுதியிருக்கிறதே, உமக்குத் தெரியுமா?'' என்று கேட்டான். அவர், 'ஆம்! ஆனால், 'உன் தேவனாகிய கர்த்தரை பரீட்சை பாராதிருப்பாயாக' என்றும் எழுதியிருக்கிறதே'' என்றார். அவர் தம்மை யாரென்று அழைத்துக் கொண்டார் என்று பாருங்கள்! உன் தேவனாகிய கர்த்தர் உன் தேவனாகிய கர்த்தரை பரீட்சை பாராதிருப்பாயாக. “ அப்படியும் எழுதியிருக் கிறது. பாருங்கள்? 166 ஓ, என்னே ! அவர் என்ன செய்தார்? அவர் தேவனுடைய வார்த்தையினால் அவனைத் தோற்கடித்தார். பிசாசின் உபாயமே நீங்கள் தேவனுடைய வார்த்தையை அவிசுவாசிக்கும்படி செய்வதாகும். ஆனால் தலைமை அதிபதியோ தேவனுடைய வார்த்தையை ஏற்றுக்கொண்டு அதை செய்யும்படி நமக்குக் கட்டளையிட்டுள்ளார். ''என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்.'' 167 ஓ , அவர்களுடைய தலைமை அதிபதியாகிய சாத்தான் இந்த ஸ்தாபனங்களில் சில, அவனுக்கு விரிந்த குளம்புகள் உள்ளதென் றும், விரிந்த வால் உள்ளதென்றும் உங்களை நம்பச் செய்வார்கள். அதை நம்பாதீர்கள், அப்படி இல்லவே இல்லை. அவன் அப்படி இல்லை. இல்லை, ஐயா, சகோதரனே! அவன் தந்திரமுள்ளவன். அவன் காண்பதற்கு அப்படியுள்ளதாக நம்ப வேண்டாம். உங்களை பயமுறுத்த அவர்கள் அப்படி செய்கின்றார்கள். அது பிசாசு அல்ல. முதலாவதாக பிசாசுக்கு குளம்பு கிடையாது. நான் நம்ப மாட்டேன். அவன் ஒரு ஆவி. பிசாசு ஒரு ஆவி. அவர்கள் சித்தரிப்பது போல் அவனுக்கு விரிந்த குளம்புகளும் மற்றவைகளும் கிடையாது.இல்லை, இல்லை! ஆனால் அவன் ஞானமுள்ளவன். அவன் உண்மையாகவே ஞானமுள்ளவன், நன்கு கல்வி பயின்றவன் (எப்பொழுதும் அப்படித்தான்), உலகப் பிரகாரமான ஞானத்தில் கைதேர்ந்தவன், ஓ , ஆமாம்! அவன் அழகுள்ளவன். அவன் தனது சேனையை உலகப்பிரகாரமான ஞானத்தின் அடிப்படையில் ஒன்று சேர்த்திருக்கிறான். சகோதரனே, நீங்கள் பேசும் போது கவனமாயிருக்க வேண்டும். அற்புதங்களின் நாட்கள் கடந்துவிட்டன'' என்று கூறும் ஒருவரை நீங்கள் சந்திக்கும்போது, நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்பதைக் குறித்து கவனமாயிருங்கள். 168 பிசாசுக்கு விரிந்த குளம்புகள் கிடையாது. சகோதரனே, அவன் வேதசாஸ்திர கல்லூரியிலிருந்து வெளிவந்து , மெருகேற்றப்பட்டவன். அவன் கல்வியறிவுள்ளவன் -பி.எச்.டி, எல்.எல்.டி , க்யூ.யூ. எஸ்.டி போன்ற பட்டங்கள். பாருங்கள்? அவன் அதிக கல்வியறிவுள் ளவன். அவன் ஞானமுள்ளவனா? நிச்சயமாக. சர்ப்பமானது எல்லாவற்றைப் பார்க்கிலும் ''தந்திரமுள்ளதாயிருந்தது. 'தலைமயிரை கீழே வாரி விட்டுக்கொண்டு, 'கோட்டில் ஒரு சுருக்கமும் கூட இல்லாமல், சாமர்த்தியமுள்ளவன் - அவனால் இயன்றவரை ஞானமுள்ளவனும் சாமர்த்தியமுள்ளவனுமாயிருக்கிறான், அது உண்மை . நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்பதை உறுதியாய் அறியாமல், அவனுடன் விளையாட வேண்டாம். அது உண்மை . ஓ, ஆனால் அவனுடைய பழைய உபாயம் என்னவென்பதை நாம் அறிந்திருக்கிறோம். அவன் என்ன செய்ய முயல்கிறான் என்று நமக்குத் தெரியும் - நாம் தேவனுடைய வார்த்தையை அவிசுவாசிக்கும்படி செய்ய அவன் முயல்கிறான். அவனுக்கு விரிந்த குளம்புகள் கிடையாது. இல்லை! இல்லை! இல்லை! அவனுக்கு விரிந்த குளம்புகள் இல்லையானால், அவன் வேறெதாவதாக இருக்க வேண்டும். அவன் தந்திரமுள்ளவன், ஞானவான், கல்வி கற்றவன், ஒழுங்காக அமைத்துக் கொண்டவன் (organized). சகோதரனே, அவனுக்கு தன் சேனை உண்டு. எனவே .... 169 கவனியுங்கள்! ஒருமுறை சுவிட்சர்லாந்தில் (ஜனங்களே, எங்கு நிறுத்துவதென்று எனக்குத் தெரியவில்லை), எதிரியாகிய ஜெர்மானியப் படை உள்ளே நுழைந்தது. அது செங்கல் சுவரைப் போல் அவர்களுக்கு இருந்தது. அவர்கள் ஒவ்வொருவரும் நன்கு பயிற்சி பெற்றவர்கள். அவர்கள் பிடித்திருந்த ஈட்டிகள் எட்டு அல்லது பத்து அடி நீளமாயிருந்தது. அவர்கள், பாவம் இந்த சுவிட்சர்லாந்து நாட்டினருக்கு எதிராக வந்தனர். இவர்களிடம் என்ன இருந்தது? அரிவாள்களும், கம்புகளும், கற்களும் மாத்திரமே. அவர்கள் அங்கு எதிர்த்து நின்றனர். அவர்களுக்கு பின்னால் மலையின் மேல் அவர்களுடைய வீடுகள் இருந்தன. சுவிட்சர்லாந்து படையினர் ஜெர்மானியபடையினரை எதிர்த்து புறப்பட்டனர். இவர்கள் அவர்களுக்கு ஒரு தீங்கும் இழைக்கவில்லை. ஆயினும் ஜெர்மானிய படை உள்ளே நுழைந்து நாட்டைக் கைப்பற்றினது. 170 அது போன்று, இந்த பிள்ளை என்ன செய்தது? அது சிறு பிள்ளை. கூடுமானால் சாத்தான் அதனைக் கொல்லப்பார்க்கிறான். நிச்சயமாக! அந்த சிறு வயதிலேயே அவன் தாக்குகிறான். பாருங்கள்? சுவிட்சர்லாந்து நாட்டினர் ஒரு தீங்கும் செய்யவில்லை. அவர்கள் நல்லவர்கள். அவர்கள் தங்கள் வீடுகளை பாதுகாக்க முனைந்து, தங்கள் நாட்டைப் பாதுகாக்க அணிவகுத்து நின்றனர். அங்கு ஆர்னால்ட் ஃபான்விங்கல் ரீட் என்னும் பெயர் கொண்ட ஒருவன் இருந்தான். எதிரிப்படை வந்தது. அவர்கள் எதிரிப் படையால் சூழப்பட்டனர். நாம் என்ன செய்வோம்?'' என்று அவர்கள் திகைத்தனர். எங்கு பார்த்தாலும் நன்கு பயிற்சி பெற்ற படையினர், கையில் ஈட்டியைப் பிடித்துக் கொண்டு, ஒன்று - இரண்டு, ஒன்று - இரண்டு என்று அடி எடுத்து, அணிவகுத்து முன்னேறி அந்த சிறு படைக்குள் நுழைந்தால் போதும், அவர்களுடைய ஈட்டிகள் அவர்களுக்குள் பாய்ந்துவிடும். சுவிட்சர்லாந்து படையினரு டைய முடிவு அவ்வளவு தான். 171 மலையின் மேல் அவர்களுடைய வீடுகளும் அவர்களுக்கு அருமையானவர்களும் இருந்தனர். பெண்கள் கற்பழிக்கப்படுவார்கள். அவர்களுடைய வாலிப குமாரத்திகளும் பிள்ளைகளும் கொல்லப்படுவார்கள். அவர்களுடைய வீடுகள் தீக்கிரையாகும். அவர்களுடைய ஆகாரம், ஆடுமாடுகள் எல்லாமே அழிக்கப்படும். என்ன நேர்ந்தது? அப்பொழுது ஆர்னால்டு ஃபான் விங்கல் ரீட்டுக்கு உணர்ச்சி மேலிட்டது. அவன், 'சுவிட்சர்லாந்தின் மனிதர்களே, இன்று நான் சுவிட்சர்லாந்துக்காக மரிப்பேன்.'' ஆமென்! ''இன்று நான் சுவிட்சர்லாந்துக்காக மரிப்பேன்“ என்றான். அவர்கள், ''நீ என்ன செய்யப் போகின்றாய்?'' என்று கேட்டனர். அவன் “நீங்கள் என்னைப்பின் தொடர்ந்து, உங்களுக்குள்ள முழு பலத்துடன் போரிடுங்கள்'' என்றான். அவன் அங்கு நின்று கொண்டு, தன் ஈட்டியை கீழே எறிந்து (தன் கையிலுள்ள சிறுகோலை இப்படி எறிந்து), தன் கைகளையுயர்த்தி மிகுந்த சத்தமிட்டு, எதிரியின் படைக்குள் ஓடி, ''சுதந்தரத்துக்கு வழிவிடுங்கள்'' என்று உரக்க சத்தமிட்டு தன்னால் இயன்றவரை அவர்களுடைய ஈட்டிகளை பிடுங்கி, தன் மார்பில் பாய்ச்சி, மரித்து போனான். 172 அதற்கு முன்பு அவன்,''தூரத்தில் எனக்கு ஒரு சிறு குடும்பம் உள்ளது. என் மனைவியும் குழந்தைகளும் அங்குள்ளனர். நான் அண்மையில் வாங்கிய வீட்டை விட்டு செல்கிறேன். என் குடும்பத்தை நான் அதிகமாக நேசிக்கிறேன். ஆனால் இன்று நான் சுவிட்சர்லாந்துக்காக மரிக்கிறேன். நாட்டை காக்க என் உயிரைக் கொடுக்கிறேன்“ என்றான். அவன் தான் வீரன்... அன்று முதல் போர் இருக்கவில்லை. அது முடிந்து விட்டது. அவன் காண்பித்த வீரத்தின் விளைவாக, எதிரியின் படை முறியடிக்கப்பட்டது. எதிரிப்படை குழம்பினது. சுவிட்சர்லாந்து நாட்டினர் அவர்கள் மேல் கற்களை உருட்டி அவர்களை நாட்டை விட்டு துரத்தினர். அவர்கள் திரும்பி வரவேயில்லை. அது நூற்றுக்கணக்கான ஆண்டுகள் முன்பு நிகழ்ந்தது. பாருங்கள்? ஏன்? 173 அது தீரமான செயல். ஆனால் ஓ , சகோதரனே, ஒருநாள் அறியாமை, மூட நம்பிக்கை, சந்தேகம், குழப்பம், ஏமாற்றம், பயம் போன்றவை தேவனுடைய பிள்ளைகளை மூலையில் தள்ளியிருந்தபோது, இயேசு கிறிஸ்து என்னும் பெயர் கொண்ட ஒருவர் இன்றைக்கு நான் ஜனங்களுக்காக மரிக்கிறேன்'' என்றார். அது உண்மை . அவன் தனது சேனையிடம் என்ன கூறினான்? ''என்னை பின் தொடர்ந்து, உங்களுக்குள்ள எல்லாவற்றோடும் போரிடுங்கள். உங்களிடம் தண்டாயுதம் இருந்தால், அதைக்கொண்டு சண்டையிடுங் கள். பயப்பட வேண்டாம்! உங்களிடம் கம்பு இருந்தால், அதைக் கொண்டு சண்டையிடுங் கள். உங்களிடம் பாறை இருந்தால், அதைக் கொண்டு சண்டையிடுங்கள் - உங்களிடம் எது இருந்தாலும்“என்றான். நமது தலைமை அதிபதி இன்று அதை தான் கூறுகிறார். (சகோ. பிரன்ஹாம் தன்னுடைய கரங்களை இரண்டு தடவை தட்டுகிறார் - ஆசி) ''நான் தேவனுடைய வார்த்தையை எடுத்துக் கொண்டு, பிசாசையும் இவனுடைய வல்லமையையும் தோற்கடித்தேன். ''அவர் அவனை வார்த்தையைக் கொண்டு துண்டு துண்டாக வெட்டினார் (ஆமென்!). உங்களிடம் இருப்பதைக் கொண்டு உங்களிடம் ஒரு வார்த்தை இருந்தால் ''உன் தேவனாகிய கர்த்தர் உன் பரிகாரி' அவனை வெட்டுங்கள்! அவரைப் பின்பற்றுங்கள் (ஆமென்!). நமது தளபதியை பின்பற்றுங்கள். ஆம். ஐயா! அவர் அவனை துண்டு துண்டாக வெட்டினார். 174 சாத்தானிடம் பெரிய அழகிய ராஜ்யங்களும், அதிக அழகும், எல்லாம் தற்கால நாகரிகம் கொண்டவைகளாய் விளங்குகின்றன. ஆனால் அதற்கும் நமக்கும் சம்பந்தமில்லை. அது உண்மை . அவன் இப்பொழுதும் பூமியிலுள்ள எல்லா மிருகங்களைப் பார்க்கிலும், மிகுந்த தந்திரமுள்ளவனாயிரு க்கிறான். ஆம், ஐயா! இந்த பிரபஞ்சத்தின் பிள்ளைகள் ராஜ்யத்தின் பிள்ளைகளைப் பார்க்கிலும் அதிக புத்திமான்களாயிருக்கிறா ர்கள் என்று இயேசுகூறினார். இந்த இரு பெரிய போராட்டங்களும் (நாம் இப்பொழுது... நான் முடிக்கவேண்டும்). இப்பொழுது இந்த இரு பெரிய போராட்டங்களும் ஒன்றுக்கொன்று எதிராயுள்ளன. இந்த மணி வேளையில் வியாதி உலகத்தை அதிகமாக தாக்கியுள்ளது மருத்துவ விஞ்ஞானமே திகைத்து நிற்கும் அளவுக்கு, எல்லாமே திகைத்து நிற்கும் அளவுக்கு . தேவனுடைய சிறு சேனை இப்பொழுது மூலையில் தள்ளப்பட்டுள்ளது. மற்றொரு ஆர்னால்ட் ஃபான் விங்கில் ரீட் எழும்புவதற்கு நேரம் வந்து விட்டது. 175 மற்றொரு தேவனுடைய மனிதன் நிற்பதற்கு இதுவே நேரம். ஒரு எலியா தோன்றுவதற்கு நேரம் இதுவே. ஏதாவதொன்று நிகழ இதுவே நேரம். தேவனுடைய சேனையே, உன் சிந்தையை அடைத்துக்கொள், உன் புலன்கள் மூலம் பிசாசு அளிப்பதை ஒரு நிமிடம் நின்று யோசனை செய்யாதே. தேவனுடைய வார்த்தை ஒரு போதும் தவற முடியாது என்பதை மாத்திரம் ஞாபகம் கொள். இரு சேனைகளும்.... வெள்ளம் போல் சத்துரு வரும்போது - இன்றைக்கு வருவது போல் தேவன் அப்பொழுது என்ன செய்வதாக வாக்களித்துள்ளார்? கர்த்தருடைய ஆவியானவர் அவனுக்கு விரோதமாய்க் கொடியேற்றுவார். நீ அவர்களில் ஒருவனா? ஆம், ஐயா 176 நாம் யாக்கோபு 4:7ல் கற்பிக்கப்பட்டுள்ளோம் (அதை படிக்க எனக்கு நேரமில்லை ) , பிசாசுக்கு எதிர்த்து நிற்க வேண்டுமென்று. அப்பொழுது அவன் நடந்து செல்ல மாட்டான், உங்களை விட்டு ஓடிப்போவான். பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள்! நீங்கள் எப்படி பிசாசுக்கு எதிர்த்து நிற்க முடியும்? நமது தலைமை அதிபதி நம்முடன் எப்படி கூறியிருக்கிறாரோ, அதேவிதமாக. தேவனுடைய வார்த்தையை எடுத்துக்கொள்ளுங்கள். அப்படித்தான் நீங்கள் பிசாசுக்கு எதிர்த்து நிற்க முடியும் -தேவனுடைய வார்த்தையின் மூலம் அது எப்படி செய்யப்பட்டதென்று நமது தலைமை அதிபதி நமக்கு அறிவித்திருக்கிறார். 177 முடிக்கும் தருணத்தில் இதைக் கூற விரும்புகிறேன். அந்த பழைய பிசாசு வெட்கமடைந்து விட்டான் என்று நீங்கள் எண்ணலாம். அவன் ஒரு குழந்தையை தாக்குவான் என்று நினைக்கிறீர்களா? அவன் எதையும் தாக்குவான். அவன் இயேசுவை தாக்கினான். அவன் மூன்று கொடிய தாக்குதல்களுடன் இயேசுவிடம் வந்தான். உங்களுக்கு அது தெரியுமா? அவன் ஒரு முறை மாத்திரம் அவரைத் தாக்கவில்லை. அவன் உங்களை வியாதியால் தாக்குவான். அவன் மறுபடியும் வந்து அற்புதங்களின் நாட்கள் கடந்து விட்டன. நீ சுகம் பெற முடியாது. அப்படி ஒன்றுமில்லை'' என்று கூறி தாக்குவான். அது உண்மையென்று உங்களுக்கு தெரியுமல்லவா? அவன் இயேசுவை மூன்று முறை தாக்கினான். தேவனுடைய வார்த்தையின் பேரில் அவன் அவிசுவாசம் கொண்டவனாய் அவன் இயேசுவின் மேல் மூன்று கொடிய தாக்குதல்களைப் புரிந்தான். இயேசுவே வார்த்தை. நிச்சயமாக. ஆனால் அவன் அதை நம்பவில்லை, ''நீர் குமாரனேயானால், நீர் குமாரனேயானால்! ''எதிர் “ தாக்குதல் புரிவது போல் அவன் கொடிய தாக்குதல்களுடன் வருகிறான். 'நீர் தேவனுடைய குமாரனேயானால், ஒரு அற்புதத்தை காண்பியும். அது செய்யப்படுவதை நான் காணட்டும்.'' சகோ தரனே, அவன் மூன்று கொடிய தாக்குதல்களைப் பொழிந்தான். 178 ஆனால் இயேசு என்ன செய்தார்? இயேசு தேவனுடைய வார்த்தை; அவரே வார்த்தை. சாத்தான் வார்த்தையை தாக்கினான். மகிமை! (சகோ. பிரன்ஹாம் தன்னுடைய கரங்களை ஒரு தடவை தட்டுகிறார் - ஆசி எனக்கு பிரசங்கம் செய்ய ஆர்வம் தோன்றுகிறது, உண்மையாக. (சகோ. பிரன்ஹாம் பிரசங்க பீடத்தை இரண்டு தடவை தட்டுகிறார் - ஆசி) இயேசுவே வார்த்தை .''ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தைமாம்சமாகி ... வாசம் பண்ணினார். இயேசுவே வார்த்தை, அவர் என்ன செய்தார்? அவனைக் கண்டம் துண்டமாக வெட்டினார், ஓ, என்னே! (சகோ. பிரன்ஹாம் தன்னுடைய கரங்களை இரண்டு தடவை தட்டுகிறார் ஆசி) (நான் முடிக்கப் போகின்றேன்). இயேசு என்ன செய்தார்? அவர் வார்த்தையாயிருந் தார். எனவே வார்த்தையைக் கொண்டு சாத்தானுடைய கொடிய தாக்குதல்களில் அவனை வெட்டினார். அவன் ஒரு கூட்டம் 'பாரசூட் வீரரைப்போல் அங்கு பறந்து வார்த்தையாகிய இயேசுவை சூழ்ந்து கொண்டான். ஆனால் இயேசுவோ வார்த்தையை எடுத்துக்கொண்டு அவனைக் கண்டம் துண்டமாக வெட்டினார். அல்லேலூயா! நிச்சயமாக. அவனைத்துண்டு துண்டாக வெட்டி வார்த்தையினால் அவனைத் தோற்கடித்தார். 179 அவனுடைய தாக்குதலைப் பாருங்கள்? கவனியுங்கள்! முடிக்கப்போகும் இந்நேரத்தில் கூர்ந்து கனியுங்கள். அவன் எதை தாக்குகிறான்? தேவனுடைய வார்த்தையை அவிசுவாசிக்கச் செய்தல். அதுவே அவன் தாக்குதல். இதுவரை சண்டையிட்டவைகளில் மிகப் பெரிய யுத்தத்தை நீங்கள் அங்கு காணமுடிகிறதா? இரண்டு சேனைகள் மாத்திரமேயுள்ளன ; சாத்தானும் தேவனும். உங்களுக்கு எதிராக் சாத்தான் உபயோகிக்கும் ஆயுதம் எது? உங்கள் ஆயுதத்தை நீங்கள் அவிசுவாசிக் கும்படி செய்ய முயல்வதே. அவன் உங்கள் ஆயுதத்தைப் பறிக்கிறான். இப்பொழுது அமைதியாக கவனிப்போம். கவனியுங்கள். உங்கள் ஆயுதம் சமம் அல்லவென்றோ அல்லது அது பலமானதல்லவென்றோ உங்களை அவன் விசுவாசிக்கும்படி செய்தால் அவன் உங்கள் ஆயுதத்தை பறித்து விடுகிறான். ஓ. சகோ. நெவில், நாம் அதை அவிசுவாசிக்கமாட்டோம் என்று நம்புகிறேன். உங்கள் ஆயுதத்தை அவன் அவிசுவாசிக்கும்படி செய்தால், அவன் உங்கள் ஆயுதத்தை பறித்து விடுகிறான். நீங்கள் அதை கீழே வைக்கும்போது, உங்கள் சண்டை முடிந்து விடுகிறது. நீங்கள் அத்துடன் முடிந்து விடுகின்றீர்கள். ஆயுதத்தை கையிலேந்தியிருங்கள். அதை கீழே வைக்காதீர்கள். அவனுடைய அவிசுவாசத்தை நாம் காண்கிறோம்.... இன்னும் ஒரு காரியத்தை ஒரு நிமிடத்தில் உங்களிடம் கூற விரும்புகிறேன். 180 ருஷியாவில் ... இதை இராணுவத்தில் பணிபுரிந்தவர்களிடம் நன்மைக்காகவும், வேத மாணாக்கராகிய உங்களுக்கும் கூறுகிறேன். நீங்கள் ஏன் ருஷியாவைக் குறித்து சந்தடி செய்தும், சத்தமிட்டுக் கொண்டும் இருக்கிறீர்கள்? குண்டு போடப்பட்டால், அதற்கான பாதுகாப்பிடம் ஒன்றை நீங்கள் கட்டவேண்டும் என்று நான் கூற நீங்கள் கேட்டதில்லை. நீங்கள் ஏன் ருஷியாவைக் குறித்து சந்தடி செய்கிறீர்கள்? ருஷியா ஒன்றுமில்லை. அது யுத்தங்கள் ஒன்றும் ஜெயிக்கப்போவதில்லை. அவர்கள் உலகத்தை ஜெயிக்க போவதில்லை. கம்யூனிசம் உலகத்தை ஜெயிக்கப் போவதில்லை. ஜனங்களுக்கு என்ன நேர்ந்தது? தேவனுடைய வார்த்தை தவறாகுமா? கவனியுங்கள், இது ஒலி நாடாவில் பதிவு செய்யப்படும்கின்றது. நான் இப்பொழுது உலகத்திற்கு அல்லது இந்த ஒலி நாடாக்கள் எங்கெல்லாம் செல்கின்றனவோ. பேசிக்கொண்டி ருக்கிறேன்; இங்குள்ள ஜனங்களாகிய நீங்கள், எனக்கு என்ன நேர்ந்தாலும் இதை நம்புங்கள். ருஷியா கம்யூனிஸம் - ஒன்றையும் ஜெயிக்கப்போவதில்லை. தேவனுடைய வார்த்தை ஒருபோதும் தவறாக முடியாது. ரோம மார்க்கமே உலகத்தை ஜெயிக்கப்போகின்றது. 181 நாம் தானியேலின் தரிசனத்தை எடுத்துக்கொள்வோம். அது தேவனுடைய வார்த்தை. தானியேலாகிய நீ - ராஜாவாகிய நேபுகாத்நேச்சாராகிய நீர் இந்த பொன் தலை - பாபிலோன். உமக்கு பின்பு வேறொரு ராஜ்யம் எழும்பும். அது வெள்ளி (பாருங்கள்?) அது தான் மேதிய - பெர்சிய ராஜ்யம். வேறொன்று கிரேக்க சாம்ராஜ்யம் மகா அலெக்சாண்டர். அடுத்து வருவது ரோமாபுரி'' கம்யூனிஸத்தைக் குறித்து அங்கு ஒன்றுமே சொல்லப்படவில்லை. ரோமாபுரி உலகத்தை வென்றது. இயேசு கிறிஸ்து ரோம சாம்ராஜ்யத்தின் ஆளுகையின்போது பிறந்து, துன்புறுத்தப் பட்டார். அவர் முதலாவதாக ரோம சாம்ராஜ்யத்தின் ஆளுகையின்போது தோன்றினார். அவர் வரப்போகும் அவருடைய இரண்டாம் வருகையின் இந்நேரத்தில், அவருடைய செய்தியானது எல்லாவற்றிற்கும் தாயான ரோம ஸ்தாபனத்தால் துன்புறுத்தப்படுகிறது. அவர் திரும்பிவரும் போது, ரோம சாம்ராஜ்யத்தை அடியோடு ஒழிப்பார். அவர் வந்து ரோம சாம்ராஜ்யத்தை ஒழிப்பார் என்று யூதர்கள் எப்பொழுதுமே எதிர் நோக்கியிருந்தனர் கத்தோலிக்க குருக்களாட்சி (heirarchy) உலகத்திலுள்ள எல்லா ஸ்தாபனங்களோ டும் இப்பொழுது ஒன்றாக இணைந்து, சபைகளின் சங்கமாக (confederation of churches) தங்களை ஸ்தாபித்துக் கொண்டுள் ளன எனவே கர்த்தர் உரைக்கிறதாவது, அது ருஷியாவல்ல, அது ரோமாபுரி. 182 ரோமாபுரியைத் தவிர கம்யூனிஸமோ அல்லது வேறெதாவது ஒன்று ஆளுகைசெய்யும் என்பதற்கு ஒரு வேத வாக்கியத்தையாவது ஆதாரமாகக் காட்டுங்கள் பார்க்கலாம்! நேபுகாத்நேச்சாருக்குப் பின்பு மேதிய - பெர்சியர் எழும்பினார்களா? நிச்சயமாக. கிரேக்க சாம்ராஜ்யம் அதற்கு பின்பு தோன்றினதா? நிச்சயமாக. ஆம்! அங்கிருந்து ரோமாபுரி ஆட்சிக்கு வந்ததா? இன்று நம்மிடையே காணப்படுவது போன்று, அது பத்து ஆட்டோமோன் (ottomon) அரசுகளாக உடைந்ததா? இரும்பு என்று அர்த்தம் கொள்ளும் பெயருடைய ஐசன்ஹவரும், களிமண் என்று அர்த்தம் கொள்ளும் பெயருடைய க்ரூஷேவும் இங்கு சந்தித்தனரா? க்ரூ ஷேவ் தன் காலணியைக் கழற்றி, (சகோ. பிரன்ஹாம் பிரசங்க பீடத்தை மூன்று முறை தட்டுகிறார் - ஆசி) அதை வெளிப்படையான செயலாக்கி, ஜனங்களுக்குக் காண்பிக்க மேசையின் மேல் இப்படி அதை அடித்தாரா? (சகோ. பிரன்ஹாம் பிரசங்க பீடத்தின் மேல் அடித்துக் காண்பிக்கிறார் - ஆசி). சரி, ஜனங்களுக்கு இன்று என்ன நேர்ந்துள்ளது? 183 விசுவாசம் இன்று எங்கு சென்றுள்ளது? நீங்கள் ஏன் தேவனுடைய வார்த்தை சத்தியமென்று விசுவாசிக்கக் கூடாது? இன்றைய போதகர்களுக்கு என்ன நேர்ந்தது? ஒவ்வொரு போதகரும் கம்யூனிஸத்தை எதிர்த்து போராடுகின்றார். கம்யூனிஸம் ஒன்றுமில்லை! பிசாசு உங்கள் முன்னிலையில் ஒன்றை கட்டிக்கொண்டு வருகிறான். அதை நீங்கள் அறியாதிருக்கிறீர்கள். அது ரோம மார்க்கம், ஸ்தாபன மார்க்கம். ரோம் மார்க்கமே எல்லா ஸ்தாபனங்களுக்கும் தாய். வேதம் அவளை வேசியென்றும், ஸ்தாபனங்களை தேவனுடைய வார்த்தைக்கு விரோதமாயுள்ள வேசியின் குமாரத்திகள் என்றும் அழைக்கிறது. வீரர்களே, வார்த்தையை கையிலெடுத்துக்கொள்ளுங் கள் .... வார்த்தையில் நிலைத்திருங்கள். ஒரு நாள் நான் அழிந்து போவேன், ஆனால் இந்த வார்த்தையோ ஒருக்காலும் அழிந்துபோகாது. வாலிபப் பிள்ளைகளே, என் சந்ததியில் இது நடக்காவிட்டால், நீங்கள் அதைக் காண்பீர்கள். 184 இன்று காலை வானொலி செய்தியைக் கேட்டீர்களா? திருமதி கென்னடி போப் பாண்டவரைக் காணச் சென்றதும், போப் பாண்டவர் என்ன சொன்னார் என்றும் கேட்டீர்களா? பாருங்கள்? உலகிலுள்ள எல்லா மதங்களுமே? ஞாயிறன்று இதைக் குறித்து சற்று அதிகம் பேசலாம். 185 பாருங்கள்? ருஷியாவைக் குறித்து கவலை கொள்ளாதீர்கள். ருஷியா கடற்கரையிலுள்ள ஒரு சிறு கூழாங்கல். கம்யூனிஸத்தைக் குறித்து கவலை கொள்ளாதீர்கள். ரோம் மார்க்கம் மற்ற சபை களுடன் ஒன்றாக இணையும்போது, அதை கவனித்து வாருங்கள். கம்யூனிஸம் உலகத்தை ஆளும் என்று வேதத்தில் எங்கும் சொல்லப்படவில்லை. மற்றவை எந்த வழியாக சென்றாலும், நான் வார்த்தையின் வழியே செல்கிறேன். நான் வார்த்தையை விசுவாசிக்கிறேன். ரோம்மார்க்கம் தான் உலகத்தை கைப்பற்றும், ரோம்மார்க்கம் எல்லா ஸ்தாபனங்களுக்கும் தாய். ரோம மார்க்கம் தோன்றுவதற்கு முன்பு ஒரு ஸ்தாபனமும் இருந்ததில்லை. நீங்கள் ஒவ்வொருவரும் அவளை விட்டு வெளியே வரவேண்டு மென்று வேதம் கூறுகின்றது. அவள் வேசிகளுக்குத் தாய்! (இதில் இன்னும் அரைநாள் நிலைத்திருக்க முடியும். ஆனால் நான் நகர்ந்து செல்வது நல்லது). 186 சத்துரு நம்மை தாக்கும்போது, அப்பொழுது...“ஓ, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். நீங்கள் எங்கள் சபையை சேர்ந்து கொள்ளவேண்டும். அப்பொழுது நீங்கள் என்ன செய்யப்போகின்றீர்கள்? பின்வாங்கப் போகின்றீர்களா? ஒப்புரவாகப் போகின்றீர்களா? உண்மையான வீரன் அப்படி செய்யமாட்டான். இல்லை, ஐயா! அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்? சிந்தை கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே... வேதம் அப்படித்தான் கூறுகிறதல்லவா?'' கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது. அவருக்கு எப்படிப்பட்ட சிந்தை இருந்தது? வார்த்தையில் நிலைத்திருக்கும் சிந்தை. அது உண்மை ! வார்த்தையில் - பிதாவின் வார்த்தையில் - அவர் நிலைத்திருந்து, ஒவ்வொரு முறையும் அவர் சத்துருவைத் தோற்கடித்தார். 187 சத்துரு நம்மை எதிர்த்து, நீங்கள் இதை செய்ய வேண்டும், அதை செய்யவேண்டும் என்று கூறும்போது, நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? வார்த்தையில் நிலைத்திருங்கள். அது உண்மை !அப்பொழுது நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? வார்த்தையை எடுத்துக் கொள்ளுங்கள். வார்த்தை என்பது என்ன ? வேதம் இங்கு சொல்லுகிறது, அதை இப்பொழுது தான் படித்தோம். வார்த்தை என்பது தேவனுடைய ஆவி. பாருங்கள்? இங்கு கவனியுங்கள். ''இரட்சணியம் என்னும் தலைச்சீராவையும், தேவ வசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். ''ஆவியின் பட்டயம். அந்த ஆவி உங்கள் சிந்தையின் வழியாக உங்களுக்குள் பிரவேசிக்கிறது. ஆவியின் பட்டயம் என்பது தேவனுடைய வார்த்தை. ஆவி எதைக்கொண்டு போரிடுகின்றது? பரிசுத்த ஆவி எதைக்கொண்டு போரிடுகின்றது. உணர்ச்சி கொண்டா? (சபையார் ''வார்த்தை'' என்கின்றனர் - ஆசி) வார்த்தையைக் கொண்டு! மகிமை! மகிமை! அவர் இங்கு என்ன சொல்லுகிறார்? சுகமாக்குதல், வார்த்தை! வார்த்தை! அதை நாம் கூறுவோம்:வார்த்தை! வார்த்தை! (சபையோர் 'வார்த்தை' என்று திரும்பச் சொல்லுகின்றனர் - ஆசி). ஆவி தேவனுடைய வார்த்தையைக் கொண்டே போரிடுகின்றது. தேவனுடைய ஆவி நேரடியாக பிசாசினிடம் நடந்து சென்று 'எழுதியிருக்கிறதே' என்றார். ஆமென்! 'எழுதியிருக்கிறதே! இப்பொழுது பிசாசு தோற்றுப்போகிறான். 188 நாம் என்ன செய்ய வேண்டும்? தேவனுடைய வார்த்தை என்னும் பட்டயத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். அதை எதை கொண்டு உறையிலிருந்து வெளியே எடுக்கவேண்டும்? விசுவாசம் என்னும் கையினால். விசுவாசம் என்னும் பலத்த கையினால் இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை உறையிலிருந்து இழுக்க வேண்டும். வேதம் எபிரெயர் 4ல், அது இருபுறமும் கருக்குள்ள பட்டயம் என்று கூறுகிறது. அது வருவதையும் போவதையும் வெட்டுகிறது. சகோதரனே, அவன் என்ன செய்கிறான்? வார்த்தையை எடுத்துக் கொள்ளுங்கள் ... ஆவியை எடுத்துக்கொள்ளுங்கள். ஆவி உங்கள் இருதயத்திற்குள் வர அனுமதியுங்கள். உங்கள் சிந்தையை திறந்து,''உமது வசனமே சத்தியம்'' என்று கூறுங்கள். (சகோதரியே, அதை செய்). (சகோ. பிரன்ஹாம் வியாதிபட்டிருக்கின்ற சகோதரியிடம் மறுபடியும் பேசுகிறார் - ஆசி) ''உமது வசனமே சத்தியம்.'' ஆண்டவரே, என் உணர்ச்சிக்கும், மற்றவர்கள் என்ன கூறுகின்றனர் என்பதற்கும் நான் கவனம் செலுத்தப் போவதில்லை. நான் கொண்டிருந்த என் ஏமாற்றங்கள், சந்தேகங்கள், அவிசுவாசம் போன்ற வாய்க்கால்கள் அனைத்தும் நான் உடைத்து தள்ளுகிறேன். எனக்குள்ள உணர்ச்சிகள், எனக்குள்ள வியாதிகள் அனைத்தையும் உடைத்து, அவைகளைக் கடந்து, என் ஆவியினிடம் வருகிறேன். 189 ஓ, கர்த்தாவே, இறங்கி வாரும். நீர் என்னை சுயாதீனமுள்ளவனாக சிருஷ்டித்திருப்பதாக உரைத்திருக்கிறீர். ''நீ என் மகன்.'' ''சரி, என் இருதயத்தையும் சிந்தையையும் திறந்து கொடுக்கிறேன். கர்த்தராகிய இயேசுவே, உள்ளே வாரும்'' என்று கூறி, விசுவாசத்தினால் கர்த்தர் உரைக்கிறதாவது! என்னும் ஆவியின் பட்டயத்தை இறுகப்பிடித்துக் கொண்டு, அல்லேலூயா! என்று சத்தமிடுங்கள். ஆமென்! உங்கள் முன்னாலுள்ள ஒவ்வொரு எதிரியையும் வெட்டி வீழ்த்துங்கள். அவ்வளவு தான். ஒவ்வொரு எதிரியையும் வெட்டி வீழ்த்துங்கள். பழைய பிசாசின் ஆவி உனக்கு சோர்வை அளித்தால், அதை தேவனுடைய வார்த்தையால் வெட்டி வீழ்த்து . கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே என்னுடைய பெலன். (நெகே. 8:10). ''என்னை விட்டு அப்பாலே போ “ என்று சொல்லி, அவனை அடித்து, வார்த்தையி னால் அவனை வெட்டுங்கள். 190 அது பிசாசு , அல்லது எதிரி , அல்லது வியாதி எதுவாயிருந்தாலும், வார்த்தை யாகிய பட்டயத்தை உபயோகியுங்கள், முதலில் அதை அடித்து அது நகரவில்லை யென்றால், அதை மறுபடியும் பலமாக அடியுங்கள், மறுபடியும் பலமாக அடியுங்கள் நீங்கள் ஒரு துளையை உண்டாக்கும் வரை பலமாக அடித்துக் கொண்டேயிருங்கள் - கோழிக் குஞ்சு எட்டிப்பார்ப்பது போல்; அல்லது ஒரு கழுகு. அந்த வியாதி என்னும் முட்டை ஓட்டின் வழியாக எட்டிப் பார்த்து, உடைத்து வெளியே வந்து,''அல்லேலூயா!அடுத்த்து எங்கே?''என்று கேளுங்கள், அல்லேலூயா! அதுதான் யுத்தம். அதுதான் வீரர். அதுதான் சிலுவையின் வீரர். ஆம், ஐயா! 191 ஒவ்வொரு எதிரியையும் வீழ்த்துங்கள். ஏன்? ஏன்? நாம் முன் குறிக்கப்பட்ட ஆபிரகாமின் ராஜரீக சந்ததி. (சகோ. பிரன்ஹாம் தன்னுடைய கரத்தை ஒரு முறை தட்டுகிறார் - ஆசி) தேவனுடைய வார்த்தைக்கு விரோதமாயுள்ள எதையும் ஆபிரகாம் ஏற்க மறுத்த போது, அவனுக்கு முன்னால் வந்த இடையூறுகளை அவன் ஒவ்வொன்றாக வெட்டி வீழ்த்தி வழியுண்டாக்கி முன்னேறினான். அவர்கள், ''உன் மனைவி மிகவும் , வயது சென்றவளாயிருக்கிறாளே'' என்றனர். அவன் வழியிலிருந்த அந்த காரியத்தை வெட்டி விலக்கினான். பிசாசு, ''உன்னால் இதை செய்ய முடியாது. அதை செய்ய முடியாது'' என்றான். ஆபிரகாம் வழியிலிருந்த இவ்வனைத்தையும் வெட்டி வீழ்த்தினான். அவன் அதை பலமாக அடித்து, அடித்து, அதற்குள் சென்று, “ஆண்டவரே, அடுத்தது எங்கே?''என்று கேட்டான். ''உன் கூடாரத்தை அங்கு நகர்த்து.'' அவன் சென்று அங்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான். சாத்தான் அங்கு வந்து,''இது சரியான இடமல்ல என்று உனக்குச் சொல்லுகிறேன்'' என்றான். ''நான் இங்கு தான் தங்குவேன். என்னை விட்டுஅப்புறம் போ.''அல்லேலூயா! லோத்து, இங்கு வந்து விடு. இங்கு எங்களுக்கு நன்றாயுள்ளது. எங்களுக்கு ஒரு ஸ்தாபனம் உள்ளது. என் மனைவி இலக்கிய சங்கத்தின் செயலாளர். பட்டினத்திலுள்ள எல்லாவற்றிற்குமே அவள் தலைமை தாங்குகிறாள். நீ இங்கு வர வேண்டும். 192 '' சாராள், ''ஆபிரகாமே...'' என்றாள். ''சாராளே, வாயை மூடு! (அல்லேலூயா!) இங்கேயே இரு, இங்கு தான் தேவன் என்னை வைத்திருக்கிறார், நான் நிற்கும் இந்த இடத்தில் தான்'' இங்கே தான் தேவன் என்னை வைத்திருக்கிறார். ''எல்லோருமே இயேசுவின் நாமத்தைப் போற்றுங்கள் (சகோதரன் பிரன்ஹாம் பிரசங்க பீடத்தை ஒரு முறைதட்டுகிறார் - ஆசி) தேவதூதர்கள் சாஷ்டாங்கமாய் விழுந்து வணங்கட்டும் ராஜாவின் கிரீடத்தைக் கொண்டு வாருங்கள். நான் கிறிஸ்து என்னும் உறுதியான பாறையின் மேல் நிற்கிறேன். மற்றெல்லா நிலமும் அமிழ்ந்து போகும் மணலே மற்றெல்லா நிலமும் அமிழ்ந்து போகும்மணலே மரணமும் கூட, மற்றெல்லாமுமே அமிழ்ந்து போகும் மணலே. ''நான் கிறிஸ்து என்னும் உறதியான பாறையின் மேல்நிற்கிறேன் ..... ''ஆபிரகாமின் ராஜரீக சந்ததி, ராஜரீக சந்த்தி. 193 இங்கிலாந்திலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட படை அரச குடும்பத்தினரைக் கொண்டது. அரச இரத்தம், எல்லாமே. கிறிஸ்துவின் ராஜரீக சந்ததியும் பரிசுத்த ஆவியினால் நிறையப்பட்ட சபையாகும். என்ன? வாக்குத்தத்தத்தின்படி ராஜரீக சந்ததி. உணர்ச்சியினால் அல்ல, தேவனுடைய வாக்குத்தத்தத்தின்படி. அவர்கள் தேவனுடைய வார்த்தையில் நின்று, வழியில் வெட்டி வீழ்த்திக் கொண்டே, அல்லேலூயா'' என்று சத்தமிட்டுக் கொண்டு முன்னேறுவார்கள். மரணம் வந்து, 'உன்னை நெருங்குகிறது'' என்று சொன்னாலும். ''யோர்தானே, வழிவிடு. நான் கடந்து செல்கிறேன்“ என்று சொல்லுங்கள். இவ்வாறு வெட்டிக் கொண்டே வழியுண்டாக்கி, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை அடையுங்கள். ஆமென்! 194 என்ன நிகழ்கிறது? யுத்தம் முடிந்தவுடனே (இப்பொழுது நிச்சயமாக முடிக்கப் போகின்றேன்), யுத்தம் முடிந்து பரிசுத்த வான்கள் அணிவகுத்து வீட்டிற்கு வரும்போது ... உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். ஹிட்லர் பிரான்சுக்குள் சென்ற போது என்ன நடந்தது? அப்பொழுது திரளான விமானங்கள் பறந்த காரணத்தால், ஆகாயத்தைக் காணவே முடியவில்லை என்று கூறப்படுகின்றது. ஜெர்மானியர் விறைப்பான முழங்கால்களுடன் அணிவகுத்து (goose stepped) (சகோ. பிரன்ஹாம் பிரசங்க மேடையின் மீது அந்தவிதமாக இரண்டு தடவை காலை தட்டி நடக்கின்றார் - ஆசி ) அப்படியே நின்று கொண்டு, அவனைக் கடந்து வெற்றியைக் கொண்டாடினார்கள். ஸ்டாலின் ருஷியாவுக்கு வந்தபோது, அநேக மைல்கள் தூரத்துக்கு ஒன்றன் பின் ஒன்றாக இருந்த பீரங்கிகள் பெர்லினை குண்டுகளால் தாக்கியதன் விளைவாக, அங்கு ஒன்றுமே விடப்படவில்லை. அவ்வளவுதான். இந்த ருஷிய இராணுவ வீரர்கள் உள்ளே நுழைந்து, வெற்றி கொண்டாடினார்கள். அவர்கள் அப்பொழுது ஒரு சிறு கோமாளித்தனமான செயலைப் புரிகின்றனர். அதை ஒரு முறை லண்டனில் படக் காட்சியில் கண்டேன் (அவர்கள் உள்ளே நுழைந்து வெற்றி கொண்டாடின் போது எடுக்கப்பட்ட படம்) ஓ, என்னே யுத்தம் முடிந்துவிட்டது என்று கேள்விப்பட்டவுடனே நாங்கள் கூச்சலிட்டோம், ஊதல்களை ஊதினோம். யுத்தத்தில் பங்கு கொண்டுதீரச் செயலை புரிந்தவர்கள் திரும்பி வந்தபோது, அவர்களை நாங்கள் சந்தித்தோம்; அவர்கள் ஆர்ப்பரித்தனர். 195 என் உறவினன் ஒருவன் இராணுவத்தில் இருந்தான். அவனும் மற்ற போர் வீரர்களும் திரும்பி வந்தபோது, அவர்கள் படுகாயமுற்றிருந்ததால், அவர்களால் படுக்கையை விட்டு எழுந்திருக்க முடியவில்லை. எனவே அவர்கள் திரும்பிவந்த போது, சுதந்திரச் சிலையை (Statue of Liberty) காண்பதற்காக, அவர்கள் கப்பலின் மேல்தளத்தில் உருட்டிபொக்கம் விடப்பட்டனர். அவன் சொன்னான். அந்த போர் வீரர்கள் சுதந்திர சிலையைக் கண்டமாத்திரத்தில் அழுது புரண்டனர்'' என்று. அவர்கள் நான்கு ஆண்டுகளாக நாட்டை விட்டு வெளியேறி போர் செய்து கொண்டிருந்தனர், போரில் அதிர்ச்சியடைந்தனர். ஆயினும் அந்தசுதந்திர சிலைக்குப் பின்னால் அவர்களுடைய மனைவி, காதலி, தாய், தகப்பன், பிள்ளைகள், தாங்கள் நேசிக்கும் அனைவரும் உள்ளனர் என்பதை அறிந்திருந்தனர். அவர்கள் எதற்காக போரிட்டனரோ, அதன் அறிகுறியாக அந்த சிலை இருந்தது. ஓ, ஊதல்கள் ஊதப்பட்டன, நியூயார்க் பட்டினமே மகிழ்ச்சி பொங்கிசத்தமிட்டது. அவ்வளவுதான். அவர்களுடைய போர் வீரர்கள் அணிவகுத்து உள்ளே வரும்போது, அது ஒரு சிறிய காரிய மாயிருக்கும்! 196 ஒருமுறை ரோம அரசனாகிய சீசர், ஒரு பெரிய போரில் வெற்றி கண்ட பிறகு, மிகவும் பிரபலம் வாய்ந்த என் போர் வீரர்கள் எதிரியைத் தோற்கடித்து வெற்றி கொண்டாடும் இந்நேரத்தில், அவர்கள் என்னுடன் சவாரி செய்ய வேண்டுமென்று விரும்புகிறேன்'' என்றான். எனவே எல்லா இராணுவ அதிகாரிகளும், தாங்கள் பெற்ற கெளரவ சின்னங்களுக்கும் கேட்கங்க ளுக்கும் மெருகேற்றி, உண்மையான இராணுவ வீரர்களைப் போல் அணிவகுத்து சென்றனர். சிறிது கழித்து ஒரு வயோதிபன் அங்கு அடைந்து சீசரை உற்று நோக்கினான். சீசர்,''சற்று பொறு! சற்றுபொறு! நீ இராணுவ அதிகாரியைப் போல் உடை உடுத்தியிருக்க வில்லையே. அருகில் வா. இந்த வடுக்கள் உனக்கு எங்கு கிடைத்தன?'' என்று கேட்டான். அவன், “போர்க்களத்தில் '' என்று பதிலளித்தான். சீசர்,''அப்படியானால் ஏறிவா . நீதான் என் பக்கத்தில் அமர வேண்டியவன்'' என்றான். ஏன்? அவன் போர் புரிந்ததற்கு சான்று காண்பித்தான். ஓ, மீன் அடைத்துள்ள டப்பாவில் கையை அறுத்துக்கொண்டு, அதன் விளைவாக புகழ்மாலை பெறும் மனிதன் மேல் தேவன் இரக்கமாயிருப்பாராக நான் போரில் வடுக்களைப் பெற விரும்புகிறேன். பவுல், ''இயேசுவினுடைய அச்சடையாளங் களை (marks) என் சரீரத்தில் தரித்துக்கொண்டிரு க்கிறேன்'' என்றான். அதனால் தான் நான் போர்க்களத்தில் போர் புரிய விரும்புகிறேன். 197 ஒரு நாள் நமது தலைமை அதிபதி வருவார். அவர் தான் நமக்கு ஆயுதம் தரிப்பித்தார். அவர் தேவனுடைய ஆயுதமாகிய பரிசுத்த ஆவியை நமக்களித்து, போரிடுவதற்கென்று தமது வார்த்தையை நமக்களித்து, அங்கு நிற்கும்படி செய்தார். நமது மகத்தான தலைமை அதிபதி சவாரி செய்து வரும் போது, நான் இரதத்தில் ஏறி அவருடன் வீடு செல்ல விரும்புகிறேன். நீங்களும் விரும்புகின்றீர்கள் அல்லவா? (சபையார் 'ஆமேன்' என்று கூறிகின்றனர் - ஆசி) என் மனைவியுடன் கைகோர்த்து, சுற்றும் முற்றும் பார்த்து, என் சகோதரர்களையும் அவர்களுடைய மனைவிகளையும் பிள்ளைகளையும் கண்டு, நாமெல்லாரும் தேவனுடைய பரதீசியில் ஒய்யாரமாய் நடந்து சென்று, தேவதூதர்கள் தங்கள் இனிய பாடல்களினால் அந்த இடத்தை நிரப்பும் போது, அதுவே கொண்டாட்டம்! யுத்தம் முடிந்த பின்பு, நாம் கிரீடம் தரித்துக்கொள்வோம். ஓ, என்னே ! ஓ, சிலுவையின் வீரர்களே , விசுவாசம் என்னும் கரங்களை இன்று காலை இங்குநீட்டி, ஆயுதத்தை கையிலெடுத்துக் கொள்ளுங்கள். சகோதரியே, அதைக் குறித்து என்ன? நீ ஆயத்தமாயிருக்கிறாயா? (சகோ.பிரன்ஹாம் வியாதிபட்டிருக்கின்ற சகோதரியிடம் மறுபடியும் பேசுகின்றார் - ஆசி) உன் ஆயுதத்தை உறையிலிருந்து வெளியே இழுத்து,''தேவனே , பிசாசு என்னிடம் என்ன கூறியிருந்தாலும் எனக்குக் கவலையில்லை மற்றவர்களும் எவ்வளவாக என்ன கூறியிருந்தாலும். இன்று காலை நான் விசுவாசிக்கிறேன், நான் விசுவாசிக்கிறேன்'' என்று சொல். (சகோதரி நானும் விசுவாசிக் கிறேன் என்று கூறுகிறார்கள் - ஆசி) 198 அன்றொரு நாள் நான் கூறினவிதமாக - சில வாரங்களுக்கு முன்பு என்று நினைக்கிறேன்- ஒரு மனிதன் ஒரு சொப்பனம் கண்டான். அதில் பிசாசு அவனிடம் ஓடி வந்து, 'பூ'' (Boo) என்றதாம். அப்பொழுது பிசாசு பெரிதாகி “பூ” என்றதாம். அவன் மறுபடியும் பாய்ந்தபோது, அது இன்னும் பெரிதாகி அவனைப் பார்த்து, 'பூ' என்றதாம். முடிவில் பிசாசு மிகவும் பெரிதாகி அவனைத் தோற்கடிக்கும் நிலையையடைந்ததாம். அவன் எதைக் கொண்டாவது அவனுடன் சண்டையிட வேண்டும். அவன் சுற்றிலும் பார்த்தபோது, அவனுக்கு ஒன்றுமே கிடைக்கவில்லை. கடைசியில் அவன் வேதாகமத்தைக் கையிலெடுத்தபோது, பிசாசு ''பூ'' என்றதாம். அவனும்“பூ'' என்று பிசாசை நோக்கி கூறினானாம். பிசாசுசிறிதாகிக் கொண்டே வந்து, முடிவில் அவன் பிசாசை வார்த்தையினால் அடித்துக்கொன்றானாம். 199 சகோதரியே, நீ ஒரு இராணுவ வீராங்கனை அல்லவா? (சகோ. பிரன்ஹாம் வியாதி பட்டிருக்கின்ற சகோதரியிடம் மறுபடியும் . பேசுகின்றார் - ஆசி) வார்த்தையை எடுத்துக்கொண்டு, ''எழுதியிருக்கிறதே (ஆமென்!) நான் மரிக்கமாட்டேன். நான் உயிரோடிருப்பேன். இந்த கூடாரத்துக்குள் நான் வந்து மற்றவர்களுடன் அவர் செய்த நன்மைகளுக்காக தேவனைத் துதிப்பேன்“ என்று சொல். பரிசுத்தவான்களே, அதை விசுவாசிக்கிறீர்களா? (சபையோர், 'ஆம்'' என்கின்றனர் - ஆசி). ஆமென்! இப்பொழுது நாம் தலை வணங்குவோம். 200 ஓ, தேவனாகிய கர்த்தாவே, வானத்தையும் பூமியையும் படைத்தவரே, நீர் இப்பொழுதும் தேவனாயிருக்கிறீர் என்று இன்று அறிந்து கொள்ளப்படட்டும். நான் எவ்வளவு தான் பிரசங்கித்தாலும், எவ்வளவு தான் கூறினாலும், ஆண்டவரே, உம்மிடமிருந்து வரும் ஒரு வார்த்தை அதை உறுதிபடுத்திவிடும். இந்த உறுமால்கள் இங்கு வியாதியஸ்தர்களின் பிரதிநிதிகளாக இருக்கின்றன. பரலோகப் பிதாவே, என் கைகளை அவைகளின் மேல் வைக்கும்போது, உமது ஆசீர்வாதங்களும் வல்லமையும் இவை ஒவ்வொன்றின் மேலும் தங்கவேண்டுமென்று வேண்டிக்கொள்கிறேன். தேவனே, உமது பரிசுத்த பிரசன்னத்தால் இந்த உறுமால்களை அபிஷேகிக்க வேண்டுமாய் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வேண்டிக் கொள்கிறேன். இது வேதத்தில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. இது வார்த்தைக்கு விரோதமான செயல் அல்ல. அவர்கள் பவுலின் சரீரத்திலிருந்து உறுமால்களையும் கச்சைகளையும் கொண்டு வந்து போட, பொல்லாத ஆவிகள் ஜனங்களை விட்டு புறப்பட்டுச்சென்று, அவர்கள் பல்வேறு வியாதிகளிலிருந்து சொஸ்தமானார்கள் என்று வேதத்தில் எழுதப்பட்டுள்ளது. நாங்கள் பரி. பவுல் அல்ல, ஆனால் நீர் இன்னமும் தேவனாயிருக்கிறீர். நீர் அதே பரிசுத்த ஆவியாயிருக்கிறீர். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இந்த உறுமால்களின் மேல் நான் கைகளை வைத்து, அவர்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்து சுகப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். 201 தேவனே, இங்கு படுக்கையில் படுத்திருப்பது ஒரு குழந்தை, ஒரு அழகான சிறு பெண். ஆண்டவரே, அவளால் உயிர் வாழ முடியாது. சாத்தான் அவளுக்கு தீங்கிழைத்திருக்கிறான். இவ்வுலகிலுள்ள அருமையான மருத்துவர்கள் அனைவரும் இக்குழந்தையைக் காப்பாற்ற தீவிரமாக முயன்றனர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவர்களால் முடியவில்லை. அவர்களுடைய அறிவின் எல்லையை அவர்கள் அடைந்துவிட்டனர். அவர்களுக்கு வேறொன்றும் செய்யத் தெரியவில்லை. ஆனால் ஆண்டவரே, வேறொரு அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது என்பதைக் குறித்து எனக்கு மிக்க மகிழ்ச்சி. நாங்கள் வேறொரு பக்கத்தை திருப்ப முடியும். இந்த பக்கத்தில் மகத்தான வைத்தியன் வருவதை நாங்கள் காண்கிறோம். இன்று காலையில் அவருடைய ஆலோசனைக்காக அவரை அழைக்கிறோம். 202 இப்பொழுது, ஆண்டவரே, விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் தொடரும் என்று எழுதப்பட்டுள்ளதல்லவா? ஆண்டவரே, நான் விசுவாசிக்காமல் இருந்தால், இப்பொழுதே என்னை விசுவாசிக்கிறவனாக செய்யும். 'விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங் கள் தொடரும். வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்'' மேலும், ''என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்' என்றும் எழுதியிருக்கிறதே. ஆண்டவரே, அவை உம்முடைய வார்த்தைகள். அது உம்முடையது அது உம்முடைய வார்த்தை. இப்பொழுது, உம்முடைய ஊழியக்காரன் என்னும் முறையில் ,நீர்,''எங்கே இரண்டு அல்லது மூன்று பேர் கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் மத்தியில் வாசமாயிருக்கி றேன். நீங்கள் எந்தக் காரியத்தைக் குறித்தாகிலும் ஒருமனப்பட்டு என்னிடம் வேண்டிக் கொண்டால், அதை பெற்றுக் கொள்வீர்கள்'' என்று கூறியிருக்கிறது. 203 தேவனே, இன்று காலையில் இக்கட்டிடத்திலுள்ள எல்லாரைப் பார்க்கிலும் மிகவும் வியாதிப்பட்டுள்ளது இக் குழந்தையே. உம்மையல்லாமல் அவளால் நீண்ட நாட்கள் வாழ முடியாது. அவளே மிக அதிகமாக வியாதிப்பட்டவள். எனவே நாங்கள் அனைவரும் இங்கு நின்று கொண்டுள்ள ஒவ்வொரு வீரரும்; இக்கூட்டத்தில் ஆபிரகாமின் ராஜரீக சந்ததியார் நின்று கொண்டிருக்கின்றனர். நாங்கள் அணிவகுத்து சாத்தானின் மேல் எழுகின்றோம். சாத்தானே, நீ புறப்பட்டு போக ஆயத்தப்படும். ஏனெனில் எங்கள் ஆயுதங்கள் பளபளக்கின்றன. எங்கள் சீருடைகளின் வண்ணங்கள் பிரகாசிக்கின்றன. ஆணும் பெண்ணும் பட்டயங்களைக் கையில்லேந்தி அணிவகுத்து, இச்சிறு பெண்ணுக்காக உன்மேல் எழுகின்றனர். சாத்தானே, அவளை விட்டு வெளியே வா. இந்த குழந்தையைவிட்டுப் போ. ஜீவனுள்ள தேவனின் சேனையாக நாங்கள் உன்னை எதிர்க்கிறோம். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவளை விட்டுப்போ! அவள் மேல் கைகளை வைக்க நான் புறப்பட்டுச் செல்கிறேன். 204 சாத்தானே , இக்குழந்தையை நீ கட்டிப்போட்டிருக்கிறாய். இப்பொல்லாப்பை நீ செய்திருக்கிறாய். மனிதன் உனக்கு நிகராக முடியாது. ஆனால் என் தேவனுக்கு நீ நிகரில்லை. எனவே அவருடைய நாமத்தில் நான் வருகிறேன் பிசாசின் ஆவியே, அவளை விட்டுப் புறப்பட்டுப்போ. வியாதி என்னும் பிசாசே, இக் குழந்தையை விட்டு வெளியே வா. இன்று முதல் அவள் விடுதலையாகட்டும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இதை கட்டளையிடுகிறேன். இப்பொழுது, தேவனாகிய கர்த்தாவே. மரித்தோரை உயிரோடெழுப்பி நீர் தேவனென்று நிரூபித்தவரே, இச்சிறு பெண்ணை ஆரோக்கியத்துடனும் பெலத்துடனும் எழும்பச் செய்து, இந்தக் குழந்தையை நிற்கச் செய்யும். பிசாசு அவளை விட்டுப் போய் விட்டது. நீர் ஒருவர் மாத்திரமே அவளை சுகமாக்க முடியும். அவள் தேவனுடைய மகிமைக்கும் கனத்திற்கும் உயிர் வாழ்வாளாக! அது உரைக்கப்பட்டுவிட்டது, அது நிறைவேறு வதாக! 205 இங்கு வேறு யாராகிலும் உங்கள் கரங்களையுயர்த்தி, ''எனக்காக ஜெபம் செய்யப்பட வேண்டுமென்று விரும்புகிறேன். நான் வியாதியாயி ருக்கிறேன். எனக்கு தேவன் தேவை'' என்று கூற விரும்புகிறீர்களா? நமக்கு எவ்வளவு நேரம் உள்ளது என்று எனக்குத் தெரியவில்லை. ஜனங்கள் கடந்து செல்ல நமக்கு போதிய நேரம் உண்டாயிருக்கும். இன்று காலை நான் அதிக திடநம்பிக்கை கொண்டவனா யிருக்கிறேன். பில்லி, இங்கு வந்து, இந்த பக்கத்திலுள்ள இந்த ஒரு பகுதியை மாத்திரம் தெரிந்துகொள். இந்த பகுதி முதலில் வரட்டும். பின்பு பின்பகுதியை தெரிந்துகொள் - அந்த உட்பாதை (aisle) வரைக்கும் அப்படி நாம் தெரிந்து கொண்டே செல்வோம். அப்பொழுது உனக்கு...... சகோ. நெவில்லும் மற்ற என் போதகர் சகோதரர்களும் என் அருகில் இங்கு நிற்க விரும்புகிறேன். இப்பொழுது நீங்கள் அவர்களை மறுபடியும் உட்பாதைக்கு கொண்டு செல்லமுடியும், சரி. 206 சரி. இப்பொழுது நான் .... எத்தனை பேர் உங்கள் ஆயுதங்களை கையில் பிடித்திருக்கிறீர்கள்? (சபையார் ஆமென்'' என்கின்றனர் ஆசி) (சகோ. பிரன்ஹாம் பிசங்க பீடத்திலிருந்து திரும்பி தான் ஜெபித்த சகோதரியிடம்பேசுகிறார் - ஆசி ) அவள் இப்பொழுது வித்தியாசமானவளாக காணப்படுகிறாள், வீடு சென்று சுகமடை வாயாக. ஆமென்! ஓ, என்னே ! ஓ, வீரர்களே, பட்டயத்தை உறையினின்று வெளியே இழுங்கள். பட்டயத்தை வெளியே இழுங்கள். சிலுவை வீரர்களே, அணிவகுத்து முன் செல்வீர்! அணிவகுத்து முன் செல்வீர்! நான் கிறிஸ்து என்னும்உறுதியான பாறையின் மேல் நிற்கிறேன். மற்றெல்லா நிலமும் அமிழ்ந்து போகும் மணலே 207 சரி, இங்கு வாருங்கள். மேடைக்குப் பக்கத்தில் அவர்கள் கடந்து செல்லும்போது, எல்லோரும் ஜெபத்தில் தரித்திருங்கள். இயேசுவின் நாமத்தில் , இந்த பெண்ணை சுகப்படுத்தும். ஆமென்.. இப்பொழுது உங்கள் பட்டயத்தை வெளியே இழுங்கள் (பாருங்கள்?) நடந்து கொண்டேயிருங்கள், சத்தமிட்டுக் கொண்டேயிருங்கள். யுத்தத்துக்கு அணிவகுத்து செல்லும் போல இயேசுவின் சிலுவை முன்சென்று கொண்டிருக்கிறது. சாத்தானே , வழியை விட்டு விலகு! வீரர்களே, என்ன நேர்ந்தது? நாம் ஜெயிக்க முடியும் என்று நீங்கள் எண்ணுகின்றீர்கள் அல்லவா? (சபையார் ஆர்ப்பித்து “ஆமென்' என்கின்றனர் - ஆசி). நாம் ஏற்கனவே ஜெயித்து விட்டோம். கிறிஸ்து இயேசுவுக்குள் நாம் முற்றிலும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோம். எல்லா பிசாசும் துரத்தப்பட்டுவிட்டது. மற்றெல்லாமே 208 (சகோ. பிரன்ஹாம் வியாதியஸ்தருக்கு தொடர்ந்து ஜெபிக்கிறார்) கர்த்தாவே, என் சகோதரனை சுகபடுத்தும்... நீர் அவரை சுகபடுத்தும்படி ஜெபிக்கிறேன். கர்த்தாவே, என் சகோதரனை சுகபடுத்துவீராக. இயேசுவின் நாமத்தினால்.. இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால். . . ஒ தேவனாகிய கர்த்தாவே, வானத்தையும் பூமியையும் படைத்தவரே, ஓ தேவனே, நீர் அவளுடைய இருதயத்தில் என்ன இருக்கிறது என்று நீர் அறிவீர். உமக்கு எல்லாம் தெரியும். . .? . . . நான் அவர்களுக்காக ஜெபிக்கிறேன். அதை இயேசு கிறிஸ்த்துவின் நாமத்தினால் . . . ?. . . உன்னை இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் அபிஷேகம் . . .?. . . தொடர்ந்தது. . . ? . . . இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் உன்னை. . .?. . . தேவனே, கர்த்தர் தாமே என் சகோதரியோடு இருப்பீராக. காலங்கள் தொய்ந்துபோக துவங்கினதை பார்கிறோம்...?... இதோ பரிசுத்த ஆவி இல்லாமல் . . .?. . . இப்பொழுது இதை இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் . . .?. . . இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் இதை ஆசீர்வதிக்கும்படி. . .?. . . இது மிகவும் கடினமான யுத்தமாய். . . ?. . . ஆனால் தேவனே நீர் என்ன செய்கிறீர் என்பதை அறிந்துகொள்ள. . .?. . . இந்த காலை வேளையிலே இதை அவள் மேல் ஊற்றும்படி. . . ?. . . இந்த சிறு பையனை ஆசீர்வதிக்குமபடி . . .? . . . அப்பாவும் மகனும் இங்கே இருக்கிறார்கள், நான் அவர்களுக்கு. . . ?. . . சகோதரனே கர்த்தர் உன்னை அசீர்வதிப்பாராக. அவருடைய. . . நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினால் . . .?. . . இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் எங்களுடைய சகோதரியை சுகபடுத்துவீராக இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் எங்களுடைய சகோதரியை சுகபடுத்துவீராக இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் எங்களுடைய சகோதரியை சுகபடுத்துவீராக இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் . . .?. . . இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் எங்களுடைய சகோதரியை சுகபடுத்துவீராக இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் எங்களுடைய சகோதரியை சுகபடுத்துவீராக இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் இவர்களை. . .?. . . இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் எங்களுடைய சகோதரனை சுகபடுத்துவீராக இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் எங்களுடைய சகோதரியை சுகபடுத்துவீராக இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் எங்களுடைய சகோதரியை சுகபடுத்துவீராக இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் . . .?. . . இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் நீ முழுவதும் குணமாவாயாக. 209 (ஜெபவரிசை தொடர்ந்து நடக்கிறது. பேசபடுகிற வார்த்தை தெளிவாக இல்லை) ஓ, எல்லா தொல்லைகளையும் அறிந்திருக்கிறவரே. . .?. . . தேவரீர் இதோ நான் ஜெபிக்கிறேன். . .?. . . நீர் அவர்கள் மேலாக. . ?. . . அந்த பட்டயத்தை உறையிலிருந்து வெளியே இழுத்து, . . ?. . . அப்படியே தொடர்ந்து முன்னோக்கி . . . ? . . . (வார்த்தைகள் தொளிவாக கேட்கபடவில்லை) ஓ பிதாவாகிய தேவனே, நீர் எங்களுடைய சகோதரனை சுகபடுத்தி அவரை இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் முற்றிலும் குனமாக்குவீராக. கர்த்தாவே, நீர் எங்களுடைய சகோதரியை சுகபடுத்துவீராக. இயேசுவின் நாமத்தினால். . .?. . . பிதாவாகிய தேவனே, இயேசுவின் நாமத்தினால் எங்களுடைய சகோதரனை சுகபடுத்தும்படி ஜெபிக்கிறேன். (எல்லா வார்த்தைகள் தெளிவாக இல்லை) ஓ தேவனே இவரை ஆசீர்வதியும், இயேசுவின். . . ? . . . கல்வாரியின். . .?. . . நீர் அதை அருளும்படி . . .?. . . இதை இயேசுவின் நாமத்தினால். . ?. . . எங்கள் பரலோக பிதாவே, என்னுடைய சகோதரனுக்காக ஜெபிக்கிறேன். ஓ கர்த்தாவே, நீர். . .? . . . செய்யும்படி ஜெபிக்கிறேன். கர்த்தாவே அவர் தாமே. . . ? . . . சிலுவையின் போர் வீரனாய் இந்த காலை வேளையிலே அவர் அந்த பட்டயத்தை எடுப்பாராக. இதை இயேசுவின் நாமத்தினால். . .?. . . கர்த்தாவே. . .?. . . நீர் அவர்களை சுகபடுத்தும்படி. . .?. . . இதை அருள்வீராக. சகோதரனே கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. கர்த்தாவே, இயேசுவின் நாமத்தினால் நீர் அவரை சுகபடுத்துவீராக. எங்கள் பரலோக பிதாவே, சரியாக. . .?... இவள். . .?. . . வேளை செய்து பேசிகொண்டும் . . .? . . . அப்படியே விசுவாசிக்கிறோம். கர்த்தாவே, நீர் அவளை இயேசுவின் . . .?. . . சுகபடுத்துவீராக. ஓ தேவனே, கர்த்தருடைய மகத்தான சேனை பட்டயத்தை தூக்கி உயர்த்தினவர்களாய் முன்னோக்கிப் போய் கொண்டிருக்கிறது. அவளுடைய இந்த சின்ன இருதயம் புற்று நோயினால் படுக்கையில் இருக்கிறதையே சிந்த்தித்து கொண்டிருக்கிறது. அங்கே. . .?. . . ஒருவேளை புற்றுநோயினால் மரித்துகொண்டிருக்கலாம். டாக்டர்களும் கைவிட்டிருக்கலாம். ஆனால் இங்கே இவர் ஒரு சின்ன போர்வீர்னாய் இந்த காலையிலே இருக்கிறார். கர்த்தாவே அவரை பலபடுத்துவீராக. இயேசுவின் நாமத்தினால். ஆமேன். 210 இந்த சிறு சீமாட்டி ... இங்குள்ள இந்த போதகருக்கு ஒன்று நேர்ந்துள்ளது. இங்கு வாருங்கள்! அண்மையில் தான் இவர் மரத்துவமனையிலிருந்து மரணத்தருவா யில் அனுப்பப்பட்டார். ஒரு ('ஒரு வருடத்திற்கு முன்பு '' என்று சகோதரி கிட் கூறுகிறார்கள் - ஆசி) ஆண்டுக்கு இரண்டு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் அவர் புற்று நோயால் தின்னப்பட்டார். அவர் சில நாட்கள் மாத்திரமே உயிர் வாழ்வார் என்று மருத்துவர்கள் கூறியிருந்தனர். ஒரு நாள் அதிகாலை நாங்கள் அங்கு சென்று, இங்கு உங்களுடன் ஜெபித்தது போல், அவருக்காக ஜெபத்தை ஏறெடுத்தோம். அதன் பின்பு அவர்கள் புற்று நோயின் அறிகுறி ஒன்றையுமே காண முடியவில்லை. (சபையார் ஆர்பரிக்கின்றனர். இதற்கு முன்பு அவர் செய்த பணியை விட இப்பொழுது அதிகம் செய்துவருகிறார். அவரும் அவருடைய மனைவியும் வெளிநாடுகளில், ஒருக்கால் நான் பிறப்பதற்கு முன்பே, சுவிசேஷ ஊழியம் செய்து வந்தனர். (சகோ. கிட் (Bro. Kidd) ''ஐம்பத்தைந்து ஆண்டுகளாக'' என்கிறார் - ஆசி). கேட்டீர்களா? ஐம்பத்தைந்து ஆண்டுகளாக நான் இவ்வுலகில் பிறப்பதற்கு முன்பே அவர்கள் சுவிசேஷத்தை பிசங்கித்தனர். அவர் தமது எழுபத்தைந்தாம் வயதில் - அல்ல, எண்பத்தொன்றாம் வயதில் - சுகமடைந்தார். இரண்டுவார எழுப்புதல் கூட்டங்கள். அவர் இரண்டு வாரங்களாக எழுப்புதல் கூட்டங்களை நடத்தி, ஒவ்வொரு இரவும் பிரசங்கம் செய்தார். எண்பது வயதானவர், புற்று நோயிலிருந்து சுகம் பெற்றார். 211 சரி, சகோதரியே, இது உன்னுடைய தருணம் . நீ விசுவாசிக்கிறாயா? (சபையார் ஆர்பரித்து 'ஆமென்'' என்கின்றனர் - ஆசி) (''சிலுவையின் வீரர்களே, முன் செல்வீர்). சரி, சகோதரியே, உனக்கும், இங்குள்ள ஒவ்வொருவராகிய உங்களுக்கும் நாம் என்ன செய்யப்போகிறோம்? கர்த்தர் உரைக்கிறதாவது, சாத்தானே, இன்னும் ஏன் இங்கிருக்கிறாய்? நீ தோற்றுப்போனாய். நாங்கள் வந்து கொண்டிருக்கிறோம். வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்துக்குள் நாங்கள் அணிவகுத்து சென்று கொண்டிருக்கிறோம். அது என்ன? செருபாபேலுக்கு முன்னால் அவர்கள் கட்டிக்கொண்டிருக்கும் இந்த பர்வதம் என்ன? நமக்கு முன்னால் நிற்பது யார்? நீ சமபூமியாவாய். ஏன்? இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தால் நாங்கள் அதை வெட்டி தரைமட்டமாக்குவோம். அது உண்மை . சரி! கிறிஸ்தவ வீரர்களே முன் செல்வீர் யுத்தத்துக்கு அணிவகுத்து செல்லும் போல் இயேசுவின் சிலுவை முன்சென்று கொண்டிருக்கிறது. ராஜரீக எஜமானாகிய கிறிஸ்துஎதிரிக்கு விரோதமாய் நடத்தி செல்கிறார். (அவருடைய வார்த்தையினால்) யுத்தத்தில் முன்னே சென்று அவருடைய கொடி பறப்பதை பாருங்கள்! கிறிஸ்தவ வீரர்களே முன் செல்வீர்யுத்தத்துக்கு அணிவகுத்து செல்லும் போல் இயேசுவின் சிலுவை முன்சென்று கொண்டிருக்கிறது. 212 அல்லேலூயா! அவர்கள் என்ன செய்தனர்? இஸ்ரவேலர் போர் புரிந்த போது, முதலில் சென்றது எது? பாடகர்கள் முதலில் சென்றனர். அதை பின்தொடர்ந்தது எது? உடன்படிக்கை பெட்டி, பின்பு சேனை . சரி! இப்பொழுது விசுவாசிக்கிறீர்களா? (சபையார் ''ஆமென்'' என்கின்றனர் - ஆசி) நாம் 'கிறிஸ்தவ வீரர்களே முன் செல்வீர்'' என்ற பாடலைப் பாடுகின்றோம். எல்லா சந்தேகங்களையும் அறவே அகற்றுகின்றோம். இப்பொழுது எழுந்து நின்று, போர் செய்ய அணிவகுத்து செல்வோம். நாம் எழுந்து நிற்போம் ஒவ்வொருவரும். கிறிஸ்தவ வீரர்களே முன் செல்வீர் யுத்தத்துக்கு அணிவகுத்து செல்லும் போல் இயேசுவின் சிலுவை முன்சென்று கொண்டிருக்கிறது. ராஜரீக எஜமானாகிய கிறிஸ்து எதிரிக்கு விரோதமாய் நடத்தி செல்கிறார். (அவனை நாம் தோற்கடிப்போம்? அவருடைய வார்த்தையினால்) யுத்தத்தில் முன்னே சென்று அவருடைய கொடி பறப்பதை பாருங்கள்! கிறிஸ்தவ வீரர்களே முன் செல்வீர், யுத்தத்துக்கு அணிவகுத்து செல்லும் போல் இயேசுவின் சிலுவை முன்சென்று கொண்டிருக்கிறது. நாம் பிரிந்திருப்பதில்லை நாம் ஒரே சரீரமாயுள்ளோம் நம்பிக்கையிலும் போதகத்திலும் ஒன்றாகவே அன்பிலும் ஒன்றாகவே... 213 தேவனை விசுவாசிக்கும் அனைவரும் 'ஆமென்' என்று சொல்லுங்கள் (சபையோர், ஆமென்' என்கின்றனர் - ஆசி). அல்லேலூயா! நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? (ஆமென் ) நாம் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோம். ஒவ்வொரு சத்துருவும் எங்கே? நமது கால்களின் கீழ் கிறிஸ்துவுக்குள் உயிரோடெழுந்திருக்கிறோம்! சகோதரியே, அது முடிந்து விட்டது. நீ விசுவாசிக்கிறாயா? நீ இப்பொழுது வீட்டுக்குச் செல்லலாம். நீ சுகமாகிவிட்டாய் என்று உணருகிறாயா? அவள் சுகமாகி விட்டதாக உணருவதாக கூறுகின்றாள், சுகமாகப் போகின்றாள். அங்குள்ள உங்களில் எத்தனை பேர் சுகமாகிவிட்டதாக உணருகிறீர்கள்? அவர்கள் ஆர்ப்பரித்தபோது, சுவர்கள் இடிந்து விழுந்தன. (ஆமென்!) அவர்கள் பட்டினத்தைக் கைப்பற்றினர். ஆமென் ஆமென்! நீ அவரை விசுவாசிக்கிறாயா? 214 இன்றிரவு நடக்கப்போகும் ஆராதனையை மறந்து விடாதீர்கள். சகோ. நெவில் இன்றிரவு செய்தியளிப்பார். கர்த்தருக்கு சித்தமானால், அடுத்த ஞாயிறு நான் இங்கிருப்பேன். நாம் நகர்ந்து கட்டிடத்தை விட்டு வெளியே செல்லும்போது, ''கிறிஸ்தவ வீரர்களே முன் செல்வீர்' என்னும் பாடலை பாடிக்கொண்டே செல்வோம். இன்று முதல் அந்த பட்டயத்தை உறையிலே போடாதீர்கள். அதை வெளியே இழுங்கள். நாம் ஜெயங்கொள்வோம். அவர்கள் ஜெயிக்கிறவர்களாகவும் ஜெயிப்பவர்களா கவும் புறப்பட்டார்கள். சரி, மறுபடியும் முதலாம் சரணம் : கிறிஸ்தவ வீரர்களே முன் செல்வீர் யுத்தத்துக்கு அணிவகுத்து செல்லும் போல் இயேசுவின் சிலுவைமுன்சென்று கொண்டிருக்கிறது. ராஜரீக எஜமானாகிய கிறிஸ்து எதிரிக்கு விரோதமாய் நடத்தி செல்கிறார். யுத்தத்தில் முன்னே சென்று அவருடைய கொடி பறப்பதை பாருங்கள்! கிறிஸ்தவ வீரர்களே முன் செல்வீர் யுத்தத்துக்கு அணிவகுத்து செல்லும் போல் இயேசுவின் சிலுவை முன்சென்று கொண்டிருக்கிறது.